Al-Qāri`ahu  | 101-1 திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி). | الْقَارِعَةُ |
Mā Al-Qāri`ahu  | 101-2 திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன? | مَا الْقَارِعَةُ |
Wa Mā 'Adrāka Mā Al-Qāri`ahu  | 101-3 திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது? | وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ |
Yawma Yakūnu An-Nāsu Kālfarāshi Al-Mabthūthi  | 101-4 அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். | يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ |
Wa Takūnu Al-Jibālu Kāl`ihni Al-Manfūshi  | 101-5 மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும். | وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ |
Fa'ammā Man Thaqulat Mawāzīnuhu  | 101-6 எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ- | فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ |
Fahuwa Fī `Īshatin Rāđiyahin  | 101-7 அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார். | فَهُوَ فِي عِيشَة ٍ رَاضِيَة ٍ |
Wa 'Ammā Man Khaffat Mawāzīnuhu  | 101-8 ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ- | وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ |
Fa'ummuhu Hāwiyahun  | 101-9 அவன் தங்குமிடம் "ஹாவியா" தான். | فَأُمُّه ُُ هَاوِيَة ٌ |
Wa Mā 'Adrāka Mā Hiyah  | 101-10 இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது? | وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ |
Nārun Ĥāmiyahun  | 101-11 அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும். | نَارٌ حَامِيَة ٌ |