92) Sūrat Al-Layl

Printed format

92) سُورَة اللَيل

Wa Al-Layli 'Idhā Yaghshá 92-1 (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக وَاللَّيْلِ إِذَا يَغْشَى
Wa An-Nahāri 'Idhā Tajallá 92-2 பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக- وَالنَّهَارِ إِذَا تَجَلَّى
Wa Mā Khalaqa Adh-Dhakara Wa Al-'Unthá 92-3 ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக- وَمَا خَلَقَ الذَّكَرَ وَالأُنْثَى
'Inna Sa`yakum Lashattá 92-4 நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும். إِنَّ سَعْيَكُمْ لَشَتَّى
Fa'ammā Man 'A`ţá Wa Attaqá 92-5 எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى
Wa Şaddaqa Bil-Ĥusná 92-6 நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ, وَصَدَّقَ بِالْحُسْنَى
Fasanuyassiruhu Lilyusrá 92-7 அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம். فَسَنُيَسِّرُه ُُ لِلْيُسْرَى
Wa 'Ammā Man Bakhila Wa Astaghná 92-8 ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ, وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى
Wa Kadhdhaba Bil-Ĥusná 92-9 இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ, وَكَذَّبَ بِالْحُسْنَى
Fasanuyassiruhu Lil`usrá 92-10 அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம். فَسَنُيَسِّرُه ُُ لِلْعُسْرَى
Wa Mā Yughnī `Anhu Māluhu 'Idhā Taraddá 92-11 ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது. وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ~ُ إِذَا تَرَدَّى
'Inna `Alaynā Lalhudá 92-12 நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது. إِنَّ عَلَيْنَا لَلْهُدَى
Wa 'Inna Lanā Lal'ākhirata Wa Al-'Ū 92-13 அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும். وَإِنَّ لَنَا لَلآخِرَةَ وَالأُولَى
Fa'andhartukum Nārāan Talažžá 92-14 ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன். فَأَنْذَرْتُكُمْ نَارا ً تَلَظَّى
Lā Yaşlāhā 'Illā Al-'Ash 92-15 மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான். لاَ يَصْلاَهَا إِلاَّ الأَشْقَى
Al-Ladhī Kadhdhaba Wa Tawallá 92-16 எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான். الَّذِي كَذَّبَ وَتَوَلَّى
Wa Sayujannabuhā Al-'Atqá 92-17 ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார். وَسَيُجَنَّبُهَا الأَتْقَى
Al-Ladhī Yu'utī Mālahu Yatazakká 92-18 (அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார். الَّذِي يُؤْتِي مَالَه ُُ يَتَزَكَّى
Wa Mā Li'ĥadin `Indahu Min Ni`matin Tuj 92-19 மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும். وَمَا لِأحَدٍ عِنْدَه ُُ مِنْ نِعْمَة ٍ تُجْزَى
'Illā Abtighā'a Wajhi Rabbihi Al-'A`lá 92-20 மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்). إِلاَّ ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الأَعْلَى
Wa Lasawfa Yarđá 92-21 வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார். وَلَسَوْفَ يَرْضَى
Next Sūrah