Wa As-Samā'i Wa Aţ-Ţāriqi  | 86-1 வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக | وَالسَّمَاءِ وَالطَّارِقِ |
Wa Mā 'Adrāka Mā Aţ-Ţāriqu  | 86-2 தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? | وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ |
An-Najmu Ath-Thāqibu  | 86-3 அது இலங்கும் ஒரு நட்சத்திரம். | النَّجْمُ الثَّاقِبُ |
'In Kullu Nafsin Lammā `Alayhā Ĥāfižun  | 86-4 ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை. | إِنْ كُلُّ نَفْس ٍ لَمَّا عَلَيْهَا حَافِظ ٌ |
Falyanžuri Al-'Insānu Mimma Khuliqa  | 86-5 மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும். | فَلْيَنظُرِ الإِنسَانُ مِمَّ خُلِقَ |
Khuliqa Min Mā'in Dāfiqin  | 86-6 குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். | خُلِقَ مِنْ مَاء ٍ دَافِق ٍ |
Yakhruju Min Bayni Aş-Şulbi Wa At-Tarā'ibi  | 86-7 முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. | يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ |
'Innahu `Alá Raj`ihi Laqādirun  | 86-8 இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன். | إِنَّه ُُ عَلَى رَجْعِه ِِ لَقَادِر ٌ |
Yawma Tublá As-Sarā'iru  | 86-9 இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். | يَوْمَ تُبْلَى السَّرَائِرُ |
Famā Lahu Min Qūwatin Wa Lā Nāşirin  | 86-10 மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை. | فَمَا لَه ُُ مِنْ قُوَّة ٍ وَلاَ نَاصِر ٍ |
Wa As-Samā'i Dhāti Ar-Raj`i  | 86-11 (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக, | وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ |
Wa Al-'Arđi Dhāti Aş-Şad`i  | 86-12 (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக, | وَالأَرْضِ ذَاتِ الصَّدْعِ |
'Innahu Laqawlun Faşlun  | 86-13 நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும். | إِنَّه ُُ لَقَوْل ٌ فَصْل ٌ |
Wa Mā Huwa Bil-Hazli  | 86-14 அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல. | وَمَا هُوَ بِالْهَزْلِ |
'Innahum Yakīdūna Kaydāan  | 86-15 நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள். | إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدا ً |
Wa 'Akīdu Kaydāan  | 86-16 நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன். | وَأَكِيدُ كَيْدا ً |
Famahhili Al-Kāfirīna 'Amhilhum Ruwaydāan  | 86-17 எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக. | فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدا ً |