90) Sūrat Al-Balad

Printed format

90) سُورَة البَلَد

Lā 'Uqsimu Bihadhā Al-Baladi 90-1 இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். لاَ أُقْسِمُ بِهَذَا الْبَلَدِ
Wa 'Anta Ĥillun Bihadhā Al-Baladi 90-2 நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில், وَأَنْتَ حِلّ ٌ بِهَذَا الْبَلَدِ
Wa Wālidin Wa Mā Walada 90-3 பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக, وَوَالِد ٍ وَمَا وَلَدَ
Laqad Khalaq Al-'Insāna Fī Kabadin 90-4 திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம். لَقَدْ خَلَقْنَا الإِنسَانَ فِي كَبَد ٍ
'Ayaĥsabu 'An Lan Yaqdira `Alayhi 'Aĥadun 90-5 'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா? أَيَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ عَلَيْهِ أَحَد ٌ
Yaqūlu 'Ahlaktu Mālāan Lubadāan 90-6 "ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான். يَقُولُ أَهْلَكْتُ مَالا ً لُبَدا ً
'Ayaĥsabu 'An Lam Yarahu 'Aĥadun 90-7 தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா? أَيَحْسَبُ أَنْ لَمْ يَرَهُ~ُ أَحَد ٌ
'Alam Naj`al Lahu `Aynayni 90-8 அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா? أَلَمْ نَجْعَلْ لَه ُُ عَيْنَيْنِ
Wa Lisānāan Wa Shafatayni 90-9 மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? وَلِسَانا ً وَشَفَتَيْنِ
Wa Hadaynāhu An-Najdayni 90-10 அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ
Falā Aqtaĥama Al-`Aqabaha 90-11 ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை. فَلاَ اقْتَحَمَ الْعَقَبَةَ
Wa Mā 'Adrāka Mā Al-`Aqabahu 90-12 (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும். وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ
Fakku Raqabahin 90-13 (அது) ஓர் அடிமையை விடுவித்தல்- فَكُّ رَقَبَة ٍ
'Aw 'Iţ`āmun Fī Yawmin Dhī Masghabahin 90-14 அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும். أَوْ إِطْعَام ٌ فِي يَوْم ٍ ذِي مَسْغَبَة ٍ
Yatīmāan Dhā Maqrabahin 90-15 உறவினனான ஓர் அநாதைக்கோ, يَتِيما ً ذَا مَقْرَبَة ٍ
'Aw Miskīnāan Dhā Matrabahin 90-16 அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்). أَوْ مِسْكِينا ً ذَا مَتْرَبَة ٍ
Thumma Kāna Mina Al-Ladhīna 'Āmanū Wa Tawāşaw Biş-Şabri Wa Tawāşaw Bil-Marĥamahi 90-17 பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும். ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ
'Ūlā'ika 'Aşĥābu Al-Maymanahi 90-18 அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள். أُوْلَائِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ
Wa Al-Ladhīna Kafarū Bi'āyātinā Hum 'Aşĥābu Al-Mash'amahi 90-19 ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர். وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ
`Alayhim Nārun Mu'uşadahun 90-20 அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது. عَلَيْهِمْ نَار ٌ مُؤصَدَة ٌ
Next Sūrah