Sa'ala Sā'ilun Bi`adhābin Wāqi`in  | 70-1 (நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான். | سَأَلَ سَائِل ٌ بِعَذَاب ٍ وَاقِع ٍ |
Lilkāfiryna Laysa Lahu Dāfi`un  | 70-2 காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை. | لِلْكَافِرينَ لَيْسَ لَه ُُ دَافِع ٌ |
Mina Allāhi Dhī Al-Ma`āriji  | 70-3 (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்). | مِنَ اللَّهِ ذِي الْمَعَارِجِ |
Ta`ruju Al-Malā'ikatu Wa Ar-Rūĥu 'Ilayhi Fī Yawmin Kāna Miqdāruhu Khamsīna 'Alfa Sanahin  | 70-4 ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். | تَعْرُجُ الْمَلاَئِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْم ٍ كَانَ مِقْدَارُه ُُ خَمْسِينَ أَلْفَ سَنَة ٍ |
Fāşbir Şabrāan Jamīlāan  | 70-5 எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக. | فَاصْبِرْ صَبْرا ً جَمِيلا ً |
'Innahum Yarawnahu Ba`īdāan  | 70-6 நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர். | إِنَّهُمْ يَرَوْنَه ُُ بَعِيدا ً |
Wa Narāhu Qarībāan  | 70-7 ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம். | وَنَرَاه ُُ قَرِيبا ً |
Yawma Takūnu As-Samā'u Kālmuhli  | 70-8 வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்- | يَوْمَ تَكُونُ السَّمَاءُ كَالْمُهْلِ |
Wa Takūnu Al-Jibālu Kāl`ihni  | 70-9 இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)- | وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ |
Wa Lā Yas'alu Ĥamīmun Ĥamīmāan  | 70-10 (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான். | وَلاَ يَسْأَلُ حَمِيمٌ حَمِيما ً |
Yubaşşarūnahum Yawaddu Al-Mujrimu Law Yaftadī Min `Adhābi Yawmi'idhin Bibanīhi  | 70-11 அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்- | يُبَصَّرُونَهُمْ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذ ٍ بِبَنِيهِ |
Wa Şāĥibatihi Wa 'Akhīhi  | 70-12 தன் மனைவியையும், தன் சகோதரனையும்- | وَصَاحِبَتِه ِِ وَأَخِيهِ |
Wa Faşīlatihi Allatī Tu'uwyhi  | 70-13 அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்- | وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْويهِ |
Wa Man Fī Al-'Arđi Jamī`āan Thumma Yunjīhi  | 70-14 இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்). | وَمَنْ فِي الأَرْضِ جَمِيعا ً ثُمَّ يُنجِيهِ |
Kallā 'Innahā Lažá  | 70-15 அவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும். | كَلاَّ إِنَّهَا لَظَى |
Nazzā`atan Lilshshawá  | 70-16 அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும். | نَزَّاعَة ً لِلشَّوَى |
Tad`ū Man 'Adbara Wa Tawallá  | 70-17 (நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும். | تَدْعُوا مَنْ أَدْبَرَ وَتَوَلَّى |
Wa Jama`a Fa'aw`á  | 70-18 அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்) | وَجَمَعَ فَأَوْعَى |
'Inna Al-'Insāna Khuliqa Halū`āan  | 70-19 நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். | إِنَّ الإِنسَانَ خُلِقَ هَلُوعا ً |
'Idhā Massahu Ash-Sharru Jazū`āan  | 70-20 அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான், | إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعا ً |
Wa 'Idhā Massahu Al-Khayru Manū`āan  | 70-21 ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான். | وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعا ً |
'Illā Al-Muşallīna  | 70-22 தொழுகையாளிகளைத் தவிர- | إِلاَّ الْمُصَلِّينَ |
Al-Ladhīna Hum `Alá Şalātihim Dā'imūna  | 70-23 (அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள். | الَّذِينَ هُمْ عَلَى صَلاَتِهِمْ دَائِمُونَ |
Wa Al-Ladhīna Fī 'Amwālihim Ĥaqqun Ma`lūmun  | 70-24 அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு. | وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقّ ٌ مَعْلُوم ٌ |
Lilssā'ili Wa Al-Maĥrūmi  | 70-25 யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு). | لِلسَّائِلِ وَالْمَحْرُومِ |
Wa Al-Ladhīna Yuşaddiqūna Biyawmi Ad-Dīni  | 70-26 அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள். | وَالَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ الدِّينِ |
