Lā 'Uqsimu Biyawmi Al-Qiyāmahi  | 75-1 கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். | لاَ أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ |
Wa Lā 'Uqsimu Bin-Nafsi Al-Lawwāmahi  | 75-2 நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். | وَلاَ أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ |
'Ayaĥsabu Al-'Insānu 'Allan Najma`a `Ižāmahu  | 75-3 (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? | أَيَحْسَبُ الإِنسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ |
Balá Qādirīna `Alá 'An Nusawwiya Banānahu  | 75-4 அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். | بَلَى قَادِرِينَ عَلَى أَنْ نُسَوِّيَ بَنَانَهُ |
Bal Yurīdu Al-'Insānu Liyafjura 'Amāmahu  | 75-5 எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான். | بَلْ يُرِيدُ الإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ |
Yas'alu 'Ayyāna Yawmu Al-Qiyāmahi  | 75-6 "கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான். | يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ |
Fa'idhā Bariqa Al-Başaru  | 75-7 ஆகவே, பார்வையும் மழுங்கி- | فَإِذَا بَرِقَ الْبَصَرُ |
Wa Khasafa Al-Qamaru  | 75-8 சந்திரன் ஒளியும் மங்கி- | وَخَسَفَ الْقَمَرُ |
Wa Jumi`a Ash-Shamsu Wa Al-Qamaru  | 75-9 சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும் . | وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ |
Yaqūlu Al-'Insānu Yawma'idhin 'Ayna Al-Mafarru  | 75-10 அந்நாளில் "(தப்பித்துக் கௌ;ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான். | يَقُولُ الإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ |
Kallā Lā Wazara  | 75-11 "இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்). | كَلاَّ لاَ وَزَرَ |
'Ilá Rabbika Yawma'idhin Al-Mustaqarru  | 75-12 அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு. | إِلَى رَبِّكَ يَوْمَئِذ ٍ الْمُسْتَقَرُّ |
Yunabba'u Al-'Insānu Yawma'idhin Bimā Qaddama Wa 'Akhkhara  | 75-13 அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான். | يُنَبَّأُ الإِنسَانُ يَوْمَئِذ ٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ |
Bali Al-'Insānu `Alá Nafsihi Başīrahun  | 75-14 எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான். | بَلِ الإِنسَانُ عَلَى نَفْسِه ِِ بَصِيرَة ٌ |
Wa Law 'Alqá Ma`ādhīrahu  | 75-15 அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்! | وَلَوْ أَلْقَى مَعَاذِيرَهُ |
Lā Tuĥarrik Bihi Lisānaka Lita`jala Bihi  | 75-16 (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள். | لاَ تُحَرِّكْ بِه ِِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ |
'Inna `Alaynā Jam`ahu Wa Qur'ānahu  | 75-17 நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. | إِنَّ عَلَيْنَا جَمْعَه ُُ وَقُرْآنَهُ |
Fa'idhā Qara'nāhu Fa Attabi` Qur'ānahu  | 75-18 எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள். | فَإِذَا قَرَأْنَاه ُُ فَاتَّبِعْ قُرْآنَهُ |
Thumma 'Inna `Alaynā Bayānahu  | 75-19 பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது. | ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ |
Kallā Bal Tuĥibbūna Al-`Ājilaha  | 75-20 எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள். | كَلاَّ بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ |
Wa Tadharūna Al-'Ākhiraha  | 75-21 ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள். | وَتَذَرُونَ الآخِرَةَ |
Wujūhun Yawma'idhin Nāđirahun  | 75-22 அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். | وُجُوه ٌ ٌ يَوْمَئِذ ٍ نَاضِرَة ٌ |
'Ilá Rabbihā Nāžirahun  | 75-23 தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும். | إِلَى رَبِّهَا نَاظِرَة ٌ |
Wa Wujūhun Yawma'idhin Bāsirahun  | 75-24 ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும். | وَوُجُوه ٌ ٌ يَوْمَئِذ ٍ بَاسِرَة ٌ |
Tažunnu 'An Yuf`ala Bihā Fāqirahun  | 75-25 இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும். | تَظُنُّ أَنْ يُفْعَلَ بِهَا فَاقِرَة ٌ |
Kallā 'Idhā Balaghati At-Tarāqī  | 75-26 அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால், | كَلاَّ إِذَا بَلَغَتِ التَّرَاقِي |
Wa Qīla Man Rāqin  | 75-27 "மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது. | وَقِيلَ مَنْ رَاق ٍ |
Wa Žanna 'Annahu Al-Firāqu  | 75-28 ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான். | وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ |
Wa At-Taffati As-Sāqu Bis-Sāqi  | 75-29 இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும். | وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ |
'Ilá Rabbika Yawma'idhin Al-Masāqu  | 75-30 உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது. | إِلَى رَبِّكَ يَوْمَئِذ ٍ الْمَسَاقُ |
Falā Şaddaqa Wa Lā Şallá  | 75-31 ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை. | فَلاَ صَدَّقَ وَلاَ صَلَّى |
Wa Lakin Kadhdhaba Wa Tawallá  | 75-32 ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான். | وَلَكِنْ كَذَّبَ وَتَوَلَّى |
Thumma Dhahaba 'Ilá 'Ahlihi Yatamaţţá  | 75-33 பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான். | ثُمَّ ذَهَبَ إِلَى أَهْلِه ِِ يَتَمَطَّى |
'Awlá Laka Fa'awlá  | 75-34 கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்! | أَوْلَى لَكَ فَأَوْلَى |
Thumma 'Awlá Laka Fa'awlá  | 75-35 பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான். | ثُمَّ أَوْلَى لَكَ فَأَوْلَى |
'Ayaĥsabu Al-'Insānu 'An Yutraka Sudáan  | 75-36 வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா? | أَيَحْسَبُ الإِنسَانُ أَنْ يُتْرَكَ سُدى ً |
'Alam Yaku Nuţfatan Min Manīyin Yumná  | 75-37 (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? | أَلَمْ يَكُ نُطْفَة ً مِنْ مَنِيّ ٍ يُمْنَى |
Thumma Kāna `Alaqatan Fakhalaqa Fasawwá  | 75-38 பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான். | ثُمَّ كَانَ عَلَقَة ً فَخَلَقَ فَسَوَّى |
Faja`ala Minhu Az-Zawjayni Adh-Dhakara Wa Al-'Unthá  | 75-39 பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான். | فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالأُنثَى |
'Alaysa Dhālika Biqādirin `Alá 'An Yuĥyiya Al-Mawtá  | 75-40 (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா? | أَلَيْسَ ذَلِكَ بِقَادِرٍ عَلَى أَنْ يُحْيِيَ الْمَوْتَى |