Wa Al-Fajri  | 89-1 விடியற் காலையின் மீது சத்தியமாக, | وَالْفَجْرِ |
Wa Layālin `Ashrin  | 89-2 பத்து இரவுகளின் மீது சத்தியமாக, | وَلَيَالٍ عَشْر ٍ |
Wa Ash-Shaf`i Wa Al-Watri  | 89-3 இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக, | وَالشَّفْعِ وَالْوَتْرِ |
Wa Al-Layli 'Idhā Yasri  | 89-4 செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக, | وَاللَّيْلِ إِذَا يَسْرِ |
Hal Fī Dhālika Qasamun Lidhī Ĥijrin  | 89-5 இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா? | هَلْ فِي ذَلِكَ قَسَم ٌ لِذِي حِجْر ٍ |
'Alam Tara Kayfa Fa`ala Rabbuka Bi`ādin  | 89-6 உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? | أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَاد ٍ |
'Irama Dhāti Al-`Imādi  | 89-7 (அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள், | إِرَمَ ذَاتِ الْعِمَادِ |
Allatī Lam Yukhlaq Mithluhā Fī Al-Bilādi  | 89-8 அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. | الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلاَدِ |
Wa Thamūda Al-Ladhīna Jābū Aş-Şakhra Bil-Wādi  | 89-9 பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?) | وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ |
Wa Fir`awna Dhī Al-'Awtādi  | 89-10 மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?) | وَفِرْعَوْنَ ذِي الأَوْتَادِ |
Al-Ladhīna Ţaghaw Fī Al-Bilādi  | 89-11 அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர். | الَّذِينَ طَغَوْا فِي الْبِلاَدِ |
Fa'aktharū Fīhā Al-Fasāda  | 89-12 அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர். | فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ |
Faşabba `Alayhim Rabbuka Sawţa `Adhābin  | 89-13 எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான். | فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَاب ٍ |
'Inna Rabbaka Labiālmirşādi  | 89-14 நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான். | إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ |
Fa'ammā Al-'Insānu 'Idhā Mā Abtalāhu Rabbuhu Fa'akramahu Wa Na``amahu Fayaqūlu Rabbī 'Akramani  | 89-15 ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான். | فَأَمَّا الإِنسَانُ إِذَا مَا ابْتَلاَه ُُ رَبُّه ُُ فَأَكْرَمَه ُُ وَنَعَّمَه ُُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ |
Wa 'Ammā 'Idhā Mā Abtalāhu Faqadara `Alayhi Rizqahu Fayaqūlu Rabbī 'Ahānani  | 89-16 எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான். | وَأَمَّا إِذَا مَا ابْتَلاَه ُُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَه ُُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ |
Kallā Bal Lā Tukrimūna Al-Yatīma  | 89-17 அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை. | كَلاَّ بَل لاَ تُكْرِمُونَ الْيَتِيمَ |
Wa Lā Taĥāđđūna `Alá Ţa`āmi Al-Miskīni  | 89-18 ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை. | وَلاَ تَحَاضُّونَ عَلَى طَعَامِ الْمِسْكِينِ |
Wa Ta'kulūna At-Turātha 'Aklāan Lammāan  | 89-19 இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள். | وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلا ً لَمّا ً |
Wa Tuĥibbūna Al-Māla Ĥubbāan Jammāan  | 89-20 இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள். | وَتُحِبُّونَ الْمَالَ حُبّا ً جَمّا ً |
Kallā 'Idhā Dukkati Al-'Arđu Dakkāan Dakkāan  | 89-21 அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, | كَلاَّ إِذَا دُكَّتِ الأَرْضُ دَكّا ً دَكّا ً |
Wa Jā'a Rabbuka Wa Al-Malaku Şaffāan Şaffāan  | 89-22 உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது, | وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفّا ً صَفّا ً |
Wa Jī'a Yawma'idhin Bijahannama Yawma'idhin Yatadhakkaru Al-'Insānu Wa 'Anná Lahu Adh-Dhikrá  | 89-23 அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன். | وَجِيءَ يَوْمَئِذ ٍ بِجَهَنَّمَ يَوْمَئِذ ٍ يَتَذَكَّرُ الإِنْسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى |
Yaqūlu Yā Laytanī Qaddamtu Liĥayātī  | 89-24 "என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான். | يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي |
Fayawma'idhin Lā Yu`adhdhibu `Adhābahu 'Aĥadun  | 89-25 ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். | فَيَوْمَئِذ ٍ لاَ يُعَذِّبُ عَذَابَهُ~ُ أَحَد ٌ |
Wa Lā Yūthiqu Wathāqahu 'Aĥadun  | 89-26 மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான். | وَلاَ يُوثِقُ وَثَاقَهُ~ُ أَحَد ٌ |
Yā 'Ayyatuhā An-Nafsu Al-Muţma'innahu  | 89-27 (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! | يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ |
Arji`ī 'Ilá Rabbiki Rāđiyatan Marđīyahan  | 89-28 நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. | ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَة ً مَرْضِيَّة ً |
Fādkhulī Fī `Ibādī  | 89-29 நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. | فَادْخُلِي فِي عِبَادِي |
Wa Adkhulī Jannatī  | 89-30 மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). | وَادْخُلِي جَنَّتِي |