83) Sūrat Al-Muţaffifīn

Printed format

83) سُورَة المُطَفِّفِين

Waylun Lilmuţaffifīna 83-1 அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். وَيْل ٌ لِلْمُطَفِّفِينَ
Al-Ladhīna 'Idhā Aktālū `Alá An-Nāsi Yastawfūna 83-2 அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ
Wa 'Idhā Kālūhum 'Aw Wazanūhum Yukhsirūna 83-3 ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ
'Alā Yažunnu 'Ūla'ika 'Annahum Mabthūna 83-4 நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? أَلاَ يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ
Liyawmin `Ažīmin 83-5 மகத்தான ஒரு நாளுக்காக, لِيَوْمٍ عَظِيم ٍ
Yawma Yaqūmu An-Nāsu Lirabbi Al-`Ālamīna 83-6 அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்- يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ
Kallā 'Inna Kitāba Al-Fujjāri Lafī Sijjīnin 83-7 ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது كَلاَّ إِنَّ كِتَابَ الفُجَّارِ لَفِي سِجِّين ٍ
Wa Mā 'Adrāka Mā Sijjīnun 83-8 'ஸிஜ்ஜீன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? وَمَا أَدْرَاكَ مَا سِجِّين ٌ
Kitābun Marqūmun 83-9 அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும். كِتَاب ٌ مَرْقُوم ٌ
Waylun Yawma'idhin Lilmukadhdhibīna 83-10 பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். وَيْل ٌ يَوْمَئِذ ٍ لِلْمُكَذِّبِينَ
Al-Ladhīna Yukadhdhibūna Biyawmi Ad-Dīni 83-11 அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள். الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ
Wa Mā Yukadhdhibu Bihi 'Illā Kullu Mu`tadin 'Athīmin 83-12 வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார். وَمَا يُكَذِّبُ بِهِ إلاَّ كُلُّ مُعْتَدٍ أَثِيم ٍ
'Idhā Tutlá `Alayhi 'Āyātunā Qāla 'Asāţīru Al-'Awwalīna 83-13 நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், "அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே" என்று கூறுகின்றான். إِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الأَوَّلِينَ
Kallā Bal Rāna `Alá Qulūbihim Mā Kānū Yaksibūna 83-14 அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன. كَلاَّ بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ
Kallā 'Innahum `An Rabbihim Yawma'idhin Lamaĥjūbūna 83-15 (தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள். كَلاَّ إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذ ٍ لَمَحْجُوبُونَ
Thumma 'Innahum Laşālū Al-Jaĥīmi 83-16 பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள். ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا الْجَحِيمِ
Thumma Yuqālu Hādhā Al-Ladhī Kuntum Bihi Tukadhdhibūna 83-17 "எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது" என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும். ثُمَّ يُقَالُ هَذَا الَّذِي كُنتُمْ بِه ِِ تُكَذِّبُونَ
Kallā 'Inna Kitāba Al-'Abrāri Lafī `Illīyīna 83-18 நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் "இல்லிய்யீ"னில் இருக்கிறது. كَلاَّ إِنَّ كِتَابَ الأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ
Wa Mā 'Adrāka Mā `Illīyūna 83-19 "இல்லிய்யுன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ
Kitābun Marqūmun 83-20 (அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும். كِتَاب ٌ مَرْقُوم ٌ
Yash/haduhu Al-Muqarrabūna 83-21 (அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள். يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ
'Inna Al-'Abrāra Lafī Na`īmin 83-22 நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) 'நயீம்' என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். إِنَّ الأَبْرَارَ لَفِي نَعِيم ٍ
`Alá Al-'Arā'iki Yanžurūna 83-23 ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள். عَلَى الأَرَائِكِ يَنظُرُونَ
Ta`rifu Fī Wujūhihim Nađrata An-Na`īmi 83-24 அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர். تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ
Yusqawna Min Raĥīqin Makhtūmin 83-25 (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். يُسْقَوْنَ مِنْ رَحِيق ٍ مَخْتُوم ٍ
Khitāmuhu Miskun Wa Fī Dhālika Falyatanāfasi Al-Mutanāfisūna 83-26 அதன் முத்திரை கஸ்தூரியாகும், எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும். خِتَامُه ُُ مِسْك ٌ وَفِي ذَلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ
Wa Mizājuhu Min Tasnīmin 83-27 இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும். وَمِزَاجُه ُُ مِنْ تَسْنِيم ٍ
`Aynāan Yashrabu Bihā Al-Muqarrabūna 83-28 அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள். عَيْنا ً يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ
'Inna Al-Ladhīna 'Ajramū Kānū Mina Al-Ladhīna 'Āmanū Yađĥakūna 83-29 நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள். إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ
Wa 'Idhā Marrū Bihim Yataghāmazūna 83-30 அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள். وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ
Wa 'Idhā Anqalabū 'Ilá 'Ahlihimu Anqalabū Fakihīna 83-31 இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள். وَإِذَا انقَلَبُوا إِلَى أَهْلِهِمُ انقَلَبُوا فَكِهِينَ
Wa 'Idhā Ra'awhum Qālū 'Inna Hā'uulā' Lađāllūna 83-32 மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், "நிச்சமயாக இவர்களே வழி தவறியவர்கள்" என்றும் கூறுவார்கள். وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَاؤُلاَء لَضَالُّونَ
Wa Mā 'Ursilū `Alayhim Ĥāfižīna 83-33 (முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே! وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ
Fālyawma Al-Ladhīna 'Āmanū Mina Al-Kuffāri Yađĥakūna 83-34 ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்து சிரிப்பார்கள். فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ
`Alá Al-'Arā'iki Yanžurūna 83-35 ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள். عَلَى الأَرَائِكِ يَنظُرُونَ
Hal Thūwiba Al-Kuffāru Mā Kānū Yaf`alūna 83-36 காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.) هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ
Next Sūrah