Sabbiĥi Asma Rabbika Al-'A`lá  | 87-1 (நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக. | سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى |
Al-Ladhī Khalaqa Fasawwá  | 87-2 அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான். | الَّذِي خَلَقَ فَسَوَّى |
Wa Al-Ladhī Qaddara Fahadá  | 87-3 மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான். | وَالَّذِي قَدَّرَ فَهَدَى |
Wa Al-Ladhī 'Akhraja Al-Mar`á  | 87-4 அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான். | وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَى |
Faja`alahu Ghuthā'an 'Aĥwá  | 87-5 பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான். | فَجَعَلَه ُُ غُثَاءً أَحْوَى |
Sanuqri'uka Falā Tansá  | 87-6 (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்- | سَنُقْرِئُكَ فَلاَ تَنسَى |
'Illā Mā Shā'a Allāhu 'Innahu Ya`lamu Al-Jahra Wa Mā Yakhfá  | 87-7 அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான். | إِلاَّ مَا شَاءَ اللَّهُ إِنَّه ُُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى |
Wa Nuyassiruka Lilyusrá  | 87-8 அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம். | وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى |
Fadhakkir 'In Nafa`ati Adh-Dhikrá  | 87-9 ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக. | فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَى |
Sayadhdhakkaru Man Yakhshá  | 87-10 (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான். | سَيَذَّكَّرُ مَنْ يَخْشَى |
Wa Yatajannabuhā Al-'Ashqá  | 87-11 ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான். | وَيَتَجَنَّبُهَا الأَشْقَى |
Al-Ladhī Yaşlá An-Nāra Al-Kubrá  | 87-12 அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான். | الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى |
Thumma Lā Yamūtu Fīhā Wa Lā Yaĥyā  | 87-13 பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான். | ثُمَّ لاَ يَمُوتُ فِيهَا وَلاَ يَحْيَا |
Qad 'Aflaĥa Man Tazakká  | 87-14 தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான். | قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى |
Wa Dhakara Asma Rabbihi Faşallá  | 87-15 மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான். | وَذَكَرَ اسْمَ رَبِّه ِِ فَصَلَّى |
Bal Tu'uthirūna Al-Ĥayāata Ad-Dunyā  | 87-16 எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். | بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا |
Wa Al-'Ākhiratu Khayrun Wa 'Abqá  | 87-17 ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். | وَالآخِرَةُ خَيْر ٌ وَأَبْقَى |
'Inna Hādhā Lafī Aş-Şuĥufi Al-'Ūlá  | 87-18 நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்- | إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الأُولَى |
Şuĥufi 'Ibrāhīma Wa Mūsá  | 87-19 இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது. | صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى |