Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

79) Sūrat An-Nāzi`āt

Printed format

79) سُورَة النَّازِعَات

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Wa An-Nāzi`āti Gharqāan 79-1 (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக- وَ‌ال‍‍نَّ‍‍ا‌زِع‍‍َ‍اتِ غَ‍‍رْ‍ق‍‍اً
Wa An-Nāshiţāti Nashţāan 79-2 (நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- وَ‌ال‍‍نَّ‍‍اشِ‍‍طَ‍‍اتِ نَشْ‍‍ط‍‍اً
Wa As-Sābiĥāti Sabĥāan 79-3 வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- وَ‌السَّابِح‍‍َ‍اتِ سَ‍‍بْ‍‍حاً
Fālssābiqāti Sabqāan 79-4 முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- فَالسَّابِ‍‍قَ‍‍اتِ سَ‍‍بْ‍‍‍‍ق‍‍اً
Fālmudabbirāti 'Aman 79-5 ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- فَالْمُدَبِّرَ‍‌اتِ ‌أَمْر‌اً
Yawma Tarjufu Ar-jifatu 79-6 பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்; يَ‍‍وْمَ تَرْجُفُ ‌ال‍رَّ‌اجِفَةُ
Tatba`uhā Ar-difatu 79-7 அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும். تَتْبَعُهَا‌ ‌ال‍رَّ‌ا‌دِفَةُ
Qulūbun Yawma'idhin Wājifatun 79-8 அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும். قُ‍‍ل‍‍ُ‍وبٌ‌ يَوْمَئِذ‌ٍ‌ ‌وَ‌اجِفَةٌ
'AbşāruKhāshi`atun 79-9 அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும். أَبْ‍‍‍‍صَ‍‍ا‌رُهَا‌ خَ‍‍اشِعَةٌ
Yaqūlūna 'A'innā Lamardūdūna Fī Al-Ĥāfirati 79-10 "நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள். يَ‍قُ‍‍ول‍‍ُ‍ونَ ‌أَئِ‍‍نَّ‍‍ا‌ لَمَرْ‌دُ‌و‌د‍ُ‍‌ونَ فِي ‌الْحَافِ‍رَةِ
'A'idhā Kunnā `Ižāmāan Nakhiratan 79-11 "மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?" أَئِذَ‌ا‌ كُ‍‍نَّ‍‍ا‌ عِ‍‍ظَ‍‍اما‌ ً‌ نَ‍‍خِ‍رَةً
Qālū Tilka 'Idhāan Karratun Khāsiratun 79-12 "அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள். قَ‍‍الُو‌ا‌ تِلْكَ ‌إِ‌ذ‌ا‌‌ ً‌ كَ‍رَّةٌ خَ‍‍اسِ‍رَةٌ
Fa'innamā Hiya Zajratun Wāĥidatun 79-13 ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்- فَإِنَّ‍‍مَا‌ هِيَ ‌زَجْ‍‍‍رَةٌ‌ ‌وَ‌احِ‍‍د‍َ‍ةٌ
Fa'idhā Hum Bis-Sāhirati 79-14 அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள். فَإِ‌ذَ‌ا‌ هُمْ بِ‍ال‍‍سَّاهِ‍رَةِ
Hal 'Tāka Ĥadīthu Mūsá 79-15 (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா? هَلْ ‌أت‍‍َ‍اكَ حَد‍ِ‍ي‍‍ثُ مُوسَى
'Idh Nādāhu Rabbuhu Bil-Wādi Al-Muqaddasi Ţuwan 79-16 'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து, إِ‌ذْ‌ نَا‌د‍َ‍‌اهُ ‌‍رَبُّ‍‍هُ بِ‍الْو‍َ‍‌ا‌دِ‌ ‌الْمُ‍‍قَ‍‍دَّسِ طُ‍‍و‌ىً
Adh/hab 'Ilá Fir`awna 'Innahu Ţaghá 79-17 "நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்." ا‌ذْهَ‍‍بْ ‌إِلَى‌ فِ‍‍رْعَ‍‍وْنَ ‌إِنَّ‍‍هُ طَ‍‍غَ‍‍ى
Faqul Hal Laka 'Ilá 'An Tazakká 79-18 இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும். فَ‍قُ‍‍لْ هَلْ لَكَ ‌إِلَ‍‍ى‌ ‌أَ‌نْ تَزَكَّى
Wa 'Ahdiyaka 'Ilá Rabbika Fatakhshá 79-19 "அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்). وَ‌أَهْدِيَكَ ‌إِلَى‌ ‌‍رَبِّكَ فَتَ‍‍خْ‍‍شَى
Fa'arāhu Al-'Āyata Al-Kub 79-20 ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார். فَأَ‌رَ‍‌اهُ ‌الآيَةَ ‌الْكُ‍‍بْ‍‍‍رَ‌ى
Fakadhdhaba Wa `Aşá 79-21 ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான். فَكَذَّبَ ‌وَعَ‍‍صَ‍‍ى
Thumma 'Adbara Yas`á 79-22 பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான். ثُ‍‍مَّ ‌أَ‌دْبَ‍رَ‌ يَسْعَى
Faĥashara Fanādá 79-23 அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான். فَحَشَ‍رَ‌ فَنَا‌دَ‌ى
Faqāla 'Anā Rabbukumu Al-'A`lá 79-24 "நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா" என்று (அவர்களிடம்) கூறினான். فَ‍قَ‍‍الَ ‌أَنَا‌ ‌‍رَبُّكُمُ ‌الأَعْلَى
Fa'akhadhahu Allāhu Nakāla Al-'Ākhirati Wa Al-'Ūlá 79-25 இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான். فَأَ‍خَ‍‍ذَهُ ‌اللَّ‍‍هُ نَك‍‍َ‍الَ ‌الآ‍‍خِ‍رَةِ ‌وَ‌الأ‍ُ‍‌ولَى
'Inna Fī Dhālika La`ibratan Liman Yakhshá 79-26 நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது. إِنَّ فِي ‌ذَلِكَ لَعِ‍‍بْ‍‍‍رَة ً‌ لِمَ‍‌‍نْ يَ‍‍خْ‍‍شَى
'A'antum 'Ashaddu Khalqāan 'Ami As-Samā'u ۚ Banāhā 79-27 உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான். أَ‌أَ‌نْ‍‍تُمْ ‌أَشَدُّ‌ خَ‍‍لْ‍‍ق‍‍اً‌ ‌أَمِ ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءُ‌ ۚ بَنَاهَا
Rafa`a Samkahā Fasawwāhā 79-28 அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான். رَفَعَ سَمْكَهَا‌ فَسَوَّ‌اهَا
Wa 'Aghţasha Laylahā Wa 'Akhraja Đuĥāhā 79-29 அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான். وَ‌أَ‍‍غْ‍‍طَ‍‍شَ لَيْلَهَا‌ ‌وَ‌أَ‍خْ‍رَجَ ضُ‍‍حَاهَا
Wa Al-'Arđa Ba`da Dhālika Daĥāhā 79-30 இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான். وَ‌الأَ‌رْ‍ضَ بَعْدَ‌ ‌ذَلِكَ ‌دَحَاهَا
'Akhraja Minhā Mā'ahā Wa Mar`āhā 79-31 அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான். أَ‍خْ‍رَجَ مِ‍‌‍نْ‍‍هَا‌ م‍‍َ‍ا‌ءَهَا‌ ‌وَمَرْعَاهَا
