'Idhā As-Samā'u Anfaţarat  | 82-1 வானம் பிளந்து விடும்போது | إِذَا السَّمَاءُ انفَطَرَتْ |
Wa 'Idhā Al-Kawākibu Antatharat  | 82-2 நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது- | وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ |
Wa 'Idhā Al-Biĥāru Fujjirat  | 82-3 கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, | وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ |
Wa 'Idhā Al-Qubūru Bu`thirat  | 82-4 கப்றுகள் திறக்கப்படும் போது, | وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ |
`Alimat Nafsun Mā Qaddamat Wa 'Akhkharat  | 82-5 ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும். | عَلِمَتْ نَفْس ٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ |
Yā 'Ayyuhā Al-'Insānu Mā Gharraka Birabbika Al-Karīmi  | 82-6 மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது? | يَاأَيُّهَا الإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ |
Al-Ladhī Khalaqaka Fasawwāka Fa`adalaka  | 82-7 அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான். | الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ |
Fī 'Ayyi Şūratin Mā Shā'a Rakkabaka  | 82-8 எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான். | فِي أَيِّ صُورَة ٍ مَا شَاءَ رَكَّبَكَ |
Kallā Bal Tukadhdhibūna Bid-Dīni  | 82-9 இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள். | كَلاَّ بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ |
Wa 'Inna `Alaykum Laĥāfižīna  | 82-10 நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். | وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ |
Kirāmāan Kātibīna  | 82-11 (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். | كِرَاما ً كَاتِبِينَ |
Ya`lamūna Mā Taf`alūna  | 82-12 நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள். | يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ |
'Inna Al-'Abrāra Lafī Na`īmin  | 82-13 நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். | إِنَّ الأَبْرَارَ لَفِي نَعِيم ٍ |
Wa 'Inna Al-Fujjāra Lafī Jaĥīmin  | 82-14 இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள். | وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيم ٍ |
Yaşlawnahā Yawma Ad-Dīni  | 82-15 நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள். | يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ |
Wa Mā Hum `Anhā Bighā'ibīna  | 82-16 மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள். | وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ |
Wa Mā 'Adrāka Mā Yawmu Ad-Dīni  | 82-17 நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது? | وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ |
Thumma Mā 'Adrāka Mā Yawmu Ad-Dīni  | 82-18 பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது? | ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ |
Yawma Lā Tamliku Nafsun Linafsin Shay'āan Wa Al-'Amru Yawma'idhin Lillāhi  | 82-19 அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. | يَوْمَ لاَ تَمْلِكُ نَفْس ٌ لِنَفْس ٍ شَيْئا ً وَالأَمْرُ يَوْمَئِذ ٍ لِلَّهِ |