96) Sūrat Al-`Alaq

Printed format

96) سُورَة العَلَق

Aqra' Biāsmi Rabbika Al-Ladhī Khalaqa 96-1 (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
Khalaqa Al-'Insāna Min `Alaqin 96-2 'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். خَلَقَ الإِنسَانَ مِنْ عَلَق ٍ
Aqra' Wa Rabbuka Al-'Akramu 96-3 ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. اقْرَأْ وَرَبُّكَ الأَكْرَمُ
Al-Ladhī `Allama Bil-Qalami 96-4 அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
`Allama Al-'Insāna Mā Lam Ya`lam 96-5 மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். عَلَّمَ الإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ
Kallā 'Inna Al-'Insāna Layaţghá 96-6 எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். كَلاَّ إِنَّ الإِنسَانَ لَيَطْغَى
'An Ra'āhu Astaghná 96-7 அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது, أَنْ رَآهُ اسْتَغْنَى
'Inna 'Ilá Rabbika Ar-Ruj 96-8 நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது. إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى
'Ara'ayta Al-Ladhī Yanhá 96-9 தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா? أَرَأَيْتَ الَّذِي يَنْهَى
`Abdāan 'Idhā Şallá 96-10 ஓர் அடியாரை - அவர் தொழும்போது, عَبْدا ً إِذَا صَلَّى
'Ara'ayta 'In Kāna `Alá Al-Hudá 96-11 நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும், أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَى
'Aw 'Amara Bit-Taq 96-12 அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும், أَوْ أَمَرَ بِالتَّقْوَى
'Ara'ayta 'In Kadhdhaba Wa Tawallá 96-13 அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா, أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّى
'Alam Ya`lam Bi'anna Allāha Yará 96-14 நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَى
Kallā La'in Lam Yantahi Lanasfa`ā Bin-Nāşiyahi 96-15 அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம். كَلاَّ لَئِنْ لَمْ يَنْتَه ِِ لَنَسْفَعَا بِالنَّاصِيَةِ
Nāşiyatindhibatin Khāţi'ahin 96-16 தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை, نَاصِيَة ٍ كَاذِبَةٍ خَاطِئَة ٍ
Falyad`u Nādiyah 96-17 ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும். فَلْيَدْعُ نَادِيَه
Sanad`u Az-Zabāniyaha 96-18 நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம். سَنَدْعُ الزَّبَانِيَةَ
Kallā Lā Tuţi`hu Wa Asjudqtarib 96-19 (அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக. كَلاَّ لاَ تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ
Next Sūrah