81) Sūrat At-Takwīr

Printed format

81) سُورَة التَّكوِير

'Idhā Ash-Shamsu Kūwirat 81-1 சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது إِذَا الشَّمْسُ كُوِّرَتْ
Wa 'Idhā An-Nujūmu Ankadarat 81-2 நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது- وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ
Wa 'Idhā Al-Jibālu Suyyirat 81-3 மலைகள் பெயர்க்கப்படும் போது- وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ
Wa 'Idhā Al-`Ishāru `Uţţilat 81-4 சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது- وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ
Wa 'Idhā Al-Wuĥūshu Ĥushirat 81-5 காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது- وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ
Wa 'Idhā Al-Biĥāru Sujjirat 81-6 கடல்கள் தீ மூட்டப்படும்போது- وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ
Wa 'Idhā An-Nufūsu Zūwijat 81-7 உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது- وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ
Wa 'Idhā Al-Maw'ūdatu Su'ilat 81-8 உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ
Bi'ayyi Dhanbin Qutilat 81-9 "எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று- بِأَيِّ ذَنْب ٍ قُتِلَتْ
Wa 'Idhā Aş-Şuĥufu Nushirat 81-10 பட்டோலைகள் விரிக்கப்படும் போது- وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ
Wa 'Idhā As-Samā'u Kushiţat 81-11 வானம் அகற்றப்படும் போது- وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ
Wa 'Idhā Al-Jaĥīmu Su``irat 81-12 நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது- وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ
Wa 'Idhā Al-Jannatu 'Uzlifat 81-13 சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது- وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ
`Alimat Nafsun Mā 'Aĥđarat 81-14 ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும். عَلِمَتْ نَفْس ٌ مَا أَحْضَرَتْ
Falā 'Uqsimu Bil-Khunnasi 81-15 எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக- فَلاَ أُقْسِمُ بِالْخُنَّسِ
Al-Jawāri Al-Kunnasi 81-16 முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்), الْجَوَارِ الْكُنَّسِ
Wa Al-Layli 'Idhā `As`asa 81-17 பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும், وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ
Wa Aş-Şubĥi 'Idhā Tanaffasa 81-18 மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக. وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ
'Innahu Laqawlu Rasūlin Karīmin 81-19 நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும். إِنَّه ُُ لَقَوْلُ رَسُول ٍ كَرِيم ٍ
Dhī Qūwatin `Inda Dhī Al-`Arshi Makīnin 81-20 (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர். ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِين ٍ
Muţā`in Thamma 'Amīnin 81-21 (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர். مُطَاع ٍ ثَمَّ أَمِين ٍ
Wa Mā Şāĥibukum Bimajnūnin 81-22 மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர். وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُون ٍ
Wa Laqad Ra'āhu Bil-'Ufuqi Al-Mubīni 81-23 அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார். وَلَقَدْ رَآهُ بِالأُفُقِ الْمُبِينِ
Wa Mā Huwa `Alá Al-Ghaybi Biđanīnin 81-24 மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர். وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِين ٍ
Wa Mā Huwa Biqawli Shayţānin Rajīmin 81-25 அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல. وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَان ٍ رَجِيم ٍ
Fa'ayna Tadh/habūna 81-26 எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்? فَأَيْنَ تَذْهَبُونَ
'In Huwa 'Illā Dhikrun Lil`ālamīna 81-27 இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். إِنْ هُوَ إِلاَّ ذِكْر ٌ لِلْعَالَمِينَ
Liman Shā'a Minkum 'An Yastaqīma 81-28 உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்). لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ
Wa Mā Tashā'ūna 'Illā 'An Yashā'a Allāhu Rabbu Al-`Ālamīna 81-29 ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள். وَمَا تَشَاءُونَ إِلاَّ أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
Next Sūrah