91) Sūrat Ash-Shams

Printed format

91) سُورَة الشَّمس

Wa Ash-Shamsi Wa Đuĥāhā 91-1 சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக وَالشَّمْسِ وَضُحَاهَا
Wa Al-Qamari 'Idhā Talāhā 91-2 (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக- وَالْقَمَرِ إِذَا تَلاَهَا
Wa An-Nahāri 'Idhā Jallāhā 91-3 (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக- وَالنَّهَارِ إِذَا جَلاَّهَا
Wa Al-Layli 'Idhā Yaghshāhā 91-4 (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக- وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا
Wa As-Samā'i Wa Mā Banāhā 91-5 வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக- وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا
Wa Al-'Arđi Wa Mā Ţaĥāhā 91-6 பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக- وَالأَرْضِ وَمَا طَحَاهَا
Wa Nafsin Wa Mā Sawwāhā 91-7 ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக- وَنَفْس ٍ وَمَا سَوَّاهَا
Fa'alhamahā Fujūrahā Wa Taqwāhā 91-8 அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான். فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
Qad 'Aflaĥa Man Zakkāhā 91-9 அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا
Wa Qad Khāba Man Dassāhā 91-10 ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான். وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا
Kadhdhabat Thamūdu Biţaghwāhā 91-11 'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர். كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا
'Idhi Anba`atha 'Ashqāhā 91-12 அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது, إِذِ انْبَعَثَ أَشْقَاهَا
Faqāla Lahum Rasūlu Allāhi Nāqata Allāhi Wa Suqyāhā 91-13 அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார். فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا
Fakadhdhabūhu Fa`aqarūhā Fadamdama `Alayhim Rabbuhum Bidhanbihim Fasawwāhā 91-14 ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான். فَكَذَّبُوه ُُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْبِهِمْ فَسَوَّاهَا
Wa Lā Yakhāfu `Uqbāhā 91-15 அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை. وَلاَ يَخَافُ عُقْبَاهَا
Next Sūrah