'Alhākumu At-Takāthuru  | 102-1 செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- | أَلْهَاكُمُ التَّكَاثُرُ |
Ĥattá Zurtumu Al-Maqābira  | 102-2 நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. | حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ |
Kallā Sawfa Ta`lamūna  | 102-3 அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். | كَلاَّ سَوْفَ تَعْلَمُونَ |
Thumma Kallā Sawfa Ta`lamūna  | 102-4 பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். | ثُمَّ كَلاَّ سَوْفَ تَعْلَمُونَ |
Kallā Law Ta`lamūna `Ilma Al-Yaqīni  | 102-5 அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). | كَلاَّ لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ |
Latarawunna Al-Jaĥīma  | 102-6 நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். | لَتَرَوُنَّ الْجَحِيمَ |
Thumma Latarawunnahā `Ayna Al-Yaqīni  | 102-7 பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். | ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ |
Thumma Latus'alunna Yawma'idhin `Ani An-Na`īmi  | 102-8 பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். | ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ |