Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

74) Sūrat Al-Muddaththir

Printed format

74) سُورَة المُدَّثِّر

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Yā 'Ayyuhā Al-Muddaththiru 74-1 (போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே! ي‍‍َ‍ا‌أَيُّهَا‌ ‌الْمُدَّثِّرُ
Qum Fa'andhir 74-2 நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக. قُ‍‍مْ فَأَ‌ن‍‍ذِ‌ر‍ْ‍
Wa Rabbaka Fakabbir 74-3 மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக. وَ‌‍رَبَّكَ فَكَبِّ‍‍رْ
Wa Thiyābaka Faţahhir 74-4 உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக. وَثِيَابَكَ فَ‍‍طَ‍‍هِّ‍‍رْ
Wa Ar-Rujza Fāhjur 74-5 அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக. وَ‌ال‍‍رُّجْ‍‍زَ‌ فَاهْ‍‍جُ‍‍رْ
Wa Lā Tamnun Tastakthiru 74-6 (பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிமாகப் பொறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர். وَلاَ‌ تَمْنُ‍‌‍نْ تَسْتَكْثِرُ
Wa Lirabbika Fāşbir 74-7 இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக. وَلِ‍رَبِّكَ فَاصْ‍‍بِ‍‍رْ
Fa'idhā Nuqira An-Nāqūri 74-8 மேலும், எக்காளத்தில் ஊதப்படும்போது- فَإِ‌ذَ‌ا‌ نُ‍‍قِ‍‍ر‍َ‍‌ فِي ‌ال‍‍نَّ‍‍اقُ‍‍و‌رِ
Fadhālika Yawma'idhin Yawmun `Asīrun 74-9 அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும். فَذَلِكَ يَوْمَئِذ‌ٍ‌ يَ‍‍وْمٌ عَسِيرٌ
`Alá Al-Kāfirīna Ghayru Yasīrin 74-10 காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல. عَلَى‌ ‌الْكَافِ‍‍ر‍ِ‍ي‍‍نَ غَ‍‍يْ‍‍رُ‌ يَسِي‍‍ر‍ٍ‍
Dharnī Wa Man Khalaqtu Waĥīdāan 74-11 என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும். ذَ‌رْنِي ‌وَمَ‍‌‍نْ خَ‍‍لَ‍‍قْ‍‍تُ ‌وَحِيد‌اً
Wa Ja`altu Lahu Mālāan Mamdūdāan 74-12 இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன். وَجَعَلْتُ لَ‍‍هُ مَالا‌ ً‌ مَمْدُ‌و‌د‌اً
Wa Banīna Shuhūdāan 74-13 அவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்). وَبَن‍‍ِ‍ي‍‍نَ شُهُو‌د‌اً
Wa Mahhadtu Lahu Tamhīdāan 74-14 இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன். وَمَهَّ‍‍دْتُ لَ‍‍هُ تَمْهِيد‌اً
Thumma Yaţma`u 'An 'Azīda 74-15 பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான். ثُ‍‍مَّ يَ‍‍طْ‍‍مَعُ ‌أَ‌نْ ‌أَ‌زِيدَ
Kallā ۖ 'Innahu Kāna Li'yātinā `Anīdāan 74-16 அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான். كَلاَّ‌ ۖ ‌إِنَّ‍‍هُ ك‍‍َ‍انَ لِأيَاتِنَا‌ عَنِيد‌اً
Sa'urhiquhu Şa`ūdāan 74-17 விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன். سَأُ‌رْهِ‍‍قُ‍‍هُ صَ‍‍عُو‌د‌اً
'Innahu Fakkara Wa Qaddara 74-18 நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான். إِنَّ‍‍هُ فَكَّ‍رَ‌ ‌وَ‍قَ‍‍دَّ‌‍رَ
Faqutila Kayfa Qaddara 74-19 அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்? فَ‍قُ‍‍تِلَ كَ‍‍يْ‍‍فَ قَ‍‍دَّ‌‍رَ
Thumma Qutila Kayfa Qaddara 74-20 பின்னரும், அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்? ثُ‍‍مَّ قُ‍‍تِلَ كَ‍‍يْ‍‍فَ قَ‍‍دَّ‌‍رَ
Thumma Nažara 74-21 பிறகும் (குர்ஆனின் வசனங்களை) அவன் நோட்டமிட்டான். ثُ‍‍مَّ نَ‍‍ظَ‍رَ
Thumma `Abasa Wa Basara 74-22 பின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவனாக) கடுகடுத்தான், இன்னும் (முகஞ்) சுளித்தான். ثُ‍‍مَّ عَبَسَ ‌وَبَسَ‍رَ
Thumma 'Adbara Wa Astakbara 74-23 அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான். ثُ‍‍مَّ ‌أَ‌دْبَ‍رَ‌ ‌وَ‌اسْتَكْ‍‍بَ‍‍‍رَ
Faqāla 'In Hādhā 'Illā Siĥrun Yu'utharu 74-24 அப்பால் அவன் கூறினான்: "இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை. فَ‍قَ‍‍الَ ‌إِ‌نْ هَذَ‌ا‌ ‌إِلاَّ‌ سِحْر‌ٌ‌ يُؤْثَرُ
'In Hādhā 'Illā Qawlu Al-Bashari 74-25 "இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை" (என்றும் கூறினான்.) إِ‌نْ هَذَ‌ا‌ ‌إِلاَّ‌ قَ‍‍وْلُ ‌الْبَشَ‍‍رِ
Sa'uşlīhi Saqara 74-26 அவனை நான் "ஸகர்" (என்னும்) நரகில் புகச் செய்வேன். سَأُ‍صْ‍‍ل‍‍ِ‍ي‍‍هِ سَ‍‍ق‍‍َ‍‍‍رَ
Wa Mā 'Adrāka Mā Saqaru 74-27 "ஸகர்" என்னவென்பதை உமக்கு எது விளக்கும்? وَمَ‍‍ا‌ ‌أَ‌دْ‌رَ‍‌اكَ مَا‌ سَ‍‍ق‍‍َ‍‍رُ
Lā Tubqī Wa Lā Tadharu 74-28 அது (எவரையும்) மிச்சம் வைக்காது, விட்டு விடவும் செய்யாது. لاَ‌ تُ‍‍بْ‍‍‍‍قِ‍‍ي ‌وَلاَ‌ تَذَ‌رُ
Lawwāĥatun Lilbashari 74-29 (அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும். لَوَّ‌احَة ٌ‌ لِلْبَشَ‍‍رِ
`Alayhā Tis`ata `Ashara 74-30 அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். عَلَيْهَا‌ تِسْعَةَ عَشَ‍رَ
Wa Mā Ja`alnā 'Aşĥāba An-Nāri 'Illā Malā'ikatan ۙ Wa Mā Ja`alnā `Iddatahum 'Illā Fitnatan Lilladhīna Kafarū Liyastayqina Al-Ladhīna 'Ūtū Al-Kitāba Wa Yazdāda Al-Ladhīna 'Āmanū 'Īmānāan ۙ Wa Lā Yartāba Al-Ladhīna 'Ūtū Al-Kitāba Wa Al-Mu'uminūna ۙ Wa Liyaqūla Al-Ladhīna Fī Qulūbihim Marađun Wa Al-Kāfirūna Mādhā 'Arāda Allāhu Bihadhā Mathalāan ۚ Kadhālika Yuđillu Allāhu Man Yashā'u Wa Yahdī Man Yashā'u ۚ Wa Mā Ya`lamu Junūda Rabbika 'Illā Huwa ۚ Wa Mā Hiya 'Illā Dhikrá Lilbashari 74-31 அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை, காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்; "அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?" என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான், இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான், அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள், (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை. وَمَا‌ جَعَلْنَ‍‍ا‌ ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابَ ‌ال‍‍نّ‍‍َ‍ا‌ر‍ِ‍‌ ‌إِلاَّ‌ مَلاَئِكَة ًۙ ‌وَمَا‌ جَعَلْنَا‌ عِدَّتَهُمْ ‌إِلاَّ‌ فِتْنَة ً‌ لِلَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ لِيَسْتَيْ‍‍قِ‍‍نَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌أ‍ُ‍‌وتُو‌ا‌الْكِت‍‍َ‍ابَ ‌وَيَزْ‌د‍َ‍‌ا‌دَ‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُ‍‍و‌ا‌ ‌إِيمَانا‌ ًۙ ‌وَلاَ‌ يَرْت‍‍َ‍ابَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌أ‍ُ‍‌وتُو‌ا‌الْكِت‍‍َ‍ابَ ‌وَ‌الْمُؤْمِن‍‍ُ‍ونَ ۙ ‌وَلِيَ‍‍قُ‍‍ولَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ فِي قُ‍‍لُوبِهِمْ مَ‍رَضٌ‌ ‌وَ‌الْكَافِر‍ُ‍‌ونَ مَا‌ذَ‌ا‌ ‌أَ‌رَ‍‌ا‌دَ‌ ‌اللَّ‍‍هُ بِهَذَ‌ا‌ مَثَلا‌‌ ًۚ كَذَلِكَ يُ‍‍ضِ‍‍لُّ ‌اللَّ‍‍هُ مَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ‌وَيَهْدِي مَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ۚ ‌وَمَا‌ يَعْلَمُ جُن‍‍ُ‍و‌دَ‌ ‌‍رَبِّكَ ‌إِلاَّ‌ هُوَ‌ ۚ ‌وَمَا‌ هِيَ ‌إِلاَّ‌ ‌ذِكْ‍رَ‌ى‌ لِلْبَشَ‍‍رِ
Kallā Wa Al-Qamari 74-32 (ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக. كَلاَّ‌ ‌وَ‌الْ‍‍قَ‍‍مَ‍‍رِ
Wa Al-Layli 'Idh 'Adbara 74-33 இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது. وَ‌اللَّ‍‍يْ‍‍لِ ‌إِ‌ذْ‌ ‌أَ‌دْبَ‍‍‍رَ
Wa Aş-Şubĥi 'Idhā 'Asfara 74-34 விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது, وَ‌ال‍‍صُّ‍‍بْ‍‍حِ ‌إِ‌ذَ‌ا‌ ‌أَسْفَ‍رَ
'Innahā La'iĥdá Al-Kubari 74-35 நிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும். إِنَّ‍‍هَا‌ لَإِحْدَ‌ى‌ ‌الْكُ‍‍بَ‍‍رِ
Nadhīrāan Lilbashari 74-36 (அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது- نَذِي‍‍ر‌ا‌ ً‌ لِلْبَشَ‍‍رِ
Liman Shā'a Minkum 'An Yataqaddama 'Aw Yata'akhkhara 74-37 உங்களில் எவன் (அதை) முன்னோக்கியோ, அல்லது (அதிலிருந்து) பின்வாங்கியோ செல்ல விரும்புகிறானோ அவனை (அது எச்சரிக்கிறது). لِمَ‍‌‍نْ ش‍‍َ‍ا‌ءَ‌ مِ‍‌‍نْ‍‍كُمْ ‌أَ‌نْ يَتَ‍‍قَ‍‍دَّمَ ‌أَ‌وْ‌ يَتَأَ‍خَّ‍رَ
Kullu Nafsin Bimā Kasabat Rahīnatun 74-38 ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான். كُلُّ نَفْس ٍ‌ بِمَا‌ كَسَبَتْ ‌‍رَهِينَةٌ
'Illā 'Aşĥāba Al-Yamīni 74-39 வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர إِلاَّ‌ ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابَ ‌الْيَمِينِ
Fī Jannātin Yatasā'alūna 74-40 (அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்- فِي جَ‍‍نّ‍‍َ‍اتٍ‌ يَتَس‍‍َ‍ا‌ءَلُونَ
`Ani Al-Mujrimīna 74-41 குற்றவாளிகளைக் குறித்து- عَنِ ‌الْمُ‍‍جْ‍‍رِمِينَ
