Aqtarabati As-Sā`atu Wa Anshaqqa Al-Qamaru  | 54-1 (இறுதி) நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்து விட்டது. | اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ |
Wa 'In Yaraw 'Āyatan Yu`riđū Wa Yaqūlū Siĥrun Mustamirrun  | 54-2 எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், "இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்" என்றும் கூறுகிறார்கள். | وَإِنْ يَرَوْا آيَة ً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْر ٌ مُسْتَمِرّ ٌ |
Wa Kadhdhabū Wa Attaba`ū 'Ahwā'ahum Wa Kullu 'Amrin Mustaqirrun  | 54-3 அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர், மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும். | وَكَذَّبُوا وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ وَكُلُّ أَمْر ٍ مُسْتَقِرّ ٌ |
Wa Laqad Jā'ahum Mina Al-'Anbā'i Mā Fīhi Muzdajarun  | 54-4 அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன. | وَلَقَدْ جَاءَهُمْ مِنَ الأَنْبَاءِ مَا فِيه ِِ مُزْدَجَر ٌ |
Ĥikmatun Bālighatun Famā Tughni An-Nudhuru  | 54-5 நிறைவான ஞானம் உடையவை - ஆனால் (அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை. | حِكْمَة ٌ بَالِغَة ٌ فَمَا تُغْنِ النُّذُرُ |
Fatawalla `Anhum Yawma Yad`u Ad-Dā`i 'Ilá Shay'in Nukurin  | 54-6 ஆகையால் (நபியே!) அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும், (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்; | فَتَوَلَّ عَنْهُمْ يَوْمَ يَدْعُ الدَّاعِ إِلَى شَيْء ٍ نُكُر ٍ |
Khushsha`āan 'Abşāruhum Yakhrujūna Mina Al-'Ajdāthi Ka'annahum Jarādun Muntashirun  | 54-7 (தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக் கிளிகளைப் போல் வெளியேறுவார்கள். | خُشَّعاً أَبْصَارُهُمْ يَخْرُجُونَ مِنَ الأَجْدَاثِ كَأَنَّهُمْ جَرَاد ٌ مُنتَشِر ٌ |
Muhţi`īna 'Ilá Ad-Dā`i Yaqūlu Al-Kāfirūna Hādhā Yawmun `Asirun  | 54-8 அழைப்பவரிடம் விரைந்து வருவார்கள், "இது மிகவும் கஷ்டமான நாள்" என்றும் அக்காஃபிர்கள் கூறுவார்கள். | مُهْطِعِينَ إِلَى الدَّاعِ يَقُولُ الْكَافِرُونَ هَذَا يَوْمٌ عَسِر ٌ |
Kadhdhabat Qablahum Qawmu Nūĥin Fakadhdhabū `Abdanā Wa Qālū Majnūnun Wa Azdujira  | 54-9 இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர், ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) 'பைத்தியக்காரர்' என்று கூறினர், அவர் விரட்டவும் பட்டார். | كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوح ٍ فَكَذَّبُوا عَبْدَنَا وَقَالُوا مَجْنُون ٌ وَازْدُجِرَ |
Fada`ā Rabbahu 'Annī Maghlūbun Fāntaşir  | 54-10 அப்போது அவர், "நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன், ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!" என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார். | فَدَعَا رَبَّهُ~ُ أَنِّي مَغْلُوب ٌ فَانْتَصِرْ |
Fafataĥnā 'Abwāba As-Samā'i Bimā'in Munhamirin  | 54-11 ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம். | فَفَتَحْنَا أَبْوَابَ السَّمَاءِ بِمَاء ٍ مُنْهَمِر ٍ |
Wa Fajjarnā Al-'Arđa `Uyūnāan Fāltaqá Al-Mā'u `Alá 'Amrin Qad Qudira  | 54-12 மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம், இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது. | وَفَجَّرْنَا الأَرْضَ عُيُونا ً فَالْتَقَى الْمَاءُ عَلَى أَمْر ٍ قَدْ قُدِرَ |
Wa Ĥamalnāhu `Alá Dhāti 'Alwāĥin Wa Dusurin  | 54-13 அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம். | وَحَمَلْنَاه ُُ عَلَى ذَاتِ أَلْوَاح ٍ وَدُسُر ٍ |
Tajrī Bi'a`yuninā Jazā'an Liman Kāna Kufira  | 54-14 எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதற்காக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது. | تَجْرِي بِأَعْيُنِنَا جَزَاء ً لِمَنْ كَانَ كُفِرَ |
Wa Laqad Taraknāhā 'Āyatan Fahal Min Muddakirin  | 54-15 நிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? | وَلَقَدْ تَرَكْنَاهَا آيَة ً فَهَلْ مِنْ مُدَّكِر ٍ |
Fakayfa Kāna `Adhābī Wa Nudhuri  | 54-16 ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?) | فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ |
Wa Laqad Yassarnā Al-Qur'āna Lildhdhikri Fahal Min Muddakirin  | 54-17 நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? | وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِر ٍ |
Kadhdhabat `Ādun Fakayfa Kāna `Adhābī Wa Nudhuri  | 54-18 'ஆது' (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர், அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?) | كَذَّبَتْ عَاد ٌ فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ |
'Innā 'Arsalnā `Alayhim Rīĥāan Şarşarāan Fī Yawmi Naĥsin Mustamirrin  | 54-19 நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம். | إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحا ً صَرْصَرا ً فِي يَوْمِ نَحْس ٍ مُسْتَمِرّ ٍ |
Tanzi`u An-Nāsa Ka'annahum 'A`jāzu Nakhlin Munqa`irin  | 54-20 நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்துறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது. | تَنزِعُ النَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْل ٍ مُنْقَعِر ٍ |
Fakayfa Kāna `Adhābī Wa Nudhuri  | 54-21 ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?) | فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ |
Wa Laqad Yassarnā Al-Qur'āna Lildhdhikri Fahal Min Muddakirin  | 54-22 நிச்சமயாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? | وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِر ٍ |
Kadhdhabat Thamūdu Bin-Nudhuri  | 54-23 ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது. | كَذَّبَتْ ثَمُودُ بِالنُّذُرِ |
Faqālū 'Abasharāan Minnā Wāĥidāan Nattabi`uhu 'Innā 'Idhāan Lafī Đalālin Wa Su`urin  | 54-24 "நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்" என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர். | فَقَالُوا أَبَشَرا ً مِنَّا وَاحِدا ً نَتَّبِعُهُ~ُ إِنَّا إِذا ً لَفِي ضَلاَل ٍ وَسُعُر ٍ |
'A'uulqiya Adh-Dhikru `Alayhi Min Bayninā Bal Huwa Kadhdhābun 'Ashirun  | 54-25 "நம்மிடையே இருந்து இவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும், அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்" (என்றும் அவர்கள் கூறினர்). | أَؤُلْقِيَ الذِّكْرُ عَلَيْهِ مِنْ بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ أَشِر ٌ |
Saya`lamūna Ghadāan Mani Al-Kadhdhābu Al-'Ashiru  | 54-26 "ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்?" என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள். | سَيَعْلَمُونَ غَدا ً مَنِ الْكَذَّابُ الأَشِرُ |
'Innā Mursilū An-Nāqati Fitnatan Lahum Fārtaqibhum Wa Aşţabir  | 54-27 அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம், ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக! | إِنَّا مُرْسِلُو النَّاقَةِ فِتْنَة ً لَهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ |
Wa Nabbi'hum 'Anna Al-Mā'a Qismatun Baynahum Kullu Shirbin Muĥtađarun  | 54-28 (அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது, "ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்" என்று அவர்களுக்கு அறிவித்து விடும். | وَنَبِّئْهُمْ أَنَّ الْمَاءَ قِسْمَة ٌ بَيْنَهُمْ كُلُّ شِرْب ٍ مُحْتَضَر ٌ |
Fanādaw Şāĥibahum Fata`āţá Fa`aqara  | 54-29 ஆனால் (அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர், அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்) தரித்து விட்டான். | فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطَى فَعَقَرَ |
Fakayfa Kāna `Adhābī Wa Nudhuri  | 54-30 என் (கட்டளையினால் பின்னர் அம் மக்களுக்கு) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?) | فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ |
'Innā 'Arsalnā `Alayhim Şayĥatan Wāĥidatan Fakānū Kahashīmi Al-Muĥtažiri  | 54-31 நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர். | إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَة ً وَاحِدَة ً فَكَانُوا كَهَشِيمِ الْمُحْتَظِرِ |
Wa Laqad Yassarnā Al-Qur'āna Lildhdhikri Fahal Min Muddakirin  | 54-32 நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? | وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِر ٍ |
Kadhdhabat Qawmu Lūţin Bin-Nudhuri  | 54-33 லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர். | كَذَّبَتْ قَوْمُ لُوط ٍ بِالنُّذُرِ |
'Innā 'Arsalnā `Alayhim Ĥāşibāan 'Illā 'Āla Lūţin Najjaynāhum Bisaĥarin  | 54-34 லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம், விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம். | إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبا ً إِلاَّ آلَ لُوط ٍ نَجَّيْنَاهُمْ بِسَحَر ٍ |
Ni`matan Min `Indinā Kadhālika Najzī Man Shakara  | 54-35 நம்மிடமிருந்துள்ள அருள் கொடையால் (இப்படிக் காப்பாற்றினோம்) இவ்வாறே நாம் நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கிறோம். | نِعْمَة ً مِنْ عِنْدِنَا كَذَلِكَ نَجْزِي مَنْ شَكَرَ |
Wa Laqad 'Andharahum Baţshatanā Fatamāraw Bin-Nudhuri  | 54-36 திட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்காலாயினர். | وَلَقَدْ أَنذَرَهُمْ بَطْشَتَنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ |
Wa Laqad Rāwadūhu `An Đayfihi Faţamasnā 'A`yunahum Fadhūqū `Adhābī Wa Nudhuri  | 54-37 அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள், ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். "என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்" (என்றும் கூறினோம்). | وَلَقَدْ رَاوَدُوه ُُ عَنْ ضَيْفِه ِِ فَطَمَسْنَا أَعْيُنَهُمْ فَذُوقُوا عَذَابِي وَنُذُرِ |
Wa Laqad Şabbaĥahum Bukratan `Adhābun Mustaqirrun  | 54-38 எனவே, அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது. | وَلَقَدْ صَبَّحَهُمْ بُكْرَةً عَذَاب ٌ مُسْتَقِرّ ٌ |
Fadhūqū `Adhābī Wa Nudhuri  | 54-39 "ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறினோம்). | فَذُوقُوا عَذَابِي وَنُذُرِ |
Wa Laqad Yassarnā Al-Qur'āna Lildhdhikri Fahal Min Muddakirin  | 54-40 நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? | وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِر ٍ |
Wa Laqad Jā'a 'Āla Fir`awna An-Nudhuru  | 54-41 ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தன. | وَلَقَدْ جَاءَ آلَ فِرْعَوْنَ النُّذُرُ |
Kadhdhabū Bi'āyātinā Kullihā Fa'akhadhnāhum 'Akhdha `Azīzin Muqtadirin  | 54-42 ஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர், அப்போது, சக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம். | كَذَّبُوا بِآيَاتِنَا كُلِّهَا فَأَخَذْنَاهُمْ أَخْذَ عَزِيز ٍ مُقْتَدِر ٍ |
'Akuffārukum Khayrun Min 'Ūla'ikum 'Am Lakum Barā'atun Fī Az-Zuburi  | 54-43 (சென்று போன) அவர்களை விட உங்களிலுள்ள காஃபிர்கள் மேலானவர்களா? அல்லது, உங்களுக்கு (வேதனையிலிருந்து) விலக்கு இருப்பதாக வேத ஆதாரம் உண்டா? | أَكُفَّارُكُمْ خَيْر ٌ مِنْ أُوْلَئِكُمْ أَمْ لَكُمْ بَرَاءَة ٌ فِي الزُّبُرِ |
'Am Yaqūlūna Naĥnu Jamī`un Muntaşirun  | 54-44 அல்லது (நபியே!) "நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்" என்று அவர்கள் கூறுகின்றார்களா? | أَمْ يَقُولُونَ نَحْنُ جَمِيع ٌ مُنْتَصِر ٌ |
Sayuhzamu Al-Jam`u Wa Yuwallūna Ad-Dubura  | 54-45 அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். | سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ |
Bali As-Sā`atu Maw`iduhum Wa As-Sā`atu 'Ad/há Wa 'Amarru  | 54-46 அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும், மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையனதும் மிக்க கசப்பானதுமாகும். | بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ |
'Inna Al-Mujrimīna Fī Đalālin Wa Su`urin  | 54-47 நிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும் இருக்கின்றனர். | إِنَّ الْمُجْرِمِينَ فِي ضَلاَل ٍ وَسُعُر ٍ |
Yawma Yusĥabūna Fī An-Nāri `Alá Wujūhihim Dhūqū Massa Saqara  | 54-48 அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், "நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று அவர்களுக்கு கூறப்படும்). | يَوْمَ يُسْحَبُونَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ |
'Innā Kulla Shay'in Khalaqnāhu Biqadarin  | 54-49 நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம். | إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاه ُُ بِقَدَر ٍ |
Wa Mā 'Amrunā 'Illā Wāĥidatun Kalamĥin Bil-Başari  | 54-50 நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை. | وَمَا أَمْرُنَا إِلاَّ وَاحِدَة ٌ كَلَمْح ٍ بِالْبَصَرِ |
Wa Laqad 'Ahlaknā 'Ashyā`akum Fahal Min Muddakirin  | 54-51 (நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? | وَلَقَدْ أَهْلَكْنَا أَشْيَاعَكُمْ فَهَلْ مِنْ مُدَّكِر ٍ |
Wa Kullu Shay'in Fa`alūhu Fī Az-Zuburi  | 54-52 அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது. | وَكُلُّ شَيْء ٍ فَعَلُوه ُُ فِي الزُّبُرِ |
Wa Kullu Şaghīrin Wa Kabīrin Mustaţarun  | 54-53 சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும். | وَكُلُّ صَغِير ٍ وَكَبِير ٍ مُسْتَطَر ٌ |
'Inna Al-Muttaqīna Fī Jannātin Wa Naharin  | 54-54 நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள் | إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّات ٍ وَنَهَر ٍ |
Fī Maq`adi Şidqin `Inda Malīkin Muqtadirin  | 54-55 உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள். | فِي مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيك ٍ مُقْتَدِر ٍ |