Wa Al-Ladhīna Hum Min `Adhābi Rabbihim Mushfiqūna  | 70-27 இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள். | وَالَّذِينَ هُمْ مِنْ عَذَابِ رَبِّهِمْ مُشْفِقُونَ |
'Inna `Adhāba Rabbihim Ghayru Ma'mūnin  | 70-28 நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல. | إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُون ٍ |
Wa Al-Ladhīna Hum Lifurūjihim Ĥāfižūna  | 70-29 அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்- | وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ |
'Illā `Alá 'Azwājihim 'Aw Mā Malakat 'Aymānuhum Fa'innahum Ghayru Malūmīna  | 70-30 தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள். | إِلاَّ عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ |
Famani Abtaghá Warā'a Dhālika Fa'ūlā'ika Humu Al-`Ādūna  | 70-31 எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள். | فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُوْلَائِكَ هُمُ الْعَادُونَ |
Wa Al-Ladhīna Hum Li'mānātihim Wa `Ahdihim Rā`ūna  | 70-32 இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள். | وَالَّذِينَ هُمْ لِأمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ |
Wa Al-Ladhīna Hum Bishahādātihim Qā'imūna  | 70-33 இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள். | وَالَّذِينَ هُمْ بِشَهَادَاتِهِمْ قَائِمُونَ |
Wa Al-Ladhīna Hum `Alá Şalātihim Yuĥāfižūna  | 70-34 எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள். | وَالَّذِينَ هُمْ عَلَى صَلاَتِهِمْ يُحَافِظُونَ |
'Ūlā'ika Fī Jannātin Mukramūna  | 70-35 (ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள். | أُوْلَائِكَ فِي جَنَّات ٍ مُكْرَمُونَ |
Famāli Al-Ladhīna Kafarū Qibalaka Muhţi`īna  | 70-36 நிராகரிப்பவர்களுக்கு என்ன? (கழுத்துகளை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர். | فَمَالِ الَّذِينَ كَفَرُوا قِبَلَكَ مُهْطِعِينَ |
`Ani Al-Yamīni Wa `Ani Ash-Shimāli `Izīna  | 70-37 வலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக. | عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ عِزِينَ |
'Ayaţma`u Kullu Amri'in Minhum 'An Yudkhala Jannata Na`īmin  | 70-38 அவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் - ஜன்னத்துல் நயீமில் - நுழைந்துவிட ஆசைப்படுகிறானா? | أَيَطْمَعُ كُلُّ امْرِئ ٍ مِنْهُمْ أَنْ يُدْخَلَ جَنَّةَ نَعِيم ٍ |
Kallā 'Innā Khalaqnāhum Mimmā Ya`lamūna  | 70-39 அவ்வாறு (ஆகப் போவது) இல்லை. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்றார்களே, அதிலிருந்தே படைத்தோம். | كَلاَّ إِنَّا خَلَقْنَاهُمْ مِمَّا يَعْلَمُونَ |
Falā 'Uqsimu Birabbi Al-Mashāriqi Wa Al-Maghāribi 'Innā Laqādirūna  | 70-40 எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம். | فَلاَ أُقْسِمُ بِرَبِّ الْمَشَارِقِ وَالْمَغَارِبِ إِنَّا لَقَادِرُونَ |
`Alá 'An Nubaddila Khayrāan Minhum Wa Mā Naĥnu Bimasbūqīna  | 70-41 (அவர்களுக்கு பதிலாக) அவர்களை விடச் சிறந்தவர்களை நாம் மாற்றியமைப்பதில் (ஆற்றலுடையோம்) ஏனெனில் நம்மை (எவரும்) மிகைக்க இயலாது. | عَلَى أَنْ نُبَدِّلَ خَيْرا ً مِنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ |
Fadharhum Yakhūđū Wa Yal`abū Ĥattá Yulāqū Yawmahumu Al-Ladhī Yū`adūna  | 70-42 ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக் கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக. | فَذَرْهُمْ يَخُوضُوا وَيَلْعَبُوا حَتَّى يُلاَقُوا يَوْمَهُمُ الَّذِي يُوعَدُونَ |
Yawma Yakhrujūna Mina Al-'Ajdāthi Sirā`āan Ka'annahum 'Ilá Nuşubin Yūfiđūna  | 70-43 நிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) கப்றுகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள். | يَوْمَ يَخْرُجُونَ مِنَ الأَجْدَاثِ سِرَاعا ً كَأَنَّهُمْ إِلَى نُصُب ٍ يُوفِضُونَ |
Khāshi`atan 'Abşāruhum Tarhaquhum Dhillatun Dhālika Al-Yawmu Al-Ladhī Kānū Yū`adūna  | 70-44 அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும், இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும், அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான். | خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّة ٌ ذَلِكَ الْيَوْمُ الَّذِي كَانُوا يُوعَدُونَ |