93) Sūrat Ađ-Đuĥá

Printed format

93) سُورَة الضُّحَى

Wa Ađ-Đuĥá 93-1 முற்பகல் மீது சத்தியமாக وَالضُّحَى
Wa Al-Layli 'Idhā Sajá 93-2 ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக- وَاللَّيْلِ إِذَا سَجَى
Mā Wadda`aka Rabbuka Wa Mā Qalá 93-3 உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை. مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى
Wa Lal'ākhiratu Khayrun Laka Mina Al-'Ū 93-4 மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும். وَلَلآخِرَةُ خَيْر ٌ لَكَ مِنَ الأُولَى
Wa Lasawfa Yu`ţīka Rabbuka Fatarđá 93-5 இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர். وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى
'Alam Yajidka Yatīmāan Fa'ā 93-6 (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா? أَلَمْ يَجِدْكَ يَتِيما ً فَآوَى
Wa Wajadaka Đāllāan Fahadá 93-7 இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான். وَوَجَدَكَ ضَالّا ً فَهَدَى
Wa Wajadaka `Ā'ilāan Fa'aghná 93-8 மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான். وَوَجَدَكَ عَائِلا ً فَأَغْنَى
Fa'ammā Al-Yatīma Falā Taqhar 93-9 எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர். فَأَمَّا الْيَتِيمَ فَلاَ تَقْهَرْ
Wa 'Ammā As-Sā'ila Falā Tanhar 93-10 யாசிப்போரை விரட்டாதீர். وَأَمَّا السَّائِلَ فَلاَ تَنْهَرْ
Wa 'Ammā Bini`mati Rabbika Faĥaddith 93-11 மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக. وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
Next Sūrah