84) Sūrat Al-'Inshiqāq

Printed format

84) سُورَة الإنشِقَاق

'Idhā As-Samā'u Anshaqqat 84-1 வானம் பிளந்துவிடும் போது إِذَا السَّمَاءُ انشَقَّتْ
Wa 'Adhinat Lirabbihā Wa Ĥuqqat 84-2 தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது- وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
Wa 'Idhā Al-'Arđu Muddat 84-3 இன்னும், பூமி விரிக்கப்பட்டு, وَإِذَا الأَرْضُ مُدَّتْ
Wa 'Alqat Mā Fīhā Wa Takhallat 84-4 அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது- وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
Wa 'Adhinat Lirabbihā Wa Ĥuqqat 84-5 தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது. وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
Yā 'Ayyuhā Al-'Insānu 'Innaka Kādiĥun 'Ilá Rabbika Kadĥāan Famulāqīhi 84-6 மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய். يَاأَيُّهَا الإِنسَانُ إِنَّكَ كَادِح ٌ إِلَى رَبِّكَ كَدْحا ً فَمُلاَقِيهِ
Fa'ammā Man 'Ūtiya Kitābahu Biyamīnihi 84-7 ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَه ُُ بِيَمِينِهِ
Fasawfa Yuĥāsabu Ĥisābāan Yasīrāan 84-8 அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான். فَسَوْفَ يُحَاسَبُ حِسَابا ً يَسِيرا ً
Wa Yanqalibu 'Ilá 'Ahlihi Masrūrāan 84-9 இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான். وَيَنقَلِبُ إِلَى أَهْلِه ِِ مَسْرُورا ً
Wa 'Ammā Man 'Ūtiya Kitābahu Warā'a Žahrihi 84-10 ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ- وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَه ُُ وَرَاءَ ظَهْرِهِ
Fasawfa YadThubūrāan 84-11 அவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக- فَسَوْفَ يَدْعُو ثُبُورا ً
Wa Yaşlá Sa`īrāan 84-12 அவன் நரகத்தில் புகுவான். وَيَصْلَى سَعِيرا ً
'Innahu Kāna Fī 'Ahlihi Masrūrāan 84-13 நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான். إِنَّه ُُ كَانَ فِي أَهْلِه ِِ مَسْرُورا ً
'Innahu Žanna 'An Lan Yaĥūra 84-14 நிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான். إِنَّه ُُ ظَنَّ أَنْ لَنْ يَحُورَ
Balá 'Inna Rabbahu Kāna Bihi Başīrāan 84-15 அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான். بَلَى إِنَّ رَبَّه ُُ كَانَ بِه ِِ بَصِيرا ً
Falā 'Uqsimu Bish-Shafaqi 84-16 இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். فَلاَ أُقْسِمُ بِالشَّفَقِ
Wa Al-Layli Wa Mā Wasaqa 84-17 மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும், وَاللَّيْلِ وَمَا وَسَقَ
Wa Al-Qamari 'Idhā Attasaqa 84-18 பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்). وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ
Latarkabunna Ţabaqāan `An Ţabaqin 84-19 நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள். لَتَرْكَبُنَّ طَبَقاً عَنْ طَبَق ٍ
Famā Lahum Lā Yu'uminūna 84-20 எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை. فَمَا لَهُمْ لاَ يُؤْمِنُونَ
Wa 'Idhā Quri'a `Alayhimu Al-Qur'ānu Lā Yasjudūna 84-21 மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை. وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لاَ يَسْجُدُونَ
Bali Al-Ladhīna Kafarū Yukadhdhibūna 84-22 அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர். بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ
Wa Allāhu 'A`lamu Bimā Yū`ūna 84-23 ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான். وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
Fabashshirhum Bi`adhābin 'Alīmin 84-24 (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக. فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيم ٍ
'Illā Al-Ladhīna 'Āmanū Wa `Amilū Aş-Şāliĥāti Lahum 'Ajrun Ghayru Mamnūnin 84-25 எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு. إِلاَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُون ٍ
Next Sūrah