Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

3) Sūrat 'Āli `Imn

Printed format

3)

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters
'Alif-Lām-Mīm 3-1 அலிஃப், லாம், மீம். --
Al-Lahu Lā 'Ilāha 'Illā Huwa Al-Ĥayyu Al-Qayyūmu 3-2 அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன். ‌ ‌ ‌‌ ‌ ‍‍
Nazzala `Alayka Al-Kitāba Bil-Ĥaqqi Muşaddiqāan Limā Bayna Yadayhi Wa 'Anzala At-Tawata Wa Al-'Injīla 3-3 (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்;. இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான். ‍‍‍‍‍‍‍‍‍‍‌ ‌ ‍‍‍‍ ‌‌‌‍‌‍‌
Min Qablu Hudan Lilnnāsi Wa 'Anzala Al-Furqāna ۗ 'Inna Al-Ladhīna Kafarū Bi'āyāti Allāhi Lahum `Adhābun Shadīdun Wa ۗ Allāhu `Azīzun Dhū Antiqāmin 3-4 இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான். ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு. அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான். ‍‌ ‍‍‍ ‍‌ ‍‍‍‍‍ ‌‌‌ ۗ ‍‍‍‍ ‌‌ ‍‍‍ ‍‍‌‍‍‍ۗ ‍‍‍‍‌‌ ‌‌‌ ‍‍‍‍
'Inna Allāha Lā Yakhfá `Alayhi Shay'un Al-'Arđi Wa Lā Fī As-Samā'i 3-5 வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை. ‍ ‌ ‍‍‍‍‌ ‍‍‍‍ ‍‌‍ ‌‌ ‍‍‍‍‍‍
Huwa Al-Ladhī Yuşawwirukum Al-'Arĥāmi Kayfa Yashā'u ۚ Lā 'Ilāha 'Illā Huwa Al-`Azīzu Al-Ĥakīmu 3-6 அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான். ‍‍‍‌ ‌‍‍‍‍‍‍ ‍‍‍‌‌ ۚ ‌ ‌ ‌‌ ‌ ‍‍‍‍‌
Huwa Al-Ladhī 'Anzala `Alayka Al-Kitāba Minhu 'Āyātun Muĥkamātun Hunna 'Ummu Al-Kitābi Wa 'Ukharu Mutashābihātun ۖ Fa'ammā Al-Ladhīna Fī Qulūbihim Zayghun Fayattabi`ūna Mā Tashābaha Minhu Abtighā'a Al-Fitnati Wa Abtighā'a Ta'wīlihi ۗ Wa Mā Ya`lamu Ta'wīlahu~ 'Illā Al-Lahu Wa ۗ Ar-sikhūna Fī Al-`Ilmi Yaqūlūna 'Āmannā Bihi Kullun Min `Indi Rabbinā ۗ Wa Mā Yadhdhakkaru 'Illā 'Ūlū Al-'Albābi 3-7 அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள். ‌‌‍ ‍‍‍‍‍ ‍‌‍‍‍ ‌‍‍‍‌ ‍‍‍ ‍‍ ‌‌‍‍‌ ‍‍‍ۖ ‍‌ ‍‍‍‍ ‌‍‌‌ ‍‍‍ ‌ ‍‌‍‍‍‍‍‍‌‌ ‍‍‍‍‌‌ ‌‍ ۗ ‌‌ ‌~ ‌‌ ۗ‌‍‍‍ ‍‍‍‍‍‍ ‌‍‍‍‍‌ ‍ ‌ ‍‌ ‍‌‍‍‍‌ ‌‍ۗ ‌‌ ‌ ‌‌ ‌‍‍
Rabbanā Lā Tuzigh Qulūbanā Ba`da 'Idh Hadaytanā Wa Hab Lanā Min Ladunka Raĥmatan ۚ 'Innaka 'Anta Al-Wahhābu 3-8 "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) ‌ ‌ ‍‌ ‌ ‌‌‌ ‌ ‌‍ ‌ ‍‌‍ ‌‍ ۚ‍ ‌‌
Rabbanā 'Innaka Jāmi`u An-Nāsi LiyawminRayba Fīhi ۚ 'Inna Allāha Lā Yukhlifu Al-Mī`āda 3-9 "எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்" (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்). ‌ ‌‍‍‍‍‌ ‌ ‌‍‍ ‍‍‍‍ۚ ‍ ‌ ‍‍‍
'Inna Al-Ladhīna Kafarū Lan Tughniya `Anhum 'Amwāluhum Wa Lā 'Awlāduhum Mina Allāhi Shay'āan ۖ Wa 'Ūlā'ika Hum Wa Qūdu An-Nāri 3-10 நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கமாட்டாது. இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர். ‍‍‍‍ ‌‌ ‍‌‍‍‍ ‍‌‍‍‍ ‌‌ ‌‌ ‌‌‌ ‍ ‍‍‍ۖ ‌‌‍‍‌‍‍‍ ‌‍‌‌ ‍‍
Kada'bi 'Āli Fir`awna Wa Al-Ladhīna Min Qablihim ۚ Kadhdhabū Bi'āyātinā Fa'akhadhahumu Allāhu Bidhunūbihim Wa ۗ Allāhu Shadīdu Al-`Iqābi 3-11 (இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும், இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தோரையும் போன்றே இருக்கிறது. அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்;. ஆகவே அவர்களை, அவர்களுடைய பாவங்களின் காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான் - அல்லாஹ் வேதனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன். ‌ ‌ ‍‍‍‍‍ ‍‌ ‍‍ۚ ‌ ‌ ‍ۗ ‍‍‍‍‌ ‍‍
Qul Lilladhīna Kafarū Satughlabūna Wa Tuĥsharūna 'Ilá Jahannama ۚ Wa Bi'sa Al-Mihādu 3-12 நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக ‍‍‍‍ ‌‌ ‍‍‍‍‍‍‍‍‍‌ ‌‌ ‍‍‍ۚ
Qad Kāna Lakum 'Āyatun Fī Fi'atayni At-Taqatā ۖ Fi'atun Tuqātilu Fī Sabīli Allāhi Wa 'Ukhrá Kāfiratun Yarawnahum Mithlayhim Ra'ya Al-`Ayni Wa ۚ Allāhu Yu'uayyidu Binaşrihi Man Yashā'u ۗ 'Inna Fī Dhālika La`ibratan Li'wlī Al-'Abşāri 3-13 (பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது. ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது. பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது. நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்;. இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்;. நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது. ‌ ‍‍‍ ‌‌‌ ‍‍‍‍‍‍‌ ۖ‌ ‍‍‍‍ ‍‍‍‍‍ ‌‌‍‌‌ ‍‌ ‍‌ ‌‍‍‍ۚ ‌ ‍‍‍ ‍‌‍‍‌‌ ۗ ‌ ‍‍‍‍‍ ‍‍ ‍‍‍‍
Zuyyina Lilnnāsi Ĥubbu Ash-Shahawāti Mina An-Nisā' Wa Al-Banīna Wa Al-Qanāţīri Al-Muqanţarati Mina Adh-Dhahabi Wa Al-Fiđđati Wa Al-Khayli Al-Musawwamati Wa Al-'An`āmi Wa Al-Ĥarthi ۗ Dhālika Matā`u Al-Ĥayāati Ad-Dunyā Wa ۖ Allāhu `Indahu Ĥusnu Al-Ma'ābi 3-14 பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்;ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்;. அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு. ‍‍‍‍ ‍‍‌ ‍‍‍‍‌‌ ‌‍‍‍‍ ‌‍‍‍‍‍‍‌ ‍‍‍‌‍‍‍‍‍‍ ‍ ‌‍‍‍ ‌‍‍‍‍‍‍ ۗ ‌ ‍‍‍ ‍‍ ‍‌‍‌ ۖ ‍‌‍‍
Qul 'A'uunabbi'ukum Bikhayrin Min Dhālikum ۚ Lilladhīna Attaqaw `Inda Rabbihim Jannātun Tajrī Min Taĥtihā Al-'Anhāru Khālidīna Fīhā Wa 'Azwājun Muţahharatun Wa Riđwānun Mina Allāhi Wa ۗ Allāhu Başīrun Bil-`Ibādi 3-15 (நபியே!) நீர் கூறும்; "அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான். ‍ ‌‌ ‍‍‍‍‍‌ ‍‌ۚ ‍‍‍‍‍‍‌‌ ‍‌‍‍‍‌ ‌‍‍‍‍‍‌ ‍‍‍ ‍‌‍‍‍‍‌‌ ‍‍‍‍ ‌ ‌‌‌‌‍‍‌‌ ‍‍‍‍‍‌ ‌‍‍‍‍‌ۗ‍‍‍‍‌ ‍
Al-Ladhīna Yaqūlūna Rabbanā 'Innanā 'Āmannā Fāghfir Lanā Dhunūbanā Wa Qinā `Adhāba An-Nāri 3-16 இத்தகையோர் (தம் இறைவனிடம்) ‍‍‍‍ ‍‍‍‍‍‍‍ ‌‍‌ ‌‍‍‌ ‌‍‍‍‍‌ ‍‍‌ ‌ ‌‌ ‌‍‍‌ ‍‍‌ ‍‍
Aş-Şābirīna Wa Aş-Şādiqīna Wa Al-Qānitīna Wa Al-Munfiqīna Wa Al-Mustaghfirīna Bil-'Asĥāri 3-17 (இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹவுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர். ‍‍‍‍‍‍‍‍ ‌‍‍‍‌‍‍‍ ‌‍‍‍‍‍‍‍‍ ‌‍‌‍‍‍‍‍‍‍‍‍ ‌‍‍‍‍‍‍‍‍ ‍
Shahida Allāhu 'Annahu Lā 'Ilāha 'Illā Huwa Wa Al-Malā'ikatu Wa 'Ūlū Al-`Ilmi Qā'imāan Bil-Qisţi ۚ Lā 'Ilāha 'Illā Huwa Al-`Azīzu Al-Ĥakīmu 3-18 அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். ‍ ‌ ‌ ‌ ‌‌ ‌ ‌ ‌‌‍‍ ‌ ‍‍‍‍‍ ۚ ‌ ‌ ‌‌ ‌ ‍‍‍‍‌
'Inna Ad-Dīna `Inda Allāhi Al-'Islāmu ۗ Wa Mā Akhtalafa Al-Ladhīna 'Ūtū Al-Kitāba 'Illā Min Ba`di Mā Jā'ahumu Al-`Ilmu Baghyāan Baynahum ۗ Wa Man Yakfur Bi'āyāti Allāhi Fa'inna Allāha Sarī`u Al-Ĥisābi 3-19 நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்;. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்;. எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். ‍‍‍‍ ‍‌‍‍‍‌ ۗ ‌‌ ‍‍‍‍ ‌‍‍‍‍ ‌‌ ‍‌ ‌ ‌ ‍‍‍‍‍ۗ ‌‍‌ ‌ ‍‍‍ ‍ ‍‍‍‍
Fa'in Ĥājjūka Faqul 'Aslamtu Wajhiya Lillāh Wa Mani Attaba`ani Wa Qul ۗ Lilladhīna 'Ūtū Al-Kitāba Wa Al-'Ummīyīna 'A'aslamtum Fa'in ۚ 'Aslamū Faqadi Ahtadaw Wa 'In ۖ Tawallaw Fa'innamā `Alayka Al-Balāghu Wa Allāhu ۗ Başīrun Bil-`Ibādi 3-20 (இதற்கு பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக "நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)" தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்; "நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா?" என்று கேளும்;. அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்;. ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான். ‍‍‍‍‍‍‍ ‌ ‌ ۗ ‌‍‍‍‍‍ ‌‍‍‍‍‍‍‍‍‍‍ ‌‌ ۚ‌ ‍‍‍‍‌ ‌‌‌ ۖ ‌‌‌ ‌‌ ‍‌ ‍‍‍ ۗ‍‍‍‍‌ ‍
'Inna Al-Ladhīna Yakfurūna Bi'āyāti Allāhi Wa Yaqtulūna An-Nabīyīna Bighayri Ĥaqqin Wa Yaqtulūna Al-Ladhīna Ya'murūna Bil-Qisţi Mina An-Nāsi Fabashshirhum Bi`adhābin 'Alīmin 3-21 "நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும், மனிதர்களிடத்தில் நீதமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு" என்று (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! ‍‍‍‍‍‌‍‍ ‍ ‌‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‌ ‍‌ ‌‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‌‍‍‍‍ ‍‍‍‍ ‍‍‌
'Ūlā'ika Al-Ladhīna Ĥabiţat 'A`māluhum Ad-Dunyā Wa Al-'Ākhirati Wa Mā Lahum Minşirīna 3-22 அவர்கள் புரிந்த செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் (பலனற்றவையாக) அழிந்து விட்டன. இன்னும் அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமிலர். ‍‍‌‍‍‍ ‍‍‍‍ ‍‍‍‍ ‌ ‍‌‍‌ ‌‍‍ ‌‌ ‍‌
'Alam Tara 'Ilá Al-Ladhīna 'Ūtū Naşībāan Mina Al-Kitābi Yud`awna 'Ilá Kitābi Allāhi Liyaĥkuma Baynahum Thumma Yatawallá Farīqun Minhum Wa Hum Mu`rūna 3-23 வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான யூதர்)களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களிடையே (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவார் (இதைப்) புறக்கணித்து விலகிக் கொண்டனர். ‌ ‌‌ ‍‍‍‍ ‌‍‍‌ ‍‍‍‍‍ ‌‌ ‍‍‍ ‍ ‍ ‌ ‍‍‍‍‌ ‍‌‍‍‍ ‌ ‍‍‍
Dhālika Bi'annahum Qālū Lan Tamassanā An-Nāru 'Illā 'Ayyāmāan Ma`dūdātin ۖ Wa Gharrahum Fī Dīnihim Mā Kānū Yaftarūna 3-24 இதற்குக் காரணம்; எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான.; (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றி விட்டது. ‌ ‍‌‍‍‍‍‌‌ ‌‌ ‌‌ ‌‌‍‍‌ۖ ‌‍‍‍ ‌ ‌ ‌ ‌
Fakayfa 'Idhā Jama`nāhum LiyawminRayba Fīhi Wa Wuffiyat Kullu Nafsin Mā Kasabat Wa Hum Lā Yužlamūna 3-25 சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து, ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். ‍‍‍ ‌‌‌‌ ‍‌ ‌ ‌‍‍ ‍‍‍‍‍ ‌‌ ‌ ‌ ‌ ‌ ‍‍‍
Quli Allāhumma Mālika Al-Mulki Tu'utī Al-Mulka Man Tashā'u Wa Tanzi`u Al-Mulka Mimman Tashā'u Wa Tu`izzu Man Tashā'u Wa Tudhillu Man Tashā'u ۖ Biyadika Al-Khayru ۖ 'Innaka `Alá Kulli Shay'in Qadīrun 3-26 (நபியே!) நீர் கூறுவீராக ‍‍ ‍‌‍‍‌‌ ‌‍‌‍‍‍‍‍‌‍‍‌‌ ‌‌ ‍‌‍‍‌‌ ‌ ‍‌‍‍‌‌ ۖ ‍‍‍‍‍‌ ۖ‍ ‌ ‍
Tūliju Al-Layla Fī An-Nahāri Wa Tūliju An-Nahāra Al-Layli ۖ Wa Tukhriju Al-Ĥayya Mina Al-Mayyiti Wa Tukhriju Al-Mayyita Mina Al-Ĥayyi ۖ Wa Tarzuqu Man Tashā'u Bighayri Ĥisābin 3-27 (நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்;. நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்;. மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்;. நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்;. மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய். ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‌ ‌ ‍‍‍‍‍‍‌‍‍‍‍‍ۖ ‌‍‍‍ ‌‍‍‍ ۖ ‌‌‍ ‍‌‍‍‌‌ ‍‍‍‍‍‍‍‌
Lā Yattakhidhi Al-Mu'uminūna Al-Kāfirīna 'Awliyā'a Min Dūni Al-Mu'uminīna ۖ Wa Man Yaf`al Dhālika Falaysa Mina Allāhi Fī Shay'in 'Illā 'An Tattaqū Minhum Tuqāatan ۗ Wa Yuĥadhdhirukumu Allāhu Nafsahu ۗ Wa 'Ilá Allāhi Al-Maşīru 3-28 முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது. ‌ ‍‍‍‍‌ ‍‍ ‍‍‍‍ ‌‌‍‍‍‌‌ ‍‌‍‍‌ ‍‍‍ۖ ‌‍‌ ‌ ‍‍‍‍ ‍‌ ‌‌ ‌‌‍‍‌ ‍‌‍‍‍ ‍‍‍ ۗ ‌‌ ‍ ‍ ۗ ‌‌‌ ‍‍
Qul 'In Tukhfū Mā Fī Şudūrikum 'Aw Tubdūhu Ya`lamhu Allāhu ۗ Wa Ya`lamu Mā Fī As-Samāwāti Wa Mā Fī Al-'Arđi Wa ۗ Allāhu `Alá Kulli Shay'in Qadīrun 3-29 (நபியே!) நீர் கூறும்; "உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்." ‍ ‌‌‍‍‌ ‌ ‍‌ ‌‌‌ ‍‍‍‍‍‌ ۗ ‌ ‌ ‍‌‍‍‌ ‌‌ ‌‍ ۗ ‌ ‍
Yawma Tajidu Kullu Nafsin Mā `Amilat Min Khayrin Muĥđaan Wa Mā `Amilat Min Sū'in Tawaddu Law 'Anna Baynahā Wa Baynahu~ 'Amadāan Ba`īdāan ۗ Wa Yuĥadhdhirukumu Allāhu Nafsahu Wa ۗ Allāhu Ra'ūfun Bil-`Ibādi 3-30 ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;. அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்;. இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான். ‌ ‌ ‍‌ ‍‍‌ ‍‍‍‍‌‌ ‌‌ ‍‌‍‍‌‌‌ ‌‌ ‌ ‌ ‌ ‌~ ‌‌‌ ‌ۗ ‌‌ ‍ ‍ ۗ ‌‍‍‍‌‌ ‍
Qul 'In Kuntum Tuĥibbūna Allāha Fa Attabi`ūnī Yuĥbibkumu Allāhu Wa Yaghfir Lakum Dhunūbakum Wa ۗ Allāhu Ghafūrun Raĥīmun 3-31 (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். ‍ ‌‌ ‍‌‍‍‍ ‍‍‍ ‍ ‍‍‍‍ ‌‍‍‍‍‍‌ ‌ ۗ ‍‍‍‍‌ ‌‍
Qul 'Aţī`ū Allaha Wa Ar-Rasūla ۖ Fa'in Tawallaw Fa'inna Allāha Lā Yuĥibbu Al-Kāfirīna 3-32 (நபியே! இன்னும்) நீர் கூறும்; "அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் வழிப்படுங்கள்." ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை. ‍ ‌‍‍ ‌‍‍ ۖ ‌‌ ‍ ‌
'Inna Allāha Aşţafá 'Ādama Wa Nūĥāan Wa 'Āla 'Ibhīma Wa 'Āla `Imn `Alá Al-`Ālamīna 3-33 ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான். ‍‍‍‍‌ ‌‌ ‌‌ ‌‌ ‌‍‍‌‍‍‍‍‍ ‌‌ ‍‌ ‌
Dhurrīyatan Ba`đuhā Min Ba`đin Wa ۗ Allāhu Samī`un `Alīmun 3-34 (அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். ‌ ‍‍‍‍‌ ‍‌ۗ‍‍‍
'Idh Qālati Amra'atu `Imrāna Rabbi 'Innī Nadhartu Laka Mā Fī Baţnī Muĥarraan Fataqabbal Minnī ۖ 'Innaka 'Anta As-Samī`u Al-`Alīmu 3-35 இம்ரானின் மனைவி; "என் இரைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்;. எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்" என்று கூறியதையும். ‌‌ ‌ ‍‍‌ ‌‍‍ ‌ ‌ ‍‍‍‍ ‍‌‌‌‌ ‍‍‍‍ ‍‍‍ ۖ‍ ‌‌‍‍‍‍‍
Falammā Wađa`at/hā Qālat Rabbi 'Innī Wađa`tuhā 'Unthá Wa Allāhu 'A`lamu Bimā Wađa`at Wa Laysa Adh-Dhakaru Kāl'unthá ۖ Wa 'Innī Sammaytuhā Maryama Wa 'Innī 'U`īdhuhā Bika Wa Dhurrīyatahā Mina Ash-Shayţāni Ar-Rajīmi 3-36 (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்; "என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கின்றேன்" எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்;. அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்;. ஆண், பெண்ணைப் போலல்ல. (மேலும் அந்தத்தாய் சொன்னாள்;) "அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்;. இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன். ‍‍‍‌ ‌‍‍‌ ‍ ‌‍‍ ‌‍‍‍‌ ‌‌‍‌ ‌ ‌ ‌ ‌‍‍ ‌‍‍‍‍‌ ‌‍‌ ۖ ‌‌‍ ‍‍‍‍‌ ‌‌ ‌‌ ‌‌‌‌ ‍‍‍‍
Fataqabbalahā Rabbuhā Biqabūlin Ĥasanin Wa 'Anbatahā Nabātāan Ĥasanāan Wa Kaffalahā Zakarīyā ۖ Kullamā Dakhala `Alayhā Zakarīyā Al-Miĥrāba Wajada `Indahā Rizqāan ۖ Qāla Yā Maryamu 'Anná Laki Hādhā ۖ Qālat Huwa Min `Indi Allāhi ۖ 'Inna Allāha Yarzuqu Man Yashā'u Bighayri Ĥisābin 3-37 அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்;. அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்;. அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், "மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?" என்று அவர் கேட்டார்; "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்" என்று அவள்(பதில்) கூறினாள். ‍‌ ‌‍‌ ‍‍‍‍‍‍‍ ‌ ‌‌‌‍‌ ‌ ‌ ‌‌ ‌‍ۖ ‌ ‌‍‍ ‌ ‌‍‍‌ ‌‌ ‍‌‍‍‍‌ ‌‍‍‌ۖ ‌ ‌‍‌ ‌‌ ۖ ‍ ‌ ‍‌ ‍‌‍‍‍‌ ۖ ‍ ‌‍ ‍‌‍‍‌‌ ‍‍‍‍‍‍‍‌
Hunālika Da`ā Zakarīyā Rabbahu ۖ Qāla Rabbi Hab Lī Min Ladunka Dhurrīyatan Ţayyibatan ۖ 'Innaka Samī`u Ad-Du`ā'i 3-38 அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார்; "இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்." ‌‌ ‌‍‌ ‌‍ ۖ ‌‍ ‍‌‍ ‌‌‌ ‍‌ ۖ‍ ‍‍‍‍‍‍‍‍
Fanādat/hu Al-Malā'ikatu Wa Huwa Qā'imun Yuşallī Fī Al-Miĥrābi 'Anna Allāha Yubashshiruka Biyaĥyá Muşaddiqāan Bikalimatin Mina Allāhi Wa Sayyidāan Wa Ĥaşūan Wa Nabīyāan Mina Aş-Şāliĥīna 3-39 அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்;. அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர். ‌‌ ‌ ‍‍‍‍‌ ‍ ‌ ‍‍‍‍‍‍‍‍ ‌‌‌ ‌‍‍‍‍‌‌‌ ‌‍‍
Qāla Rabbi 'Anná Yakūnu Lī Ghulāmun Wa Qad Balaghaniya Al-Kibaru Wa Amra'atī `Āqirun ۖ Qāla Kadhālika Allāhu Yaf`alu Mā Yashā'u 3-40 அவர் கூறினார்; "என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது. என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;" அதற்கு (இறைவன்), "அவ்வாறே நடக்கும்;, அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்" என்று கூறினான். ‌‍‍‌ ‍‍‍ ‌ ‌‍‌ ‍‍‍‌ ‌‍‌ۖ ‍ ‌ ‍‍‍
Qāla Rabbi Aj`al Lī 'Āyatan ۖ Qāla 'Āyatuka 'Allā Tukallima An-Nāsa Thalāthata 'Ayyāmin 'Illā Ramzāan ۗ Wa Adhkur Rabbaka Kathīrāan Wa Sabbiĥ Bil-`Ashīyi Wa Al-'Ibkāri 3-41 "என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!" என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), "உமக்கு அறிகுறியாவது, மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!" என்று கூறினான். ‌‍ ‍ ‍ ‌‌ ۖ ‌ ‌‌ ‍‍‍‍ ‌‍‍‍‌ ‌‌ ‌‍ۗ‌‌ ‌‍‌ ‌ ‍
Wa 'Idh Qālati Al-Malā'ikatu Yā Maryamu 'Inna Allāha Aşţafāki Wa Ţahharaki Wa Aşţafāki `Alá Nisā'i Al-`Ālamīna 3-42 (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்;. உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்" (என்றும்). ‌‌‌ ‌ ‌ ‍‍‍‍‍‍ ‌‍‍‍‍‍‍‍‍‍ ‌ ‍‍‍‌‌
Yā Maryamu Aqnutī Lirabbiki Wa Asjudī Wa Arka`ī Ma`a Ar-ki`īna 3-43 "மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக" (என்றும்) கூறினர். ‍‍‍ ‍
Dhālika Min 'Nbā'i Al-Ghaybi Nūĥīhi 'Ilayka ۚ Wa Mā Kunta Ladayhim 'Idh Yulqūna 'Aqlāmahum 'Ayyuhum Yakfulu Maryama Wa Mā Kunta Ladayhim 'Idh Yakhtaşimūna 3-44 (நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்;. மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. ‍‌ ‌‌‍‍‍‍‌‌ ‍‍‍‍‍ ‍‍‍‍‍ ‌‍‍‍ۚ ‌‌ ‍‌‍‍‍ ‌‌‌ ‍‍‍‍‍‍ ‌ ‌‌ ‍‌‍‍‍ ‌‌‌ ‍‍‍‍‍‍‍
'Idh Qālati Al-Malā'ikatu Yā Maryamu 'Inna Allāha Yubashshiruki Bikalimatin Minhu Asmuhu Al-Masīĥu `Īsá Abnu Maryama Wajīhāan Ad-Dunyā Wa Al-'Ākhirati Wa Mina Al-Muqarrabīna 3-45 மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;. ‌‌ ‌ ‍‌‍‍ ‍‍‍‍ ‌ ‍ ‌‌‍‌‍‌ ‌‍‍‍‍
Wa Yukallimu An-Nāsa Fī Al-Mahdi Wa Kahlāan Wa Mina Aş-Şāliĥīna 3-46 "மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்." ‍‍‍‍ ‌ ‌‌ ‌ ‍‍
Qālat Rabbi 'Anná Yakūnu Lī Waladun Wa Lam Yamsasnī Basharun ۖ Qāla Kadhāliki Allāhu Yakhluqu Mā Yashā'u ۚ 'Idhā Qá 'Aman Fa'innamā Yaqūlu Lahu Kun Fayakūnu 3-47 (அச்சமயம் மர்யம்) கூறினார்; "என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?" (அதற்கு) அவன் கூறினான்; "அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது." ‍ ‌‍‍‌ ‍‍‍‌ ‌ ‌ۖ ‍ ‍‍‍‍‍ ‌ ‍‍‍‌‌ ۚ ‌‌‌‌ ‍‍‌ ‌‌‌‍‌ ‍‍‍ ‍‌
Wa Yu`allimuhu Al-Kitāba Wa Al-Ĥikmata Wa At-Tawata Wa Al-'Injīla 3-48 இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான். ‍‍‍‌‍‌
Wa Rasūlāan 'Ilá Banī 'Isrā'īla 'Annī Qad Ji'tukum Bi'āyatin Min Rabbikum ۖ 'Annī 'Akhluqu Lakum Mina Aţ-Ţīni Kahay'ati Aţ-Ţayri Fa'anfukhu Fīhi Fayakūnu Ţayan Bi'idhni Allāhi ۖ Wa 'Ubri'u Al-'Akmaha Wa Al-'Abraşa Wa 'Uĥyi Al-Mawtá Bi'idhni Allāhi ۖ Wa 'Unabbi'ukum Bimā Ta'kulūna Wa Mā Taddakhirūna Fī Buyūtikum ۚ 'Inna Fī Dhālika La'āyatan Lakum 'In Kuntum Mu'uminyna 3-49 இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) "நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்). ‌‍‌ ‌‌ ‍‍‍‌‍‍‍‍ ‌‌ ‍‌ ‌‍ ۖ ‌‍‍‍ ‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍‍‌ ‌‍‍‍‍‍‍ ‍‍‍ ‍‌‌ ‌ ۖ ‌‌ ‍‍ ‌‌ ‌ ‌ ۖ ‌‌ ‌ ‍‍‍ ‌‌ ‍‍‍‍‍‌ ۚ ‌ ‌‌ ‍‌‍‍‍ ‍‍‍
Wa Muşaddiqāan Limā Bayna Yadayya Mina At-Tawati Wa Li'uĥilla Lakum Ba`đa Al-Ladhī Ĥurrima `Alaykum ۚ Wa Ji'tukum Bi'āyatin Min Rabbikum Fa Attaqū Allaha Wa 'Aţī`ūni 3-50 "எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்;, ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்." ‍‍‍‍‌ ‌ ‍‍‍‍‌‍‌ ‌ ‍ ۚ‌ ‍‌ ‌‍‍‍‍ ‌‌‍
'Inna Allāha Rabbī Wa Rabbukum Fā`budūhu ۗdhā Şirāţun Mustaqīmun 3-51 "நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்." ‍ ‌‍ ‌‌‍ ‍‍‌ ۗ ‌‌ ‍‌‌ ‍‍‍
Falammā 'Aĥassa `Īsá Minhumu Al-Kufra Qāla Man 'Anşārī 'Ilá Allāhi ۖ Qāla Al-Ĥawārīyūna Naĥnu 'Anşāru Allāhi 'Āmannā Billāhi Wa Ash/had Bi'annā Muslimūna 3-52 அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர். ‍‍‌ ‌ ‌ ‍‌‍‍ ‍‌ ‌‌‍‍‍‍ ‌‌ ۖ ‍‍ ‌‌‍‍‍‍‌‌ ‍ ‌‍‍‍‍‌ ‍‍ ‌‍‌
Rabbanā 'Āmannā Bimā 'Anzalta Wa Attaba`nā Ar-Rasūla Fāktubnā Ma`a Ash-Shāhidīna 3-53 "எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) ‌ ‌‍‍‍‍‌ ‍‌ ‌‌‍ ‌‍‍‍‍‍‌
Wa Makarū Wa Makara Allāhu Wa ۖ Allāhu Khayru Al-Mākirīna 3-54 (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான்;. தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். ‌ ‌‍ۖ ‍‍‍‌
'Idh Qāla Allāhu Yā `Īsá 'Innī Mutawaffīka Wa fi`uka 'Ilayya Wa Muţahhiruka Mina Al-Ladhīna Kafarū Wa Jā`ilu Al-Ladhīna Attaba`ūka Fawqa Al-Ladhīna Kafarū 'Ilá Yawmi Al-Qiyā ۖ Mati Thumma 'Ilayya Marji`ukum Fa'aĥkumu Baynakum Fīmā Kuntum Fīhi Takhtalifūna 3-55 "ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! ‌‌ ‍ ‍‌ ‌‍ ‍‍‍‍‍ ‌‌‍‌ ‌ ‌‍‍‍‍‍‍‍ ‌‌ ‌ ‍‍‍‍‍ ‍‍‍‌ ‌‌ ‍ ‍‍‍ ‍ ۖ ‌ ‌ ‍‌‍‍‍ ‍‍‍‍‍ ‍‍‍
Fa'ammā Al-Ladhīna Kafarū Fa'u`adhdhibuhum `Adhābāan Shadīdāan Ad-Dunyā Wa Al-'Ākhirati Wa Mā Lahum Minşirīna 3-56 எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்;. அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். ‍‌ ‍‍‍‍ ‌‌ ‌‌‌ ‌‌‍‌‍‌ ‌‍‍ ‌‌ ‍‌
Wa 'Ammā Al-Ladhīna 'Āmanū Wa `Amilū Aş-Şāliĥāti Fayuwaffīhim 'Ujūrahum Wa ۗ Allāhu Lā Yuĥibbu Až-Žālimīna 3-57 ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்கு நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான். ‍‌ ‍‍‍‍ ‌‌ ‌‍‍‍‍‍‍ ‌‌‍ ۗ‍‍
Dhālika Natlūhu `Alayka Mina Al-'Āyāti Wa Adh-Dhikri Al-Ĥakīmi 3-58 (நபியே!) நாம் உம் மீது ஓதிக்காட்டிய இவை (நற்சான்றுகளைக் கொண்ட) இறை வசனங்களாகவும்;, ஞானம் நிரம்பிய நற்செய்தியாகவும் இருக்கின்றன. ‍‍‍‍‍‍‍‍‍‍‌
'Inna Mathala `Īsá `Inda Allāhi Kamathali 'Ādama ۖ Khalaqahu Min Turābin Thumma Qāla Lahu Kun Fayakūnu 3-59 அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் "குன்" (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார். ‌ ‍‌‍‍‍‌ ‍ ‌‌ ۖ ‍‍‍‍ ‍‌‍‌‌ ‍ ‍‌
Al-Ĥaqqu Min Rabbika Falā Takun Mina Al-Mumtarīna 3-60 (நபியே! ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்;. எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர். ‍‌ ‌‍ ‌ ‍‌
Faman Ĥājjaka Fīhi Min Ba`di Mā Jā'aka Mina Al-`Ilmi Faqul Ta`ālaw Nad`u 'Abnā'anā Wa 'Abnā'akum Wa Nisā'anā Wa Nisā'akum Wa 'Anfusanā Wa 'Anfusakum Thumma Nabtahil Fanaj`al La`nata Allāhi `Alá Al-Kādhibīna 3-61 (நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்; "வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று நாம் பிரார்த்திப்போம்!" என நீர் கூறும். ‍‌‍‍‍‍‍‍ ‍‌ ‌ ‌ ‍‍‍‍‍‍ ‌‌ ‍‍‍‍‍‌‌ ‌‌‍‍‍‍‌ ‌‍‍‍‌‌ ‌‍‍‍‌ ‌‌‌‍‌ ‌‌‌‍ ‍‍‍‍ ‍‍‍‍ ‌
'Inna Hādhā Lahuwa Al-Qaşaşu Al-Ĥaqqu ۚ Wa Mā Min 'Ilahin 'Illā Al-Lahu ۚ Wa 'Inna Allāha Lahuwa Al-`Azīzu Al-Ĥakīmu 3-62 நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு. அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன்; மிக்க ஞானமுடையோன். ‌‌ ‌ ‍‍‍‍ ۚ ‌‌ ‍‌ ‌‌‌ ‌‌ ۚ ‌‌ ‍ ‌ ‍‍‍‍‌
Fa'in Tawallaw Fa'inna Allāha `Alīmun Bil-Mufsidīna 3-63 அவர்கள் புறக்கணித்தால் - திடமாக அல்லாஹ் (இவ்வாறு) குழப்பம் செய்வோரை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். ‌‌ ‍ ‍‍‍‍‍‌‌ ‍
Qul Yā 'Ahla Al-Kitābi Ta`ālaw 'Ilá Kalimatin Sawā'in Baynanā Wa Baynakum 'Allā Na`buda 'Illā Al-Laha Wa Lā Nushrika Bihi Shay'āan Wa Lā Yattakhidha Ba`đunā Ba`đāan 'Arbābāan Min Dūni Allāhi ۚ Fa'in Tawallaw Faqūlū Ash/hadū Bi'annā Muslimūna 3-64 (நபியே! அவர்களிடம்) "வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்;. அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; "நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். ‍ ‍‌ ‌ ‍‍ ‌‌ ‌‌ ‌‍‍‌‌ ‌ ‌ ‌‌ ‌ ‌‌ ‍ ‌‌ ‍‍‍‌ ‌‌ ‍‍‍‍‌ ‍‍‍‍‌ ‍‍‍‍‌ ‌‌‌ ‍‌‍‍‌ ۚ ‌‌ ‍‍‍‍‌
Yā 'Ahla Al-Kitābi Lima Tuĥājjūna Fī 'Ibhīma Wa Mā 'Unzilati At-Tawatu Wa Al-'Injīlu 'Illā Min Ba`dihi~ ۚ 'Afalā Ta`qilūna 3-65 வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீனாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா? ‌ ‌ ‍‍‍‍‍‍‍‍‌‍‍‍‍‍ ‌‍‌ ‌‌‍‌‍‌‍‍‍‍‍‍ ‌‌ ‍‌ ~‍ ۚ ‌‌ ‍‍‍
Hā'antum Hā'uulā' Ĥājajtum Fīmā Lakum Bihi `Ilmun Falima Tuĥājjūna Fīmā Laysa Lakum Bihi `Ilmun Wa Allāhu ۚ Ya`lamu Wa 'Antum Lā Ta`lamūna 3-66 உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். ‍‍‌‌‍ ‍‍‍‌‌‌ ‍‍‍‍ ‌ ‍‌ ‍‍‍‍‍ ‌ ‍‍‍‍ ‍ ‌ ‌ ۚ ‌‌‌‍ ‌
Mā Kāna 'Ibhīmu Yahūdīyāan Wa Lā Naşnīyāan Wa Lakin Kāna Ĥanīfāan Muslimāan Wa Mā Kāna Mina Al-Mushrikīna 3-67 இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்;. அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை. ‌ ‍‍‍‍‍‌‍‍‍‍‍ ‌‌ ‌‌ ‍‍‍‌ ‌‍‌‍‍ ‌ ‌‌ ‍‍‍
'Inna 'Awlá An-Nāsi Bi'ibhīma Lalladhīna Attaba`ūhu Wa Hadhā An-Nabīyu Wa Al-Ladhīna 'Āmanū Wa ۗ Allāhu Wa Līyu Al-Mu'uminīna 3-68 நிச்சயமாக மனிதர்களி;ல் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்;. மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான். ‌‌‌ ‍‍‍‍ ‍‍‌‍‍‍‍‍‍‍‍‍ ‌‌‌ ‍‍‍ ‌‍‍‍‍ ‌ۗ
Waddat Ţā'ifatun Min 'Ahli Al-Kitābi Law Yuđillūnakum Wa Mā Yuđillūna 'Illā 'Anfusahum Wa Mā Yash`urūn 3-69 வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது. எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை. ‌ ‍‌‍‍ ‌ ‍‍‍‍ ‌‌ ‍‍‍‍‍‍‍ ‌‌ ‌‌‍ ‌‌ ‌
Yā 'Ahla Al-Kitābi Lima Takfurūna Bi'āyāti Allāhi Wa 'Antum Tash/hadūna 3-70 வேதத்தையுடையவர்களே! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்? ‌ ‌ ‍‍ ‍‍‌‍‍ ‍ ‌‌‌‍ ‌
Yā 'Ahla Al-Kitābi Lima Talbisūna Al-Ĥaqqa Bil-Bāţili Wa Taktumūna Al-Ĥaqqa Wa 'Antum Ta`lamūna 3-71 வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? ‌ ‌ ‍‍‍‍ ‍ ‌‍‍‍ ‌‌‌
Wa Qālat Ţā'ifatun Min 'Ahli Al-Kitābi 'Āminū Bial-Ladhī 'Unzila `Alá Al-Ladhīna 'Āmanū Wajha An-Nahāri Wa Akfurūkhirahu La`allahum Yarji`ūna 3-72 வேதத்தையுடையோரில் ஒரு சாரார் (தம் இனத்தாரிடம்); "ஈமான் கொண்டோர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தைக் காலையில் நம்பி, மாலையில் நிராகரித்து விடுங்கள்;. இதனால் (ஈமான் கொண்டுள்ள) அவர்களும் ஒரு வேளை (அதை விட்டுத்) திரும்பி விடக்கூடும்" என்று கூறுகின்றனர். ‌ ‍‌‍‍‌ ‍ ‌‌‍ ‌ ‍‍‍‍ ‌‌ ‌‍‍‍‍‍‍‍‍‌ ‌‌ ‌‍‍‍
Wa Lā Tu'uminū 'Illā Liman Tabi`a Dīnakum Qul 'Inna Al-Hudá Hudá Allāhi 'An Yu'utá 'Aĥadun Mithla Mā 'Ūtītum 'Aw Yuĥājjūkum `Inda Rabbikum ۗ Qul 'Inna Al-Fađla Biyadi Allāhi Yu'utīhi Man Yashā'u Wa ۗ Allāhu Wāsi`un `Alīmun 3-73 "உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்" (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்;. உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும் கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?" (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது. அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக. ‌ ‍‌ ‌‌ ‍‌‍ ‌ ‌‌ ‌‌ ‍ ‌‌‌ ‌‌ ‍‌ ‌‍‍‌ ‌‌‌ ‍‍‍ ‍‌‍‍‍‌ ‌‍ ۗ ‍ ‌ ‍‍‍ ‌ ‍ ‍‍‍‍‍ ‍‌‍‍‌‌ ۗ ‌‌
Yakhtaşşu Biraĥmatihi Man Yashā'u Wa ۗ Allāhu Dhū Al-Fađli Al-`Ažīmi 3-74 அவன் தன் ரஹ்மத்தை(அருளை)க் கொண்டு தான் நாடியோரைச் சொந்தமாக்கிக் கொள்கின்றான்;. இன்னும் அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன். ‍‍ ‍‌‍‍‌‌ ۗ ‌‌‌ ‍‍‍‍
Wa Min 'Ahli Al-Kitābi Man 'In Ta'manhu Biqinţārin Yu'uaddihi~ 'Ilayka Wa Minhum Man 'In Ta'manhu Bidīnārin Lā Yu'uaddihi~ 'Ilayka 'Illā Mā Dumta `Alayhi Qā'imāan ۗ Dhālika Bi'annahum Qālū Laysa `Alaynā Fī Al-'Ummīyīna Sabīlun Wa Yaqūlūna `Alá Allāhi Al-Kadhiba Wa Hum Ya`lamūna 3-75 (நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்;. அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லாமல், கேட்கும்போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்;. அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு (காசை) தீனாரை ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள். அதற்குக் காரணம், 'பாமரர்களிடம் (இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும்) நம்மை குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லை' என்று அவர்கள் கூறுவதுதான்;. மேலும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள். ‍‌‍‍ ‍‌ ‌‌ ‍‌‍‍‍ ‍‍‍‍‌‍‍‍‍‌ ‌ ‌‍‍‍‍ ‌‍‌‍‍‍ ‍‌ ‌‌ ‍‌‍‍‍ ‍‍‍‌ ‌ ‌ ‌‍‍‍‍ ‌‌ ‌ ‌ ‍‍‍ۗ‌ ‍‍‍‍ ‌ ‍‍‍‍‍‍ ‍‍‍‍‌ ‌‍‍‍‍‍‍‍
Balá Man 'Awfá Bi`ahdihi Wa Attaqá Fa'inna Allāha Yuĥibbu Al-Muttaqīna 3-76 அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்). நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான். ‌ ‍‌ ‌‌‌ ‍‍‍‌ ‍‍
'Inna Al-Ladhīna Yashtarūna Bi`ahdi Allāhi Wa 'Aymānihim Thamanāan Qalīlāan 'Ūlā'ika Lā Khalāqa Lahum Al-'Ākhirati Wa Lā Yukallimuhumu Allāhu Wa Lā Yanžuru 'Ilayhim Yawma Al-Qiyāmati Wa Lā Yuzakkīhim Wa Lahum `Adhābun 'Alīmun 3-77 யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்;. இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான். அவர்களைப்(பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான்;. மேலும் அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையும் உண்டு. ‍‍‍‍‍‌‍ ‌‌ ‌‍‌ ‌‍‍‌‍‍‍‍‍ ‍‍ ‌‌ ‍ ‌‌ ‍‌‍‍‍‍‍‍‍‌ ‌ ‍ ‍‍‍ ‌‌ ‌ ‍‍‌