Wa Al-Jibāla 'Arsāhā 79-32 அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான். وَ‌الْجِب‍‍َ‍الَ ‌أَ‌رْسَاهَا
Matā`āan Lakum Wa Li'an`āmikum 79-33 உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்). مَتَاعا‌ ً‌ لَكُمْ ‌وَلِأَ‌نْ‍‍عَامِكُمْ
Fa'idhā Jā'ati Aţ-Ţāmmatu Al-Kub 79-34 எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால், فَإِ‌ذَ‌ا‌ ج‍‍َ‍ا‌ءَتِ ‌ال‍‍طَّ‍‍امَّ‍‍ةُ ‌الْكُ‍‍بْ‍‍‍رَ‌ى
Yawma Yatadhakkaru Al-'Insānu Mā Sa`á 79-35 அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். يَ‍‍وْمَ يَتَذَكَّرُ‌ ‌الإِ‌ن‍‍س‍‍َ‍انُ مَا‌ سَعَى
Wa Burrizati Al-Jaĥīmu Liman Yará 79-36 அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும். وَبُرِّ‌زَتِ ‌الْجَح‍‍ِ‍ي‍‍مُ لِمَ‍‌‍نْ يَ‍رَ‌ى
Fa'ammā Man Ţaghá 79-37 எனவே, எவன் வரம்பை மீறினானோ - فَأَمَّ‍‍ا‌ مَ‍‌‍نْ طَ‍‍غَ‍‍ى
Wa 'Āthara Al-Ĥayāata Ad-Dun 79-38 இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ- وَ‌آثَ‍رَ‌الْحَي‍‍َ‍اةَ ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا
Fa'inna Al-Jaĥīma Hiya Al-Ma'wá 79-39 அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும். فَإِنَّ ‌الْجَح‍‍ِ‍ي‍‍مَ هِيَ ‌الْمَأْ‌وَ‌ى
Wa 'Ammā Man Khāfa Maqāma Rabbihi Wa Nahá An-Nafsa `Ani Al-Hawá 79-40 எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ, وَ‌أَمَّ‍‍ا‌ مَ‍‌‍نْ خَ‍‍افَ مَ‍‍قَ‍‍امَ ‌‍رَبِّ‍‍هِ ‌وَنَهَى‌ ‌ال‍‍نَّ‍‍فْسَ عَنِ ‌الْهَوَ‌ى
Fa'inna Al-Jannata Hiya Al-Ma'wá 79-41 நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும். فَإِنَّ ‌الْجَ‍‍نَّ‍‍ةَ هِيَ ‌الْمَأْ‌وَ‌ى
Yas'alūnaka `Ani As-Sā`ati 'Ayyāna Mursāhā 79-42 (நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள். يَسْأَلُونَكَ عَنِ ‌ال‍‍سَّاعَةِ ‌أَيّ‍‍َ‍انَ مُرْسَاهَا
Fīma 'Anta Min Dhik 79-43 அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது? ف‍‍ِ‍ي‍‍مَ ‌أَ‌نْ‍‍تَ مِ‍‌‍نْ ‌ذِكْ‍رَ‌اهَا
'Ilá Rabbika Muntahāhā 79-44 அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது. إِلَى‌ ‌‍رَبِّكَ مُ‍‌‍ن‍‍تَهَاهَا
'Innamā 'Anta Mundhiru Man Yakhshāhā 79-45 அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம், إِنَّ‍‍مَ‍‍ا‌ ‌أَ‌نْ‍‍تَ مُ‍‌‍ن‍‍ذِ‌ر‍ُ‍‌ مَ‍‌‍نْ يَ‍‍خْ‍‍شَاهَا
Ka'annahum Yawma Yarawnahā Lam Yalbathū 'Illā `Ashīyatan 'Aw Đuĥāhā 79-46 நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும். كَأَنَّ‍‍هُمْ يَ‍‍وْمَ يَ‍رَ‌وْنَهَا‌ لَمْ يَلْبَثُ‍‍و‌ا‌ ‌إِلاَّ‌ عَشِيَّةً ‌أَ‌وْ‌ ضُ‍‍حَاهَا
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah