Wa Adh-Dhāriyāti Dharwan  | 51-1 (புழுதிகளை எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக! | وَالذَّارِيَاتِ ذَرْوا ً |
Fālĥāmilāti Wiqrāan  | 51-2 (மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும், | فَالْحَامِلاَتِ وِقْرا ً |
Fāljāriyāti Yusrāan  | 51-3 பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும், | فَالْجَارِيَاتِ يُسْرا ً |
Fālmuqassimāti 'Amrāan  | 51-4 (பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக | فَالْمُقَسِّمَاتِ أَمْرا ً |
'Innamā Tū`adūna Laşādiqun  | 51-5 நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும். | إِنَّمَا تُوعَدُونَ لَصَادِق ٌ |
Wa 'Inna Ad-Dīna Lawāqi`un  | 51-6 அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும். | وَإِنَّ الدِّينَ لَوَاقِع ٌ |
Wa As-Samā'i Dhāti Al-Ĥubuki  | 51-7 அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக! | وَالسَّمَاءِ ذَاتِ الْحُبُكِ |
'Innakum Lafī Qawlin Mukhtalifin  | 51-8 நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள். | إِنَّكُمْ لَفِي قَوْل ٍ مُخْتَلِف ٍ |
Yu'ufaku `Anhu Man 'Ufika  | 51-9 அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான். | يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ |
Qutila Al-Kharrāşūna  | 51-10 பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள். | قُتِلَ الْخَرَّاصُونَ |
Al-Ladhīna Hum Fī Ghamratin Sāhūna  | 51-11 வர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர். | الَّذِينَ هُمْ فِي غَمْرَة ٍ سَاهُونَ |
Yas'alūna 'Ayyāna Yawmu Ad-Dīni  | 51-12 (நன்மை, தீமைக்குக்) "கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?" என்று அவர்கள் கேட்கின்றனர். | يَسْأَلُونَ أَيَّانَ يَوْمُ الدِّينِ |
Yawma Hum `Alá An-Nāri Yuftanūna  | 51-13 நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்). | يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُونَ |
Dhūqū Fitnatakum Hādhā Al-Ladhī Kuntum Bihi Tasta`jilūna  | 51-14 "உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்," எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான். | ذُوقُوا فِتْنَتَكُمْ هَذَا الَّذِي كُنتُمْ بِه ِِ تَسْتَعْجِلُونَ |
'Inna Al-Muttaqīna Fī Jannātin Wa `Uyūnin  | 51-15 நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். | إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّات ٍ وَعُيُون ٍ |
'Ākhidhīna Mā 'Ātāhum Rabbuhum 'Innahum Kānū Qabla Dhālika Muĥsinīna  | 51-16 அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர். | آخِذِينَ مَا آتَاهُمْ رَبُّهُمْ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَلِكَ مُحْسِنِينَ |
Kānū Qalīlāan Mina Al-Layli Mā Yahja`ūna  | 51-17 அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள். | كَانُوا قَلِيلا ً مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ |
Wa Bil-'Asĥāri Hum Yastaghfirūna  | 51-18 அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். | وَبِالأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ |
Wa Fī 'Amwālihim Ĥaqqun Lilssā'ili Wa Al-Maĥrūmi  | 51-19 அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு. | وَفِي أَمْوَالِهِمْ حَقّ ٌ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ |
Wa Fī Al-'Arđi 'Āyātun Lilmūqinīna  | 51-20 உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. | وَفِي الأَرْضِ آيَات ٌ لِلْمُوقِنِينَ |
Wa Fī 'Anfusikum 'Afalā Tubşirūna  | 51-21 உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா? | وَفِي أَنفُسِكُمْ أَفَلاَ تُبْصِرُونَ |
Wa Fī As-Samā'i Rizqukum Wa Mā Tū`adūna  | 51-22 அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன. | وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ |
Fawarabbi As-Samā'i Wa Al-'Arđi 'Innahu Laĥaqqun Mithla Mā 'Annakum Tanţiqūna  | 51-23 ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக் கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும். | فَوَرَبِّ السَّمَاءِ وَالأَرْضِ إِنَّه ُُ لَحَقّ ٌ مِثْلَ مَا أَنَّكُمْ تَنطِقُونَ |
Hal 'Atāka Ĥadīthu Đayfi 'Ibrāhīma Al-Mukramīna  | 51-24 இப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? | هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ |
'Idh Dakhalū `Alayhi Faqālū Salāmāan Qāla Salāmun Qawmun Munkarūna  | 51-25 அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி; "உங்களுக்கு) "ஸலாம்' என்று கூறினார்கள்; (அதற்கவர்), "(உங்களுக்கு) "ஸலாம்" என்று கூறினார். "இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே" என்று எண்ணிக் கொண்டார்). | إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلاَما ً قَالَ سَلاَم ٌ قَوْم ٌ مُنكَرُونَ |
Farāgha 'Ilá 'Ahlihi Fajā'a Bi`ijlin Samīnin  | 51-26 எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார். | فَرَاغَ إِلَى أَهْلِه ِِ فَجَاءَ بِعِجْل ٍ سَمِين ٍ |
Faqarrabahu 'Ilayhim Qāla 'Alā Ta'kulūna  | 51-27 அதை அவர்கள் முன் வைத்து, "நீங்கள் புசிக்க மாட்டீர்களா?" என்று கூறினார். | فَقَرَّبَهُ~ُ إِلَيْهِمْ قَالَ أَلاَ تَأْكُلُونَ |
Fa'awjasa Minhum Khīfatan Qālū Lā Takhaf Wa Bashsharūhu Bighulāmin `Alīmin  | 51-28 (அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்படடது, "(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!" எனக் கூறினார்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர். | فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَة ً قَالُوا لاَ تَخَفْ وَبَشَّرُوه ُُ بِغُلاَمٍ عَلِيم ٍ |
Fa'aqbalati Amra'atuhu Fī Şarratin Faşakkat Wajhahā Wa Qālat `Ajūzun `Aqīmun  | 51-29 பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு "நான் மலட்டுக் கிழவியாயிற்றே!" என்று கூறினார். | فَأَقْبَلَتِ امْرَأَتُه ُُ فِي صَرَّة ٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيم ٌ |
Qālū Kadhāliki Qāla Rabbuki 'Innahu Huwa Al-Ĥakīmu Al-`Alīmu  | 51-30 (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று;) "இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்" என்று கூறினார்கள். | قَالُوا كَذَلِكِ قَالَ رَبُّكِ إِنَّه ُُ هُوَ الْحَكِيمُ الْعَلِيمُ |
Qāla Famā Khaţbukum 'Ayyuhā Al-Mursalūna  | 51-31 (பின்னர் இப்றாஹீம்;) "தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?" என்று வினவினார். | قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَ |
Qālū 'Innā 'Ursilnā 'Ilá Qawmin Mujrimīna  | 51-32 "குற்றவாளிகளான ஒரு சமூகத்தினர் பால் நாங்கள் நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம்" என்று அவர்கள் கூறினார்கள். | قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَى قَوْم ٍ مُجْرِمِينَ |
Linursila `Alayhim Ĥijāratan Min Ţīnin  | 51-33 "அவர்கள் மீது (சுட்ட) களிமண் கற்களை எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)- | لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَة ً مِنْ طِين ٍ |
Musawwamatan `Inda Rabbika Lilmusrifīna  | 51-34 "வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை." | مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ |
Fa'akhrajnā Man Kāna Fīhā Mina Al-Mu'uminīna  | 51-35 ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம். | فَأَخْرَجْنَا مَنْ كَانَ فِيهَا مِنَ الْمُؤْمِنِينَ |
Famā Wajadnā Fīhā Ghayra Baytin Mina Al-Muslimīna  | 51-36 எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை. | فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْت ٍ مِنَ الْمُسْلِمِينَ |
Wa Taraknā Fīhā 'Āyatan Lilladhīna Yakhāfūna Al-`Adhāba Al-'Alīma  | 51-37 நோவினை தரும் வேதனையை அஞசுகிறார்களே அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சிளை விட்டு வைத்தோம். | وَتَرَكْنَا فِيهَا آيَة ً لِلَّذِينَ يَخَافُونَ الْعَذَابَ الأَلِيمَ |
Wa Fī Mūsá 'Idh 'Arsalnāhu 'Ilá Fir`awna Bisulţānin Mubīnin  | 51-38 மலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர் அத்தாட்சி இருக்கிறது நாம் அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிய போது | وَفِي مُوسَى إِذْ أَرْسَلْنَاهُ~ُ إِلَى فِرْعَوْنَ بِسُلْطَان ٍ مُبِين ٍ |
Fatawallá Biruknihi Wa Qāla Sāĥirun 'Aw Majnūnun  | 51-39 அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து; "இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்" என்று கூறினான். | فَتَوَلَّى بِرُكْنِه ِِ وَقَالَ سَاحِرٌ أَوْ مَجْنُون ٌ |
Fa'akhadhnāhu Wa Junūdahu Fanabadhnāhum Fī Al-Yammi Wa Huwa Mulīmun  | 51-40 ஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும் பிடித்து அவர்களைக் கடலில் எறிந்தோம்; அவன் நிந்தனைக்கும் ஆளாகி விட்டான். | فَأَخَذْنَاه ُُ وَجُنُودَه ُُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ وَهُوَ مُلِيم ٌ |
Wa Fī `Ādin 'Idh 'Arsalnā `Alayhimu Ar-Rīĥa Al-`Aqīma  | 51-41 இன்னும், 'ஆது' (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக் காற்றை அனுப்பியN போது | وَفِي عَاد ٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيحَ الْعَقِيمَ |
Mā Tadharu Min Shay'in 'Atat `Alayhi 'Illā Ja`alat/hu Kālrramīmi  | 51-42 (க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை. | مَا تَذَرُ مِنْ شَيْءٍ أَتَتْ عَلَيْهِ إِلاَّ جَعَلَتْهُ كَالرَّمِيمِ |
Wa Fī Thamūda 'Idh Qīla Lahum Tamatta`ū Ĥattá Ĥīnin  | 51-43 மேலும் 'ஸமூது' (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); "ஒரு காலம் சுகம் அனுபவியுங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது | وَفِي ثَمُودَ إِذْ قِيلَ لَهُمْ تَمَتَّعُوا حَتَّى حِين ٍ |
Fa`ataw `An 'Amri Rabbihim Fa'akhadhat/humu Aş-Şā`iqatu Wa Hum Yanžurūna  | 51-44 அவர்கள் தங்கள் இறைவனுடைய கடடளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. | فَعَتَوْا عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ وَهُمْ يَنظُرُونَ |
Famā Astaţā`ū Min Qiyāmin Wa Mā Kānū Muntaşirīna  | 51-45 ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்தி பெற்றார்களில்லை (எத்தகைய) உதவியும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர். | فَمَا اسْتَطَاعُوا مِنْ قِيَام ٍ وَمَا كَانُوا مُنتَصِرِينَ |
Wa Qawma Nūĥin Min Qablu 'Innahum Kānū Qawmāan Fāsiqīna  | 51-46 அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள். | وَقَوْمَ نُوح ٍ مِنْ قَبْلُ إِنَّهُمْ كَانُوا قَوْما ً فَاسِقِينَ |
Wa As-Samā'a Banaynāhā Bi'ayydin Wa 'Innā Lamūsi`ūna  | 51-47 மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம். | وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْيد ٍ وَإِنَّا لَمُوسِعُونَ |
Wa Al-'Arđa Farashnāhā Fani`ma Al-Māhidūna  | 51-48 இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம். | وَالأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ |
Wa Min Kulli Shay'in Khalaqnā Zawjayni La`allakum Tadhakkarūna  | 51-49 நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். | وَمِنْ كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ |
Fafirrū 'Ilá Allāhi 'Innī Lakum Minhu Nadhīrun Mubīnun  | 51-50 ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக). | فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِير ٌ مُبِين ٌ |
Wa Lā Taj`alū Ma`a Allāhi 'Ilahāan 'Ākhara 'Innī Lakum Minhu Nadhīrun Mubīnun  | 51-51 மேலும், அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே - இருக்கின்றேன் (என்றும் கூறும்). | وَلاَ تَجْعَلُوا مَعَ اللَّهِ إِلَها ً آخَرَ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِير ٌ مُبِين ٌ |
Kadhālika Mā 'Atá Al-Ladhīna Min Qablihim Min Rasūlin 'Illā Qālū Sāĥirun 'Aw Majnūnun  | 51-52 இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை. | كَذَلِكَ مَا أَتَى الَّذِينَ مِنْ قَبْلِهِمْ مِنْ رَسُول ٍ إِلاَّ قَالُوا سَاحِرٌ أَوْ مَجْنُون ٌ |
'Atawāşaw Bihi Bal Hum Qawmun Ţāghūna  | 51-53 இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர். | أَتَوَاصَوْا بِه ِِ بَلْ هُمْ قَوْم ٌ طَاغُونَ |
Fatawalla `Anhum Famā 'Anta Bimalūmin  | 51-54 ஆகவே (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர். | فَتَوَلَّ عَنْهُمْ فَمَا أَنْتَ بِمَلُوم ٍ |
Wa Dhakkir Fa'inna Adh-Dhikrá Tanfa`u Al-Mu'uminīna  | 51-55 மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும். | وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنفَعُ الْمُؤْمِنِينَ |
Wa Mā Khalaqtu Al-Jinna Wa Al-'Insa 'Illā Liya`budūni  | 51-56 இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. | وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالإِنسَ إِلاَّ لِيَعْبُدُونِ |
Mā 'Urīdu Minhum Min Rizqin Wa Mā 'Urīdu 'An Yuţ`imūni  | 51-57 அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை. | مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْق ٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونِ |
'Inna Allāha Huwa Ar-Razzāqu Dhū Al-Qūwati Al-Matīnu  | 51-58 நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன். | إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ |
Fa'inna Lilladhīna Žalamū Dhanūbāan Mithla Dhanūbi 'Aşĥābihim Falā Yasta`jilūni  | 51-59 எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம். | فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبا ً مِثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ فَلاَ يَسْتَعْجِلُونِ |
Fawaylun Lilladhīna Kafarū Min Yawmihimu Al-Ladhī Yū`adūna  | 51-60 ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான். | فَوَيْل ٌ لِلَّذِينَ كَفَرُوا مِنْ يَوْمِهِمُ الَّذِي يُوعَدُونَ |