56) Sūrat Al-Wāqi`ah

Printed format

56) سُورَة الوَاقِعَه

'Idhā Waqa`ati Al-Wāqi`ahu 56-1 மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால் إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ
Laysa Liwaq`atihā Kādhibahun 56-2 அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை. لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَة ٌ
Khāfiđatun Rāfi`ahun 56-3 அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும். خَافِضَة ٌ رَافِعَة ٌ
'Idhā Rujjati Al-'Arđu Rajjāan 56-4 பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது. إِذَا رُجَّتِ الأَرْضُ رَجّا ً
Wa Bussati Al-Jibālu Bassāan 56-5 இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, وَبُسَّتِ الْجِبَالُ بَسّا ً
Fakānat Habā'an Munbaththāan 56-6 பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும். فَكَانَتْ هَبَاء ً مُنْبَثّا ً
Wa Kuntum 'Azwājāan Thalāthahan 56-7 (அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள். وَكُنتُمْ أَزْوَاجا ً ثَلاَثَة ً
Fa'aşĥābu Al-Maymanati Mā 'Aşĥābu Al-Maymanahi 56-8 (முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?) فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ
Wa 'Aşĥābu Al-Mash'amati Mā 'Aşĥābu Al-Mash'amahi 56-9 (இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?) وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ
Wa As-Sābiqūna As-Sābiqūna 56-10 (மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள். وَالسَّابِقُونَ السَّابِقُونَ
'Ūlā'ika Al-Muqarrabūna 56-11 இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள். أُوْلَائِكَ الْمُقَرَّبُونَ
Fī Jannāti An-Na`īmi 56-12 இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர். فِي جَنَّاتِ النَّعِيمِ
Thullatun Mina Al-'Awwalīna 56-13 முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும், ثُلَّة ٌ مِنَ الأَوَّلِينَ
Wa Qalīlun Mina Al-'Ākhirīna 56-14 பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் - وَقَلِيل ٌ مِنَ الآخِرِينَ
`Alá Sururin Mawđūnahin 56-15 (பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது - عَلَى سُرُر ٍ مَوْضُونَة ٍ
Muttaki'īna `Alayhā Mutaqābilīna 56-16 ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ
Yaţūfu `Alayhim Wildānun Mukhalladūna 56-17 நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள். يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَان ٌ مُخَلَّدُونَ
Bi'akwābin Wa 'Abārīqa Wa Ka'sin Min Ma`īnin 56-18 தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்). بِأَكْوَاب ٍ وَأَبَارِيقَ وَكَأْس ٍ مِنْ مَعِين ٍ
Lā Yuşadda`ūna `Anhā Wa Lā Yunzifūna 56-19 (அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள். لاَ يُصَدَّعُونَ عَنْهَا وَلاَ يُنزِفُونَ
Wa Fākihatin Mimmā Yatakhayyarūna 56-20 இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் - وَفَاكِهَة ٍ مِمَّا يَتَخَيَّرُونَ
Wa Laĥmi Ţayrin Mimmā Yashtahūna 56-21 விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்). وَلَحْمِ طَيْر ٍ مِمَّا يَشْتَهُونَ
Wa Ĥūrun `Īnun 56-22 (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். وَحُورٌ عِين ٌ
Ka'amthāli Al-Lu'ulu'ui Al-Maknūni 56-23 மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்). كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ
Jazā'an Bimā Kānū Ya`malūna 56-24 (இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும். جَزَاء ً بِمَا كَانُوا يَعْمَلُونَ
Lā Yasma`ūna Fīhā Laghwan Wa Lā Ta'thīmāan 56-25 அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். لاَ يَسْمَعُونَ فِيهَا لَغْوا ً وَلاَ تَأْثِيما ً
'Illā Qīlāan Salāmāan Salāmāan 56-26 'ஸலாம், ஸலாம்' என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்). إِلاَّ قِيلا ً سَلاَما ً سَلاَما ً
Wa 'Aşĥābu Al-Yamīni Mā 'Aşĥābu Al-Yamīni 56-27 இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?) وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ
Fī Sidrin Makhđūdin 56-28 (அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்: فِي سِدْر ٍ مَخْضُود ٍ
Wa Ţalĥin Manđūdin 56-29 (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடை வாழை மரத்தின் கீழும்: وَطَلْح ٍ مَنْضُود ٍ
Wa Žillin Mamdūdin 56-30 இன்னும், நீண்ட நிழலிலும், وَظِلّ ٍ مَمْدُود ٍ
Wa Mā'in Maskūbin 56-31 (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும், وَمَاء ٍ مَسْكُوب ٍ
Wa Fākihatin Kathīrahin 56-32 ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் - وَفَاكِهَة ٍ كَثِيرَة ٍ
Lā Maqţū`atin Wa Lā Mamnū`ahin 56-33 அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை - لاَ مَقْطُوعَة ٍ وَلاَ مَمْنُوعَة ٍ
Wa Furushin Marfū`ahin 56-34 மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்). وَفُرُش ٍ مَرْفُوعَة ٍ
'Innā 'Ansha'nāhunna 'Inshā'an 56-35 நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி, إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاء ً
Faja`alnāhunna 'Abkārāan 56-36 அப்பெண்களைக் கன்னிகளாகவும், فَجَعَلْنَاهُنَّ أَبْكَارا ً
`Urubāan 'Atrābāan 56-37 (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், عُرُباً أَتْرَابا ً
Li'aşĥābi Al-Yamīni 56-38 வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). لِأَصْحَابِ الْيَمِينِ
Thullatun Mina Al-'Awwalīna 56-39 முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும், ثُلَّة ٌ مِنَ الأَوَّلِينَ
Wa Thullatun Mina Al-'Ākhirīna 56-40 பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்). وَثُلَّة ٌ مِنَ الآخِرِينَ
Wa 'Aşĥābu Ash-Shimāli Mā 'Aşĥābu Ash-Shimāli 56-41 இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?) وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ
Fī Samūmin Wa Ĥamīmin 56-42 (அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் - فِي سَمُوم ٍ وَحَمِيم ٍ
Wa Žillin Min Yaĥmūmin 56-43 அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள். وَظِلّ ٍ مِنْ يَحْمُوم ٍ
Lā Bāridin Wa Lā Karīmin 56-44 (அங்கு) குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை. لاَ بَارِد ٍ وَلاَ كَرِيم ٍ
'Innahum Kānū Qabla Dhālika Mutrafīna 56-45 நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர். إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَلِكَ مُتْرَفِينَ
Wa Kānū Yuşirrūna `Alá Al-Ĥinthi Al-`Ažīmi 56-46 ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர். وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنثِ الْعَظِيمِ
Wa Kānū Yaqūlūna 'A'idhā Mitnā Wa Kunnā Turābāan Wa `Ižāmāan 'A'innā Lamabthūna 56-47 மேலும், அவர்கள், "நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்தனர். وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابا ً وَعِظَاماً أَئِنَّا لَمَبْعُوثُونَ
'Awa 'Ābā'uunā Al-'Awwalūna 56-48 "அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?" என்றும் கூறினர்.) أَوَ آبَاؤُنَا الأَوَّلُونَ
Qul 'Inna Al-'Awwalīna Wa Al-'Ākhirīna 56-49 (நபியே!) நீர் கூறும்: "(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும். قُلْ إِنَّ الأَوَّلِينَ وَالآخِرِينَ
Lamajmū`ūna 'Ilá Mīqāti Yawmin Ma`lūmin 56-50 "குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள். لَمَجْمُوعُونَ إِلَى مِيقَاتِ يَوْم ٍ مَعْلُوم ٍ
Thumma 'Innakum 'Ayyuhā Ađ-Đāllūna Al-Mukadhdhibūna 56-51 அதற்குப் பின்னர்: "பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள், ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ
La'ākilūna Min Shajarin Min Zaqqūmin 56-52 ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள். لَآكِلُونَ مِنْ شَجَر ٍ مِنْ زَقُّوم ٍ
Famāli'ūna Minhā Al-Buţūna 56-53 ஆகவே, "அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள். فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
Fashāribūna `Alayhi Mina Al-Ĥamīmi 56-54 அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள். فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ
Fashāribūna Shurba Al-Hīmi 56-55 "பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்." فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ
dhā Nuzuluhum Yawma Ad-Dīni 56-56 இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும். هَذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ
Naĥnu Khalaqnākum Falawlā Tuşaddiqūna 56-57 நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلاَ تُصَدِّقُونَ
'Afara'aytum Mā Tumnūna 56-58 (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? أَفَرَأَيْتُمْ مَا تُمْنُونَ
'A'antum Takhluqūnahu 'Am Naĥnu Al-Khāliqūna 56-59 அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? أَأَنْتُمْ تَخْلُقُونَهُ~ُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ
Naĥnu Qaddarnā Baynakumu Al-Mawta Wa Mā Naĥnu Bimasbūqīna 56-60 உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது. نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
`Alá 'An Nubaddila 'Amthālakum Wa Nunshi'akum Fī Mā Lā Ta`lamūna 56-61 (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). عَلَى أَنْ نُبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنْشِئَكُمْ فِي مَا لاَ تَعْلَمُونَ
Wa Laqad `Alimtumu An-Nash'ata Al-'Ūlá Falawlā Tadhkkarūna 56-62 முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா? وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الأُولَى فَلَوْلاَ تَذكَّرُونَ
'Afara'aytum Mā Taĥruthūna 56-63 (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ
'A'antum Tazra`ūnahu 'Am Naĥnu Az-Zāri`ūna 56-64 அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா? أَأَنْتُمْ تَزْرَعُونَهُ~ُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ
Law Nashā'u Laja`alnāhu Ĥuţāmāan Fažalaltum Tafakkahūna 56-65 நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். لَوْ نَشَاءُ لَجَعَلْنَاه ُُ حُطَاما ً فَظَلَلْتُمْ تَفَكَّهُونَ
'Innā Lamughramūna 56-66 "நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம். إِنَّا لَمُغْرَمُونَ
Bal Naĥnu Maĥrūmūna 56-67 "மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்). بَلْ نَحْنُ مَحْرُومُونَ
'Afara'aytumu Al-Mā'a Al-Ladhī Tashrabūna 56-68 அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா? أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
'A'antum 'Anzaltumūhu Mina Al-Muzni 'Am Naĥnu Al-Munzilūna 56-69 மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? أَأَنْتُمْ أَنزَلْتُمُوه ُُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ
Law Nashā'u Ja`alnāhu 'Ujājāan Falawlā Tashkurūna 56-70 நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ~ُ أُجَاجا ً فَلَوْلاَ تَشْكُرُونَ
'Afara'aytumu An-Nāra Allatī Tūrūna 56-71 நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ
'A'antum 'Ansha'tum Shajaratahā 'Am Naĥnu Al-Munshi'ūna 56-72 அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? أَأَنْتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِئُونَ
Naĥnu Ja`alnāhā Tadhkiratan Wa Matā`āan Lilmuqwīna 56-73 நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம். نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَة ً وَمَتَاعا ً لِلْمُقْوِينَ
Fasabbiĥ Biāsmi Rabbika Al-`Ažīmi 56-74 ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக. فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
Falā 'Uqsimu Bimawāqi`i An-Nujūmi 56-75 நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன். فَلاَ أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ
Wa 'Innahu Laqasamun Law Ta`lamūna `Ažīmun 56-76 நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான் பிரமாணமாகும். وَإِنَّه ُُ لَقَسَم ٌ لَوْ تَعْلَمُونَ عَظِيم ٌ
'Innahu Laqur'ānun Karīmun 56-77 நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும். إِنَّه ُُ لَقُرْآن ٌ كَرِيم ٌ
Fī Kitābin Maknūnin 56-78 பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது. فِي كِتَاب ٍ مَكْنُون ٍ
Lā Yamassuhu 'Illā Al-Muţahharūna 56-79 தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள். لاَ يَمَسُّهُ~ُ إِلاَّ الْمُطَهَّرُونَ
Tanzīlun Min Rabbi Al-`Ālamīna 56-80 அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது. تَنزِيل ٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ
'Afabihadhā Al-Ĥadīthi 'Antum Mud/hinūna 56-81 அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா? أَفَبِهَذَا الْحَدِيثِ أَنْتُمْ مُدْهِنُونَ
Wa Taj`alūna Rizqakum 'Annakum Tukadhdhibūna 56-82 நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா? وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
Falawlā 'Idhā Balaghati Al-Ĥulqūma 56-83 மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது - فَلَوْلاَ إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ
Wa 'Antum Ĥīna'idhin Tanžurūna 56-84 அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். وَأَنْتُمْ حِينَئِذ ٍ تَنظُرُونَ
Wa Naĥnu 'Aqrabu 'Ilayhi Minkum Wa Lakin Lā Tubşirūna 56-85 ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை. وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لاَ تُبْصِرُونَ
Falawlā 'In Kuntum Ghayra Madīnīna 56-86 எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் - فَلَوْلاَ إِنْ كُنتُمْ غَيْرَ مَدِينِينَ
Tarji`ūnahā 'In Kuntum Şādiqīna 56-87 நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே! تَرْجِعُونَهَا إِنْ كُنتُمْ صَادِقِينَ
Fa'ammā 'In Kāna Mina Al-Muqarrabīna 56-88 (இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின். فَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِينَ
Farawĥun Wa Rayĥānun Wa Jannatu Na`īmin 56-89 அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு. فَرَوْح ٌ وَرَيْحَان ٌ وَجَنَّةُ نَعِيم ٍ
Wa 'Ammā 'In Kāna Min 'Aşĥābi Al-Yamīni 56-90 அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால், وَأَمَّا إِنْ كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
Fasalāmun Laka Min 'Aşĥābi Al-Yamīni 56-91 "வலப்புறத்தோரே! உங்களுக்கு "ஸலாம்" உண்டாவதாக" (என்று கூறப்படும்). فَسَلاَم ٌ لَكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
Wa 'Ammā 'In Kāna Mina Al-Mukadhdhibīna Ađ-Đāllīna 56-92 ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால் وَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ
Fanuzulun Min Ĥamīmin 56-93 கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும். فَنُزُل ٌ مِنْ حَمِيم ٍ
Wa Taşliyatu Jaĥīmin 56-94 நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்). وَتَصْلِيَةُ جَحِيم ٍ
'Inna Hādhā Lahuwa Ĥaqqu Al-Yaqīni 56-95 நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும். إِنَّ هَذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ
Fasabbiĥ Biāsmi Rabbika Al-`Ažīmi 56-96 எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக. فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
Next Sūrah