Mā Salakakum Fī Saqara 74-42 "உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?" (என்று கேட்பார்கள்.) مَا‌ سَلَكَكُمْ فِي سَ‍‍ق‍‍َ‍‍‍رَ
Qālū Lam Naku Mina Al-Muşallīna 74-43 அவர்கள் (பதில்) கூறுவார்கள்; "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. قَ‍‍الُو‌ا‌ لَمْ نَكُ مِنَ ‌الْمُ‍‍صَ‍‍لِّينَ
Wa Lam Naku Nuţ`imu Al-Miskīna 74-44 "அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. وَلَمْ نَكُ نُ‍‍طْ‍‍عِمُ ‌الْمِسْكِينَ
Wa Kunnā Nakhūđu Ma`a Al-Khā'iđīna 74-45 "(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். وَكُ‍‍نَّ‍‍ا‌ نَ‍‍خُ‍‍و‍ضُ مَعَ ‌الْ‍‍خَ‍‍ائِ‍‍ضِ‍‍ينَ
Wa Kunnā Nukadhdhibu Biyawmi Ad-Dīni 74-46 "இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். وَكُ‍‍نَّ‍‍ا‌ نُكَذِّبُ بِيَ‍‍وْمِ ‌ال‍‍دِّينِ
Ĥattá 'Atānā Al-Yaqīnu 74-47 "உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்). حَتَّ‍‍ى‌ ‌أَتَانَا‌ ‌الْيَ‍‍قِ‍‍ينُ
Famā Tanfa`uhum Shafā`atu Ash-Shāfi`īna 74-48 ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது. فَمَا‌ تَ‍‌‍نْ‍‍فَعُهُمْ شَفَاعَةُ ‌ال‍‍شَّافِعِينَ
Famā Lahum `Ani At-Tadhkirati Mu`rīna 74-49 நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது? فَمَا‌ لَهُمْ عَنِ ‌ال‍‍تَّذْكِ‍رَةِ مُعْ‍‍رِ‍‍ضِ‍‍ينَ
Ka'annahum Ĥumurun Mustanfiratun 74-50 அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்- كَأَنَّ‍‍هُمْ حُمُر‌ٌ‌ مُسْتَ‍‌‍نْ‍‍فِ‍رَةٌ
Farrat Min Qaswaratin 74-51 (அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்). فَ‍رَّتْ مِ‍‌‍نْ قَ‍‍سْوَ‌‍رَةٍ
Bal Yurīdu Kullu Amri'in Minhum 'An Yu'utá Şuĥufāan Munashsharatan 74-52 ஆனால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட வேதங்கள் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நாடுகிறான். بَلْ يُ‍‍ر‍ِ‍ي‍‍دُ‌ كُلُّ ‌امْ‍‍رِئٍ‌ مِ‍‌‍نْ‍‍هُمْ ‌أَ‌نْ يُؤْتَى‌ صُ‍‍حُفا‌ ً‌ مُنَشَّ‍رَةً
Kallā ۖ Bal Lā Yakhāfūna Al-'Ākhirata 74-53 அவ்வாறில்லை: மறுமையைப் பற்றி அவர்கள் பயப்படவில்லை. كَلاَّ‌ ۖ بَلْ لاَ‌ يَ‍‍خَ‍‍اف‍‍ُ‍ونَ ‌الآ‍‍خِ‍رَةَ
Kallā 'Innahu Tadhkiratun 74-54 அப்படியல்ல: நிச்சயமாக இது நல்லுபதேசமாகும். كَلاَّ‌ ‌إِنَّ‍‍هُ تَذْكِ‍رَةٌ
Faman Shā'a Dhakarahu 74-55 (எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும், فَمَ‍‌‍نْ ش‍‍َ‍ا‌ءَ‌ ‌ذَكَ‍رَهُ
Wa Mā Yadhkurūna 'Illā 'An Yashā'a Allāhu ۚ Huwa 'Ahlu At-Taqwá Wa 'Ahlu Al-Maghfirati 74-56 இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன், அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன். وَمَا‌ يَذْكُر‍ُ‍‌ونَ ‌إِلاَّ‌ ‌أَ‌نْ يَش‍‍َ‍ا‌ءَ‌ ‌اللَّ‍‍هُ ۚ هُوَ‌ ‌أَهْلُ ‌ال‍‍تَّ‍‍قْ‍‍وَ‌ى‌ ‌وَ‌أَهْلُ ‌الْمَ‍‍غْ‍‍فِ‍رَةِ
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah