Wa As-Samā'i Dhāti Al-Burūji  | 85-1 கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக, | وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ |
Wa Al-Yawmi Al-Maw`ūdi  | 85-2 இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக, | وَالْيَوْمِ الْمَوْعُودِ |
Wa Shāhidin Wa Mash/hūdin  | 85-3 மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக, | وَشَاهِد ٍ وَمَشْهُود ٍ |
Qutila 'Aşĥābu Al-'Ukhdūdi  | 85-4 (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர். | قُتِلَ أَصْحَابُ الأُخْدُودِ |
An-Nāri Dhāti Al-Waqūdi  | 85-5 விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்). | النَّارِ ذَاتِ الْوَقُودِ |
'Idh Hum `Alayhā Qu`ūdun  | 85-6 அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது, | إِذْ هُمْ عَلَيْهَا قُعُود ٌ |
Wa Hum `Alá Mā Yaf`alūna Bil-Mu'uminīna Shuhūdun  | 85-7 முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர். | وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُود ٌ |
Wa Mā Naqamū Minhum 'Illā 'An Yu'uminū Billāhi Al-`Azīzi Al-Ĥamīdi  | 85-8 (யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை. | وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلاَّ أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ |
Al-Ladhī Lahu Mulku As-Samāwāti Wa Al-'Arđi Wa Allāhu `Alá Kulli Shay'in Shahīdun  | 85-9 வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான். | الَّذِي لَه ُُ مُلْكُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْء ٍ شَهِيد ٌ |
'Inna Al-Ladhīna Fatanū Al-Mu'uminīna Wa Al-Mu'umināti Thumma Lam Yatūbū Falahum `Adhābu Jahannama Wa Lahum `Adhābu Al-Ĥarīqi  | 85-10 நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு. | إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ |
'Inna Al-Ladhīna 'Āmanū Wa `Amilū Aş-Şāliĥāti Lahum Jannātun Tajrī Min Taĥtihā Al-'Anhāru Dhālika Al-Fawzu Al-Kabīru  | 85-11 ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும். | إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّات ٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرُ |
'Inna Baţsha Rabbika Lashadīdun  | 85-12 நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது. | إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيد ٌ |
'Innahu Huwa Yubdi'u Wa Yu`īdu  | 85-13 நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான். | إِنَّه ُُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ |
Wa Huwa Al-Ghafūru Al-Wadūdu  | 85-14 அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். | وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ |
Dhū Al-`Arshi Al-Majīdu  | 85-15 (அவனே) அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன். | ذُو الْعَرْشِ الْمَجِيدُ |
Fa``ālun Limā Yurīdu  | 85-16 தான் விரும்பியவற்றைச் செய்கிறவன். | فَعَّال ٌ لِمَا يُرِيدُ |
Hal 'Atāka Ĥadīthu Al-Junūdi  | 85-17 (நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா, | هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ |
Fir`awna Wa Thamūda  | 85-18 ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும், | فِرْعَوْنَ وَثَمُودَ |
Bali Al-Ladhīna Kafarū Fī Takdhībin  | 85-19 எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர். | بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيب ٍ |
Wa Allāhu Min Warā'ihim Muĥīţun  | 85-20 ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான். | وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ مُحِيط ٌ |
Bal Huwa Qur'ānun Majīdun  | 85-21 (நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும். | بَلْ هُوَ قُرْآن ٌ مَجِيد ٌ |
Fī Lawĥin Maĥfūžin  | 85-22 (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது. | فِي لَوْح ٍ مَحْفُوظ ٍ |