104) Sūrat Al-Humazah

Printed format

104) سُورَة الهُمَزَه

Waylun Likulli Humazatin Lumazahin 104-1 குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். وَيْل ٌ لِكُلِّ هُمَزَة ٍ لُمَزَة ٍ
Al-Ladhī Jama`a Mālāan Wa `Addadahu 104-2 (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். الَّذِي جَمَعَ مَالا ً وَعَدَّدَهُ
Yaĥsabu 'Anna Mālahu 'Akhladahu 104-3 நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். يَحْسَبُ أَنَّ مَالَهُ~ُ أَخْلَدَهُ
Kallā Layunbadhanna Fī Al-Ĥuţamahi 104-4 அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். كَلاَّ لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ
Wa Mā 'Adrāka Mā Al-Ĥuţamahu 104-5 ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ
Nāru Allāhi Al-Mūqadahu 104-6 அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். نَارُ اللَّهِ الْمُوقَدَةُ
Allatī Taţţali`u `Alá Al-'Af'idahi 104-7 அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். الَّتِي تَطَّلِعُ عَلَى الأَفْئِدَةِ
'Innahā `Alayhim Mu'uşadahun 104-8 நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். إِنَّهَا عَلَيْهِمْ مُؤصَدَة ٌ
Fī `Amadin Mumaddadahin 104-9 நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக). فِي عَمَد ٍ مُمَدَّدَة ٍ
Next Sūrah