Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

68) Sūrat Al-Qalam

Printed format

68) سُورَة القَلَم

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
n Wa ۚ Al-Qalami Wa Mā Yasţurūna 68-1 நூன், எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக! نُون ۚ ‌وَ‌الْ‍‍قَ‍‍لَمِ ‌وَمَا‌ يَسْ‍‍طُ‍‍رُ‌ونَ
Mā 'Anta Bini`mati Rabbika Bimajnūnin 68-2 உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர். مَ‍‍ا‌ ‌أَ‌نْ‍‍تَ بِنِعْمَةِ ‌‍رَبِّكَ بِمَ‍‍جْ‍‍نُونٍ
Wa 'Inna Laka La'ajan Ghayra Mamnūnin 68-3 இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது. وَ‌إِنَّ لَكَ لَأَجْ‍‍ر‌اً‌ غَ‍‍يْ‍رَ‌ مَمْنُونٍ
Wa 'Innaka La`alá Khuluqin `Ažīmin 68-4 மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். وَ‌إِنَّ‍‍كَ لَعَلى‌ خُ‍‍لُ‍‍قٍ عَ‍‍ظِ‍‍يمٍ
Fasatubşiru Wa Yubşirūna 68-5 எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள். فَسَتُ‍‍بْ‍‍‍‍صِ‍‍ر‍ُ‍‌ ‌وَيُ‍‍بْ‍‍‍‍صِ‍‍رُ‌ونَ
Bi'ayyyikumu Al-Maftūnu 68-6 உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை. بِأَيّيِكُمُ ‌الْمَفْتُونُ
'Inna Rabbaka Huwa 'A`lamu Biman Đalla `An Sabīlihi Wa Huwa 'A`lamu Bil-Muhtadīna 68-7 உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான். إِنَّ ‌‍رَبَّكَ هُوَ‌ ‌أَعْلَمُ بِمَ‍‌‍نْ ضَ‍‍لَّ عَ‍‌‍نْ سَبِيلِ‍‍هِ ‌وَهُوَ‌ ‌أَعْلَمُ بِ‍الْمُهْتَدِينَ
Falā Tuţi`i Al-Mukadhdhibīna 68-8 எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர். فَلاَ‌ تُ‍‍طِ‍‍عِ ‌الْمُكَذِّبِينَ
Waddū Law Tud/hinu Fayud/hinūna 68-9 (சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர். وَ‌دُّ‌و‌ا‌ لَوْ‌ تُ‍‍دْهِنُ فَيُ‍‍دْهِنُونَ
Wa Lā Tuţi` Kulla Ĥallāfin Mahīnin 68-10 அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்; وَلاَ‌ تُ‍‍طِ‍‍عْ كُلَّ حَلاَّفٍ‌ مَهِينٍ
Hammāzin Mashshā'in Binamīmin 68-11 (அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். هَ‍‍مّ‍‍َ‍ا‌ز‌ٍ‌ مَشّ‍‍َ‍ا‌ء‌ٍ‌ بِنَمِيمٍ
Mannā`in Lilkhayri Mu`tadin 'Athīmin 68-12 (எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன், வரம்பு மீறிய பெரும் பாவி. مَ‍‍نّ‍‍َ‍اع‍ٍ‌ لِلْ‍‍خَ‍‍يْ‍‍ر‍ِ‍‌ مُعْتَدٍ‌ ‌أَثِيمٍ
`Utullin Ba`da Dhālika Zanīmin 68-13 கடின சித்தமுடையவன், அப்பால் இழி பிறப்புமுடையவன். عُتُلّ ٍ‌ بَعْدَ‌ ‌ذَلِكَ ‌زَنِيمٍ
'An Kāna Dhā Mālin Wa Banīna 68-14 பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால் أَ‌نْ ك‍‍َ‍انَ ‌ذَ‌ا‌ م‍‍َ‍الٍ‌ ‌وَبَنِينَ
'Idhā Tutlá `Alayhi 'Āyātunā Qāla 'Asāţīru Al-'Awwalīna 68-15 நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், "இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவன் கூறுகின்றான். إِ‌ذَ‌ا‌ تُتْلَى‌ عَلَ‍‍يْ‍‍هِ ‌آيَاتُنَا‌ قَ‍‍الَ ‌أَسَاطِ‍‍ي‍‍رُ‌ ‌الأَ‌وَّلِينَ
Sanasimuhu `Alá Al-Khurţūmi 68-16 விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம். سَنَسِمُ‍‍هُ عَلَى‌ ‌الْ‍‍خُ‍‍رْ‍طُ‍‍ومِ
'Innā Balawnāhum Kamā Balawnā 'Aşĥāba Al-Jannati 'Idh 'Aqsamū Layaşrimunnahā Muşbiĥīna 68-17 நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்;டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள். إِنَّ‍‍ا‌ بَلَوْنَاهُمْ كَمَا‌ بَلَوْنَ‍‍ا‌ ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابَ ‌الْجَ‍‍نَّ‍‍ةِ ‌إِ‌ذْ‌ ‌أَ‍قْ‍‍سَمُو‌ا‌ لَيَ‍‍صْ‍‍رِمُ‍‍نَّ‍‍هَا‌ مُ‍‍صْ‍‍بِحِينَ
Wa Lā Yastathnūna 68-18 அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை, وَلاَ‌ يَسْتَثْنُونَ
Faţāfa `Alayhā Ţā'ifun Min Rabbika Wa Hum Nā'imūna 68-19 எனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது. فَ‍طَ‍‍افَ عَلَيْهَا‌ طَ‍‍ائِفٌ‌ مِ‍‌‍نْ ‌‍رَبِّكَ ‌وَهُمْ ن‍‍َ‍ائِمُونَ
Fa'aşbaĥat Kālşşarīmi 68-20 (நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது. فَأَ‍صْ‍‍بَحَتْ كَال‍‍صَّ‍‍رِيمِ
Fatanādaw Muşbiĥīna 68-21 (இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்தனர். فَتَنَا‌دَ‌و‌ا‌ مُ‍‍صْ‍‍بِحِينَ
'Ani Aghdū `Alá Ĥarthikum 'In Kuntum Şārimīna 68-22 "நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள்" (என்று கூறிக் கொண்டனர்). أَنِ ‌اغْ‍‍دُ‌و‌ا‌ عَلَى‌ حَرْثِكُمْ ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ صَ‍‍ا‌رِمِينَ
nţalaqū Wa Hum Yatakhāfatūna 68-23 எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர், فَا‌ن‍‍طَ‍‍لَ‍‍قُ‍‍و‌ا‌ ‌وَهُمْ يَتَ‍‍خَ‍‍افَتُونَ
'An Lā Yadkhulannahā Al-Yawma `Alaykum Miskīnun 68-24 "எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது" (என்று). أَ‌نْ لاَ‌ يَ‍‍دْ‍‍خُ‍‍لَ‍‍نَّ‍‍هَا‌ ‌الْيَ‍‍وْمَ عَلَيْكُمْ مِسْكِينٌ
Waghadaw `Alá Ĥardin Qādirīna 68-25 உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர். وَ‍‍غَ‍‍دَ‌وْ‌ا‌ عَلَى‌ حَرْ‌د‌‌ٍقَ‍‍ا‌دِ‌رِينَ
