Al-Ĥāqqahu  | 69-1 நிச்சயமானது. | الْحَاقَّةُ |
Mā Al-Ĥāqqahu  | 69-2 நிச்சயமானது எது? | مَا الْحَاقَّةُ |
Wa Mā 'Adrāka Mā Al-Ĥāqqahu  | 69-3 அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது? | وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ |
Kadhdhabat Thamūdu Wa `Ādun Bil-Qāri`ahi  | 69-4 ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர். | كَذَّبَتْ ثَمُودُ وَعَاد ٌ بِالْقَارِعَةِ |
Fa'ammā Thamūdu Fa'uhlikū Biţ-Ţāghiyahi  | 69-5 எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர். | فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ |
Wa 'Ammā `Ādun Fa'uhlikū Birīĥin Şarşarin `Ātiyahin  | 69-6 இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர். | وَأَمَّا عَاد ٌ فَأُهْلِكُوا بِرِيح ٍ صَرْصَرٍ عَاتِيَة ٍ |
Sakhkharahā `Alayhim Sab`a Layālin Wa Thamāniyata 'Ayyāmin Ĥusūmāan Fatará Al-Qawma Fīhā Şar`á Ka'annahum 'A`jāzu Nakhlin Khāwiyahin  | 69-7 அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர். | سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَال ٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُوما ً فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَة ٍ |
Fahal Tará Lahum Min Bāqiyahin  | 69-8 ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா? | فَهَلْ تَرَى لَهُمْ مِنْ بَاقِيَة ٍ |
Wa Jā'a Fir`awnu Wa Man Qablahu Wa Al-Mu'utafikātu Bil-Khāţi'ahi  | 69-9 அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர். | وَجَاءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَه ُُ وَالْمُؤْتَفِكَاتُ بِالْخَاطِئَةِ |
Fa`aşaw Rasūla Rabbihim Fa'akhadhahum 'Akhdhatan Rābiyahan  | 69-10 அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான். | فَعَصَوْا رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَة ً رَابِيَة ً |
'Innā Lammā Ţaghá Al-Mā'u Ĥamalnākum Fī Al-Jāriyahi  | 69-11 தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம். | إِنَّا لَمَّا طَغَى الْمَاءُ حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَةِ |
Linaj`alahā Lakum Tadhkiratan Wa Ta`iyahā 'Udhunun Wā`iyahun  | 69-12 அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்). | لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَة ً وَتَعِيَهَا أُذُن ٌ وَاعِيَة ٌ |
Fa'idhā Nufikha Fī Aş-Şūri Nafkhatun Wāĥidahun  | 69-13 எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது: | فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَة ٌ وَاحِدَة ٌ |
Wa Ĥumilati Al-'Arđu Wa Al-Jibālu Fadukkatā Dakkatan Wāĥidahan  | 69-14 இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் - | وَحُمِلَتِ الأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّة ً وَاحِدَة ً |
Fayawma'idhin Waqa`ati Al-Wāqi`ahu  | 69-15 அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும். | فَيَوْمَئِذ ٍ وَقَعَتِ الْوَاقِعَةُ |
Wa Anshaqqati As-Samā'u Fahiya Yawma'idhin Wa Ahiyahun  | 69-16 வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும். | وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذ ٍ وَاهِيَة ٌ |
Wa Al-Malaku `Alá 'Arjā'ihā Wa Yaĥmilu `Arsha Rabbika Fawqahum Yawma'idhin Thamāniyahun  | 69-17 இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள். | وَالْمَلَكُ عَلَى أَرْجَائِهَا وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذ ٍ ثَمَانِيَة ٌ |
Yawma'idhin Tu`rađūna Lā Takhfá Minkum Khāfiyahun  | 69-18 (மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது. | يَوْمَئِذ ٍ تُعْرَضُونَ لاَ تَخْفَى مِنْكُمْ خَافِيَة ٌ |
Fa'ammā Man 'Ūtiya Kitābahu Biyamīnihi Fayaqūlu Hā'uum Aqra'ū Kitābī  | 69-19 ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), "இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார். | فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَه ُُ بِيَمِينِه ِِ فَيَقُولُ هَاؤُمْ اقْرَءُوا كِتَابِي |
'Innī Žanantu 'Annī Mulāqin Ĥisābiyah  | 69-20 "நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்." | إِنِّي ظَنَنتُ أَنِّي مُلاَقٍ حِسَابِيَه |
Fahuwa Fī `Īshatin Rāđiyahin  | 69-21 ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் - | فَهُوَ فِي عِيشَة ٍ رَاضِيَة ٍ |
Fī Jannatin `Āliyahin  | 69-22 உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார். | فِي جَنَّةٍ عَالِيَة ٍ |
Quţūfuhā Dāniyahun  | 69-23 அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும். | قُطُوفُهَا دَانِيَة ٌ |
Kulū Wa Ashrabū Hanī'āan Bimā 'Aslaftum Fī Al-'Ayyāmi Al-Khāliyahi  | 69-24 "சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்" (என அவர்களுக்குக் கூறப்படும்). | كُلُوا وَاشْرَبُوا هَنِيئا ً بِمَا أَسْلَفْتُمْ فِي الأَيَّامِ الْخَالِيَةِ |
Wa 'Ammā Man 'Ūtiya Kitābahu Bishimālihi Fayaqūlu Yā Laytanī Lam 'Ūta Kitābīh  | 69-25 ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; "என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! | وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَه ُُ بِشِمَالِه ِِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيهْ |
Wa Lam 'Adri Mā Ĥisābīh  | 69-26 "அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே- | وَلَمْ أَدْرِ مَا حِسَابِيهْ |
Yā Laytahā Kānati Al-Qāđiyaha  | 69-27 "(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? | يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ |
Mā 'Aghná `Annī Mālīh  | 69-28 "என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! | مَا أَغْنَى عَنِّي مَالِيهْ |
Halaka `Annī Sulţānīh  | 69-29 "என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!" (என்று அரற்றுவான்). | هَلَكَ عَنِّي سُلْطَانِيهْ |
Khudhūhu Faghullūhu  | 69-30 "(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்." | خُذُوه ُُ فَغُلُّوهُ |
Thumma Al-Jaĥīma Şallūhu  | 69-31 "பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள். | ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ |
Thumma Fī Silsilatin Dhar`uhā Sab`ūna Dhirā`āan Fāslukūhu  | 69-32 "பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" (என்று உத்தரவிடப்படும்). | ثُمَّ فِي سِلْسِلَة ٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعا ً فَاسْلُكُوهُ |
'Innahu Kāna Lā Yu'uminu Billāhi Al-`Ažīmi  | 69-33 "நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்." | إِنَّه ُُ كَانَ لاَ يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ |
Wa Lā Yaĥuđđu `Alá Ţa`āmi Al-Miskīni  | 69-34 "அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை." | وَلاَ يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ |
Falaysa Lahu Al-Yawma Hāhunā Ĥamīmun  | 69-35 "எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை." | فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيم ٌ |
Wa Lā Ţa`āmun 'Illā Min Ghislīnin  | 69-36 "சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை." | وَلاَ طَعَام ٌ إِلاَّ مِنْ غِسْلِين ٍ |
Lā Ya'kuluhu 'Illā Al-Khāţi'ūna  | 69-37 "குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்." | لاَ يَأْكُلُهُ~ُ إِلاَّ الْخَاطِئُونَ |
Falā 'Uqsimu Bimā Tubşirūna  | 69-38 ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன். | فَلاَ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ |
Wa Mā Lā Tubşirūna  | 69-39 நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.) | وَمَا لاَ تُبْصِرُونَ |
'Innahu Laqawlu Rasūlin Karīmin  | 69-40 நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும். | إِنَّه ُُ لَقَوْلُ رَسُول ٍ كَرِيم ٍ |
Wa Mā Huwa Biqawli Shā`irin Qalīlāan Mā Tu'uminūna  | 69-41 இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள். | وَمَا هُوَ بِقَوْلِ شَاعِر ٍ قَلِيلا ً مَا تُؤْمِنُونَ |
Wa Lā Biqawli Kāhinin Qalīlāan Mā Tadhakkarūna  | 69-42 (இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள். | وَلاَ بِقَوْلِ كَاهِن ٍ قَلِيلا ً مَا تَذَكَّرُونَ |
Tanzīlun Min Rabbi Al-`Ālamīna  | 69-43 அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். | تَنزِيل ٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ |
Wa Law Taqawwala `Alaynā Ba`đa Al-'Aqāwīli  | 69-44 அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் - | وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الأَقَاوِيلِ |
La'akhadhnā Minhu Bil-Yamīni  | 69-45 அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- | لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ |
Thumma Laqaţa`nā Minhu Al-Watīna  | 69-46 பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். | ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ |
Famā Minkum Min 'Aĥadin `Anhu Ĥājizīna  | 69-47 அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை. | فَمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ |
Wa 'Innahu Latadhkiratun Lilmuttaqīna  | 69-48 ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும். | وَإِنَّه ُُ لَتَذْكِرَة ٌ لِلْمُتَّقِينَ |
Wa 'Innā Lana`lamu 'Anna Minkum Mukadhdhibīna  | 69-49 ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். | وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنْكُمْ مُكَذِّبِينَ |
Wa 'Innahu Laĥasratun `Alá Al-Kāfirīna  | 69-50 அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது. | وَإِنَّه ُُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ |
Wa 'Innahu Laĥaqqu Al-Yaqīni  | 69-51 மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும். | وَإِنَّه ُُ لَحَقُّ الْيَقِينِ |
Fasabbiĥ Biāsmi Rabbika Al-`Ažīmi  | 69-52 ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக. | فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ |