Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

52) Sūrat Aţ-Ţūr

Printed format

52)

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters
Wa Aţ-Ţūri 52-1 தூர் (மலை) மீது சத்தியமாக! ‌‍‍‍
Wa Kitābin Masţūrin 52-2 விரித்து வைக்கப்பட்ட, ஏட்டில் எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக! ‍‍‌ ‍‍‍‍‌
Raqqin Manshūrin 52-2 விரித்து வைக்கப்பட்ட, ஏட்டில் எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக! ‌‍‌ ‍‌‍‍‍‌
Wa Al-Bayti Al-Ma`mūri 52-4 பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக! ‌‍‍‍
Wa As-Saqfi Al-Marfū`i 52-5 உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக! ‌‍‍‍
Wa Al-Baĥri Al-Masjūri 52-6 பொங்கும் கடலின் மீது சத்தியமாக! ‌‍‍‍‌
'Inna `Adhāba Rabbika Lawāqi`un 52-7 நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும். ‍‍‌ ‌‍‍‍‍‍
Mā Lahu Min Dāfi`in 52-8 அதனைத் தடுப்பவர் எவருமில்லை. ‌ ‍ ‍‌ ‌‌
Yawma Tamūru As-Samā'u Mawan 52-9 வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில், ‍‍‌‌ ‍‍‍‍‌‌ ‌‌
Wa Tasīru Al-Jibālu Sayan 52-10 இன்னும், மலைகள் தூள் துளாகி விடும் போது, ‍‍‍‍‌ ‍‍
Fawaylun Yawma'idhin Lilmukadhdhibīna 52-11 (சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.
Al-Ladhīna HumKhawđin Yal`abūna 52-12 எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ, ‍‍‍
Yawma Yuda``ūna 'Ilá Nāri Jahannama Da``āan 52-13 அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர். ‍‍ ‌‌ ‍‍‍‍‍‌ ‍‍‍‍ ‌
Hadhihi An-Nāru Allatī Kuntum Bihā Tukadhdhibūna 52-14 அந்நாளில்; (அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான். ‍‍‍‍‌‌ ‍‌‍‍‍ ‌
'Afasiĥrun Hādhā 'Am 'Antum Lā Tubşirūna 52-15 "இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா? ‌ ‌ ‌‌‍ ‌ ‍‍‍‍‍‍‍‍‌
Aşlawhā Fāşbirū 'Aw Lā Taşbirū Sawā'un `Alaykum ۖ 'Innamā Tujzawna Mā Kuntum Ta`malūna 52-16 "நீங்கள் அதில் நுழையுங்கள், பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள், (இரண்டும்) உங்களுக்குச் சமமே, நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்த வற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்." ‍‌ ‌ ‌‌‌ ‌ ‍‍‍‍‌‍‍‌‌‌ ۖ‍‌ ‍‍‍ ‌ ‍‌‍‍
'Inna Al-Muttaqīna Fī Jannātin Wa Na`īmin 52-17 நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள். ‍‍‍‍‍ ‍‍‍‍‍‌ ‌
Fākihīna Bimā 'Ātāhum Rabbuhum Wa Waqāhum Rabbuhum `Adhāba Al-Jaĥīmi 52-18 அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான். ‍‍‍‍ ‍‌ ‌ ‌‍ ‌‌‍‍ ‌‍ ‍‍‌
Kulū Wa Ashrabū Hanī'āan Bimā Kuntum Ta`malūna 52-19 (அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்." ‌ ‌‌ ‍‍‍‍‌ ‌ ‍‌‍‍
Muttaki'īna `Alá Sururin Maşfūfatin ۖ Wa Zawwajnāhum Biĥūrin `Īnin 52-20 அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம். ‍‍‍‍ ‌ ‌‌ ‍‍‍ۖ ‌‌‌‍ ‍‍‍‌‌
Wa Al-Ladhīna 'Āmanū Wa Attaba`at/hum Dhurrīyatuhum Bi'īmānin 'Alĥaqnā Bihim Dhurrīyatahum Wa Mā 'Alatnāhum Min `Amalihim Min Shay'in ۚ Kullu Amri'in Bimā Kasaba Rahīnun 52-21 எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியனரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான். ‍‍‍‍ ‌‌ ‌ ‌‌ ‍‍‍ ‌‍‍‍‍‌ ‌‌ ‌‍‌ ‌ ‍‌ ‍‌ۚ ‌ ‌ ‌‍
Wa 'Amdadnāhum Bifākihatin Wa Laĥmin Mimmā Yashtahūna 52-22 இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம். ‌ ‌‌ ‍‍‍‍‌
Yatanāza`ūna Fīhā Ka'sāan Lā Laghwun Fīhā Wa Lā Ta'thīmun 52-23 (அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர், ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை. ‌‍‍‍‌ ‌ ‍‍‍‍‌‌ ‌ ‌‌
Wa Yaţūfu `Alayhim Ghilmānun Lahum Ka'annahum Lu'ulu'uun Maknūnun 52-24 அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள், அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்). ‍‍‍‍
Wa 'Aqbala Ba`đuhum `Alá Ba`đin Yatasā'alūna 52-25 அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள். ‍‍‍ ‍‍‍‍ ‌ ‍‌ ‍‍‍
Qālū 'Innā Kunnā Qablu Fī 'Ahlinā Mushfiqīna 52-26 "இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம். ‍‍‌ ‌‍‌ ‍‍‍‍‌ ‍‍‍ ‍‍‍ ‌‌ ‍‍‍
Famanna Allāhu `Alaynā Wa Waqānā `Adhāba As-Samūmi 52-27 "ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான். ‍ ‌ ‌‌‍‍‌ ‍‍‌
'Innā Kunnā Min Qablu Nad`ūhu ۖ 'Innahu Huwa Al-Barru Ar-Raĥīmu 52-28 "நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன், பெருங்கிருபையுடையவன்." ‍‌ ‍‍‍‍‌ ‍‌ ‍‍‍ ‍‍‍ ۖ
Fadhakkir Famā 'Anta Bini`mati Rabbika Bikāhinin Wa Lā Majnūnin 52-29 எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர், பைத்தியக்காரருமல்லர். ‌ ‍‌ ‌‌‍ ‌‍ ‌ ‌‌ ‍‍‍
'Am Yaqūlūna Shā`irun Natarabbaşu Bihi Rayba Al-Manūni 52-30 அல்லது: அவர்கள் (உம்மைப் பற்றி, "அவர்) புலவர், அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்து இருக்கிறோம்" என்று கூறுகிறார்களா? ‍‍‍‍‍‍ ‌ ‍ ‌‍
Qul Tarabbaşū Fa'innī Ma`akum Mina Al-Mutarabbişīna 52-31 "நீங்களும் வழி பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன்" என்று (நபியே!) நீர் கூறும். ‍ ‍‍‍‍‍
'Am Ta'muruhum 'Aĥlāmuhum Bihadhā ۚ 'Am Hum Qawmun Ţāghūna 52-32 அல்லது, அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா? ۚ
'Am Yaqūlūna Taqawwalahu ۚ Bal Lā Yu'uminūna 52-33 அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள். ‍‍‍‍‍‍‍‍‍‍ ۚ‍‍
Falya'tū Biĥadīthin Mithlihi~ 'In Kānū Şādiqīna 52-34 ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும். ‍‍‍‌ ‌‌ ‍‌
'Am Khuliqū Min Ghayri Shay'in 'Am Humu Al-Khāliqūna 52-35 அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? ‍‍‍‍‌ ‍‌ ‍‍‍‍‌ ‍‌ ‌ ‍‍‍‍‍‍
'Am Khalaqū As-Samāwāti Wa Al-'Arđa ۚ Bal Lā Yūqinūna 52-36 அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள். ‍‍‍‍‍‌‍‍‌‌‍ ۚ‍‍
'Am `Indahum Khazā'inu Rabbika 'Am Humu Al-Musayţirūna 52-37 அல்லது, அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா? ‍‌‍‍‍‍‌ ‌‍‍‍‍‌
'Am Lahum Sullamun Yastami`ūna Fīhi ۖ Falya'ti Mustami`uhum Bisulţānin Mubīnin 52-38 அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும். ‌ ‍‍‍‍‍‍ۖ‍‍
'Am Lahu Al-Banātu Wa Lakumu Al-Banūna 52-39 அல்லது, அவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண் மக்களுமா? ‍‍
'Am Tas'aluhum 'Ajan Fahum Min Maghramin Muthqalūna 52-40 அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா, ‍‌‌‌ ‍‌‍‍‌ ‍‍‍
'Am `Indahumu Al-Ghaybu Fahum Yaktubūna 52-41 அல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா, ‍‌‍‍‍‍‍‍
'Am Yurīdūna Kaydāan ۖ Fa-Al-Ladhīna Kafarū Humu Al-Makīdūna 52-42 அல்லது, அவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள். ‍‍‌ ‌‌ۖ ‍‍‍‍ ‌
'Am Lahum 'Ilahun Ghayru Allāhi ۚ Subĥāna Allāhi `Ammā Yushrikūna 52-43 அல்லது, அவர்களுக்கு அல்லாஹ் அல்லாமல் (வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன். ‍‍‍‌ ۚ‍‍‍‍‍‍ ‍ ‍‍‍‍‌ ‍
Wa 'In Yaraw Kisfāan Mina As-Samā'i Sāqiţāan Yaqūlū Saĥābun Markūmun 52-44 வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள். ‌‌‌‌‌ ‍‍‍‍‌‌ ‍‍‌ ‍‍‍‌ ‍‍‍
Fadharhum Ĥattá Yulāqū Yawmahumu Al-Ladhī Fīhi Yuş`aqūna 52-45 ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக. ‌ ‌ ‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍
Yawma Lā Yughnī `Anhum Kayduhum Shay'āan Wa Lā Hum Yunşarūna 52-46 அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். ‌ ‍‍‍‍ ‍‌‍‍‍ ‍‍‍‌ ‌‌ ‍‌‍‍‍‍‍‌
Wa 'Inna Lilladhīna Žalamū `Adhābāan Dūna Dhālika Wa Lakinna 'Aktharahum Lā Ya`lamūna 52-47 அன்றியும், அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள். ‍‍‍‌ ‌‌‌ ‌‍‍‌ ‌ ‌‍ ‌‍
Wa Aşbir Liĥukmi Rabbika Fa'innaka Bi'a`yuninā ۖ Wa Sabbiĥ Biĥamdi Rabbika Ĥīna Taqūmu 52-48 எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திறுப்பீராக, நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக, ‍‍‌ ‌‍ ‍ ‌ ۖ ‌ ‌ ‌‍‍‍‍‍ ‍‍‍
Wa Mina Al-Layli Fasabbiĥhu Wa 'Idbāra An-Nujūmi 52-49 இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக! ‍‍‍‍‍ ‌‌‍‍‌‍‍‍
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters
Next Sūrah