Falammā Ra'awhā Qālū 'Innā Lađāllūna 68-26 ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது: "நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்" என்று கூறினார்கள். فَلَ‍‍مَّ‍‍ا‌ ‌‍رَ‌أَ‌وْهَا‌ قَ‍‍الُ‍‍و‌ا‌ ‌إِنَّ‍‍ا‌ لَ‍‍ضَ‍‍الُّونَ
Bal Naĥnu Maĥrūmūna 68-27 (பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) "இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்" (என்றும் கூறிக்கொண்டனர்.) بَلْ نَحْنُ مَحْرُ‌ومُونَ
Qāla 'Awsaţuhum 'Alam 'Aqul Lakum Lawlā Tusabbiĥūna 68-28 அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் "நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?" என்று கூறினார். قَ‍‍الَ ‌أَ‌وْسَ‍‍طُ‍‍هُمْ ‌أَلَمْ ‌أَ‍قُ‍‍لْ لَكُمْ لَوْلاَ‌ تُسَبِّحُونَ
Qālū Subĥāna Rabbinā 'Innā Kunnā Žālimīna 68-29 "எங்கள் இறைவன் தூயவன், நாம் தாம் நிச்சமயாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்" என்றும் கூறினர். قَ‍‍الُو‌ا‌ سُ‍‍بْ‍‍ح‍‍َ‍انَ ‌‍رَبِّنَ‍‍ا‌ ‌إِنَّ‍‍ا‌ كُ‍‍نَّ‍‍ا‌ ظَ‍‍الِمِينَ
Fa'aqbala Ba`đuhum `Alá Ba`đin Yatalāwamūna 68-30 பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோகினர். فَأَ‍قْ‍‍بَلَ بَعْ‍‍ضُ‍‍هُمْ عَلَى‌ بَعْ‍‍ضٍ‌ يَتَلاَ‌وَمُونَ
Qālū Yā Waylanā 'Innā Kunnā Ţāghīna 68-31 அவர்கள் கூறினார்கள்: "எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம். قَ‍‍الُو‌ا‌ يَا‌ ‌وَيْلَنَ‍‍ا‌ ‌إِنَّ‍‍ا‌ كُ‍‍نَّ‍‍ا‌ طَ‍‍اغِ‍‍ينَ
`Asá Rabbunā 'An Yubdilanā Khayan Minhā 'Innā 'Ilá Rabbinā ghibūna 68-32 "எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும், நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்" (எனக் கூறினர்). عَسَى‌ ‌‍رَبُّنَ‍‍ا‌ ‌أَ‌نْ يُ‍‍بْ‍‍دِلَنَا‌ خَ‍‍يْر‌ا‌ ً‌ مِ‍‌‍نْ‍‍هَ‍‍ا‌ ‌إِنَّ‍‍ا‌ ‌إِلَى‌ ‌‍رَبِّنَا‌ ‌‍رَ‌اغِ‍‍بُونَ
Kadhālika Al-`Adhābu ۖ Wa La`adhābu Al-'Ākhirati 'Akbaru ۚ Law Kānū Ya`lamūna 68-33 இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது, அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்). كَذَلِكَ ‌الْعَذ‍َ‍‌ابُ ۖ ‌وَلَعَذ‍َ‍‌ابُ ‌الآ‍‍خِ‍رَةِ ‌أَكْبَرُ‌ ۚ لَوْ‌ كَانُو‌ا‌ يَعْلَمُونَ
'Inna Lilmuttaqīna `Inda Rabbihim Jannāti An-Na`īmi 68-34 நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு. إِنَّ لِلْمُتَّ‍‍قِ‍‍ي‍‍نَ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌‍رَبِّهِمْ جَ‍‍نّ‍‍َ‍اتِ ‌ال‍‍نَّ‍‍عِيمِ
'Afanaj`alu Al-Muslimīna Kālmujrimīna 68-35 நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா? أَفَنَ‍‍جْ‍‍عَلُ ‌الْمُسْلِم‍‍ِ‍ي‍‍نَ كَالْمُ‍‍جْ‍‍رِمِينَ
Mā Lakum Kayfa Taĥkumūna 68-36 (சத்தியத்தை நிராகரிப்போரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இரு சாராரும் சமமென) எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்? مَا‌ لَكُمْ كَ‍‍يْ‍‍فَ تَحْكُمُونَ
'Am Lakum Kitābun Fīhi Tadrusūna 68-37 அல்லது உங்களிடம் ஏதாவது வேத(ஆதார)ம் இருக்கின்றதா? அதில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா? أَمْ لَكُمْ كِت‍‍َ‍اب‌‍ٌ‌ ف‍‍ِ‍ي‍‍هِ تَ‍‍دْ‌رُسُونَ
'Inna Lakum Fīhi Lamā Takhayyarūna 68-38 நிச்சயமாக நீங்கள் உங்களுக்காகத் தெரிந்தெடுத்துக் கொள்வதுவே (சரி) என்று அதில் இருக்கின்றதா, إِنَّ لَكُمْ ف‍‍ِ‍ي‍‍هِ لَمَا‌ تَ‍‍خَ‍‍يَّرُ‌ونَ
'Am Lakum 'Aymānun `Alaynā Bālighatun 'Ilá Yawmi Al-Qiyāmati ۙ 'Inna Lakum Lamā Taĥkumūna 68-39 அல்லது, நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் கியாம நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம் உறுதி பிரமாணங்கள் உங்களிடம் இருக்கின்றனவா? أَمْ لَكُمْ ‌أَيْم‍‍َ‍انٌ عَلَيْنَا‌ بَالِ‍‍غَ‍‍ة‌‍ٌ‌ ‌إِلَى‌ يَ‍‍وْمِ ‌الْ‍‍قِ‍‍يَامَةِ ۙ ‌إِنَّ لَكُمْ لَمَا‌ تَحْكُمُونَ
Salhum 'Ayyuhum Bidhālika Za`īmun 68-40 (அவ்வாறெனில்) அவர்களில் எவர் அதற்குப் பொறுப்பேற்பவர் என்பதை (நபியே!) நீர் அவர்களிடம் கேட்பீராக. سَلْهُم ‌أَيُّهُمْ بِذَلِكَ ‌زَعِيمٌ
'Am Lahum Shurakā'u Falya'tū Bishurakā'ihim 'In Kānū Şādiqīna 68-41 அல்லது (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணை வைக்கும் கூட்டாளிகள் தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும். أَمْ لَهُمْ شُ‍رَك‍‍َ‍ا‌ءُ‌ فَلْيَأْتُو‌ا‌ بِشُ‍رَك‍‍َ‍ائِهِمْ ‌إِ‌نْ كَانُو‌اصَ‍‍ا‌دِقِ‍‍ينَ
Yawma Yukshafu `An Sāqin Wa Yud`awna 'Ilá As-Sujūdi Falā Yastaţī`ūna 68-42 கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள். يَ‍‍وْمَ يُكْشَفُ عَ‍‌‍نْ س‍‍َ‍اقٍ‌ ‌وَيُ‍‍دْعَ‍‍وْنَ ‌إِلَى‌ ‌ال‍‍سُّج‍‍ُ‍و‌دِ‌ فَلاَ‌ يَسْتَ‍‍طِ‍‍يعُونَ
Khāshi`atan 'Abşāruhum Tarhaquhum Dhillatun ۖ Wa Qad Kānū Yud`awna 'Ilá As-Sujūdi Wa Hum Sālimūna 68-43 அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும்நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.) خَ‍‍اشِعَةً ‌أَبْ‍‍‍‍صَ‍‍ا‌رُهُمْ تَرْهَ‍‍قُ‍‍هُمْ ‌ذِلَّةٌۖ ‌وَ‍قَ‍‍دْ‌ كَانُو‌ا‌ يُ‍‍دْعَ‍‍وْنَ ‌إِلَى‌ ‌ال‍‍سُّج‍‍ُ‍و‌دِ‌ ‌وَهُمْ سَالِمُونَ
Fadharnī Wa Man Yukadhdhibu Bihadhā Al-Ĥadīthi ۖ Sanastadrijuhum Min Ĥaythu Lā Ya`lamūna 68-44 எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம். فَذَ‌رْنِي ‌وَمَ‍‌‍نْ يُكَذِّبُ بِهَذَ‌ا‌ ‌الْحَد‍ِ‍ي‍‍ثِ ۖ سَنَسْتَ‍‍دْ‌رِجُهُمْ مِ‍‌‍نْ حَ‍‍يْ‍‍ثُ لاَ‌ يَعْلَمُونَ
Wa 'Umlī Lahum ۚ 'Inna Kaydī Matīnun 68-45 அன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன், நிச்சயமாக என் திட்டமே உறுதியானது. وَ‌أُمْلِي لَهُمْ ۚ ‌إِنَّ كَيْدِي مَتِينٌ
'Am Tas'aluhum 'Ajan Fahum Min Maghramin Muthqalūna 68-46 நீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா? أَمْ تَسْأَلُهُمْ ‌أَجْ‍‍ر‌ا‌‌ ً‌ فَهُمْ مِ‍‌‍نْ مَ‍‍غْ‍رَمٍ‌ مُثْ‍‍قَ‍‍لُونَ
'Am `Indahumu Al-Ghaybu Fahum Yaktubūna 68-47 அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா? أَمْ عِ‍‌‍نْ‍‍دَهُمُ ‌الْ‍‍غَ‍‍يْ‍‍بُ فَهُمْ يَكْتُبُونَ
şbir Liĥukmi Rabbika Wa Lā Takun Kaşāĥibi Al-Ĥūti 'Idh Nādá Wa Huwa Makžūmun 68-48 ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக, மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம், அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது: فَاصْ‍‍بِ‍‍رْ‌ لِحُكْمِ ‌‍رَبِّكَ ‌وَلاَ‌ تَكُ‍‌‍نْ كَ‍‍صَ‍‍احِبِ ‌الْح‍‍ُ‍وتِ ‌إِ‌ذْ‌ نَا‌دَ‌ى‌ ‌وَهُوَ‌ مَكْ‍‍ظُ‍‍ومٌ
Lawlā 'An Tadārakahu Ni`matun Min Rabbihi Lanubidha Bil-`Arā'i Wa Huwa Madhmūmun 68-49 அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார். لَوْلاَ‌ ‌أَ‌نْ تَدَ‌ا‌‍رَكَ‍‍هُ نِعْمَةٌ‌ مِ‍‌‍نْ ‌‍رَبِّ‍‍هِ لَنُبِذَ‌ بِ‍الْعَر‍َ‍‌ا‌ءِ‌ ‌وَهُوَ‌ مَذْمُومٌ
jtabāhu Rabbuhu Faja`alahu Mina Aş-Şāliĥīna 68-50 ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான். فَاجْ‍‍تَب‍‍َ‍اهُ ‌‍رَبُّ‍‍هُ فَجَعَلَ‍‍هُ مِنَ ‌ال‍‍صَّ‍‍الِحِينَ
Wa 'In Yakādu Al-Ladhīna Kafarū Layuzliqūnaka Bi'abşārihim Lammā Sami`ū Adh-Dhikra Wa Yaqūlūna 'Innahu Lamajnūnun 68-51 மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; "நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்" என்றும் கூறுகின்றனர். وَ‌إِ‌نْ يَك‍‍َ‍ا‌دُ‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ لَيُزْلِ‍‍قُ‍‍ونَكَ بِأَبْ‍‍‍‍صَ‍‍ا‌رِهِمْ لَ‍‍مَّ‍‍ا‌ سَمِعُو‌ا‌ال‍‍ذِّكْ‍رَ‌ ‌وَيَ‍‍قُ‍‍ول‍‍ُ‍ونَ ‌إِنَّ‍‍هُ لَمَ‍‍جْ‍‍نُونٌ
Wa Mā Huwa 'Illā Dhikrun Lil`ālamīna 68-52 ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசயேன்றி வேறில்லை. وَمَا‌ هُوَ‌ ‌إِلاَّ‌ ‌ذِكْر‌ٌ‌ لِلْعَالَمِينَ
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah