Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

88) Sūrat Al-Ghāshiyah

Printed format

88)

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters
Hal 'Atāka Ĥadīthu Al-Ghāshiyati 88-1 சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா? ‌‍‍‍ ‍‍‍‍‍
Wujūhun Yawma'idhin Khāshi`atun 88-2 அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். ‍‍‌ ‌
`Āmilatunşibatun 88-3 அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். ‍‍
Taşlá Nāan Ĥāmiyatan 88-4 கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும். ‍‌ ‌‌‌
Tusqá Min `Aynin 'Āniyatin 88-5 கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும். ‍‌ ‍‌‍‍‍‌‌ ‌
Laysa Lahum Ţa`āmun 'Illā Min Đarī`in 88-6 அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. ‍‍‍‍‍‍‌ ‌‌ ‍‌
Lā Yusminu Wa Lā Yughnī Min Jū`in 88-7 அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது. ‌ ‌‌ ‍‍‍‍ ‍‌
Wujūhun Yawma'idhin Nā`imatun 88-8 அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும். ‍‍
Lisa`yihā điyatun 88-9 தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும். ‌ ‌‍
Fī Jannatin `Āliyatin 88-10 உன்னதமான சுவர்க்கச் சோலையில்- ‍‍
Lā Tasma`u Fīhā Lāghiyatan 88-11 அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை. ‌ ‌ ‍‍‍
Fīhā `Aynunriyatun 88-12 அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு. ‌ ‍‍‍‍‌
Fīhā Sururun Marfū`atun 88-13 அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு. ‌ ‌
Wa 'Akwābun Mawđū`atun 88-14 (அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும். ‍‍‌‌ ‍
Wa Namāriqu Maşfūfatun 88-15 மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்- ‍‍
Wa Zabīyu Mabthūthatun 88-16 விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு. ‌‌‍‌ ‍‍‍
'Afalā Yanžurūna 'Ilá Al-'Ibili Kayfa Khuliqat 88-17 (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று- ‌ ‍‌‍‍‍‍‍‍‍‍‌ ‌‌ ‍‍‍‍‍‍‍‍
Wa 'Ilá As-Samā'i Kayfa Rufi`at 88-18 மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும், ‌‌ ‍‍‍‍‌‌ ‍‍‍‍ ‌
Wa 'Ilá Al-Jibāli Kayfa Nuşibat 88-19 இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும், ‌‌ ‍‍‍‍‍ ‍‍‍‍‍
Wa 'Ilá Al-'Arđi Kayfa Suţiĥat 88-20 இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?) ‌‌ ‌‍‍‍‍ ‍‍‍
Fadhakkir 'Innamā 'Anta Mudhakkirun 88-21 ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம். ‌ ‌‍‍‌ ‌‌
Lasta `Alayhim Bimusayţirin 88-22 அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர். ‍‍‍‍‍‍
'Illā Man Tawallá Wa Kafara 88-23 ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ- ‌ ‍‌ ‌ ‌‍
Fayu`adhdhibuhu Allāhu Al-`Adhāba Al-'Akbara 88-24 அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான். ‍‍‌ ‍‍‍‍
'Inna 'Ilaynā 'Īābahum 88-25 நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது. ‌‍‌ ‌
Thumma 'Inna `Alaynā Ĥisābahum 88-26 பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters
Next Sūrah