Wa 'Inna Minhum Lafarīqāan Yalwūna 'Alsinatahum Bil-Kitābi Litaĥsabūhu Mina Al-Kitābi Wa Mā Huwa Mina Al-Kitābi Wa Yaqūlūna Huwa Min `Indi Allāhi Wa Mā Huwa Min `Indi Allāhi Wa Yaqūlūna `Alá Allāhi Al-Kadhiba Wa Hum Ya`lamūna 3-78 நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக. ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல "அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)" என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல. இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள். ‍‌‍‍‍ ‍‍‍‍‍‌ ‌ ‍‍‍‍‍ ‍‍ ‌‌ ‌ ‍‍ ‌‍‍‍‍‍‍‍ ‌ ‍‌ ‍‌‍‍‍‌ ‍ ‌‌ ‌ ‍‌ ‍‌‍‍‍‌ ‍ ‌‍‍‍‍‍‍‍
Mā Kāna Libasharin 'An Yu'utiyahu Allāhu Al-Kitāba Wa Al-Ĥukma Wa An-Nubūwata Thumma Yaqūla Lilnnāsi Kūnū `Ibādāan Lī Min Dūni Allāhi Wa Lakin Kūnū Rabbānīyīna Bimā Kuntum Tu`allimūna Al-Kitāba Wa Bimā Kuntum Tadrusūna 3-79 ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் "அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்" என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது. ஆனால் அவர் (பிற மனிதரிடம்) "நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்" (என்று தான் சொல்லுவார்). ‌ ‍‍‍ ‌ ‌‌ ‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍ ‌ ‌‌‌ ‍‌‍‍‌ ‍ ‌‍‌ ‌ ‌‍‍‍‍‍ ‌ ‍‌‍‍‍ ‍‍‍ ‍‍ ‌‌ ‍‌‍‍‍ ‍
Wa Lā Ya'murakum 'An Tattakhidhū Al-Malā'ikata Wa An-Nabīyīna 'Arbābāan ۗ 'Aya'murukum Bil-Kufri Ba`da 'Idh 'Antum Muslimūna 3-80 மேலும் அவர், "மலக்குகளையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்றும் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் - நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடமே முற்றிலும் சரணடைந்தவர்கள்) ஆகிவிட்ட பின்னர் (நீங்கள் அவனை) நிராகரிப்போராகி விடுங்கள் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா?. ‌ ‍ ‌‌‍‍‍‌‍‍‍‍‍‍‍‍ ‌‌‌ ۗ ‌ ‍‍‍‌ ‌ ‌‌‌ ‌‌
Wa 'Idh 'Akhadha Allāhu Mīthāqa An-Nabīyīna Lamā 'Ātaytukum Min Kitābin Wa Ĥikmatin Thumma Jā'akum Rasūlun Muşaddiqun Limā Ma`akum Latu'uminunna Bihi Wa Latanşurunnahu ۚ Qāla 'A'aqrartum Wa 'Akhadhtum `Alá Dhālikum 'Işrī ۖ Qālū 'Aqrarnā ۚ Qāla Fāsh/hadū Wa 'Anā Ma`akum Mina Ash-Shāhidīna 3-81 (நினைவு கூருங்கள்;) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, "நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக" (எனக் கூறினான்). "நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?" என்றும் கேட்டான்; "நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்" என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) "நீங்கள் சாட்சியாக இருங்கள்;. நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்" என்று கூறினான். ‌‌‌ ‌‍‍‌ ‍ ‍‍‍ ‍‍‍‍‍‍‍‍ ‍‌ ‌ ‍‌‍‍‌ ‌‌‌ ‍‍‍‌ ‌‍‍‍‌ ‍‍‍‍‍‍‍ ‌ ‌ ‍ ‌‍‌‍‍‍‍‍‍ ۚ ‌‌‍‍‍‍‌ ‌‌‍‍ ‌ ‌ ‌ ۖ ‍‍‌ ‌‍‍‍‍‌‌ ۚ ‌ ‌‌‌
Faman Tawallá Ba`da Dhālika Fa'ūlā'ika Humu Al-Fāsiqūna 3-82 எனவே, இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் தாம். ‍‌ ‌ ‌ ‌ ‍‍‌‍‍‍ ‍‍
'Afaghayra Dīni Allāhi Yabghūna Wa Lahu~ 'Aslama Man As-Samāwāti Wa Al-'Arđi Ţaw`āan Wa Karhāan Wa 'Ilayhi Yurja`ūna 3-83 அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன. மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும். ‍‍‍‍‌ ‌‍‍‍‍ ‍‍‍‍‍‍‍~ ‌ ‍‌ ‍‌‍‍‌‌‍ ‌ ‌‌ ‌‌‍‍‍
Qul 'Āmannā Billāhi Wa Mā 'Unzila `Alaynā Wa Mā 'Unzila `Alá 'Ibhīma Wa 'Ismā`īla Wa 'Isĥāqa Wa Ya`qūba Wa Al-'Asbāţi Wa Mā 'Ūtiya Mūsá Wa `Īsá Wa An-Nabīyūna Min Rabbihim Lā Nufarriqu Bayna 'Aĥadin Minhum Wa Naĥnu Lahu Muslimūna 3-84 "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. ‍ ‌‍‍‍‍‌ ‍‍ ‌‍‌ ‌‌‍ ‌ ‌‍‌ ‌‌‍ ‍‌ ‌‍‍‌‍‍‍‍‍ ‌‌‍‍‍‍‍ ‌‌‍‍‍ ‌‍‍‍‍‍ ‌‍‌ ‌‍‍‌ ‌ ‌‌ ‌‍‍‍‍‍‍ ‍‌ ‌‍ ‌ ‍‍‍‍ ‌‌ ‍‌‍‍‍ ‌ ‍
Wa Man Yabtaghi Ghayra Al-'Islāmi Dīnāan Falan Yuqbala Minhu Wa Huwa Fī Al-'Ākhirati Mina Al-Khāsirīna 3-85 இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். ‍‌‍‍‍‍ ‍‍ ‌‌‌ ‍‌‍‍‍ ‍‌‍‍‍ ‌‌ ‍‍ ‍‍‍‍
Kayfa Yahdī Al-Lahu Qawmāan Kafarū Ba`da 'Īmānihim Wa Shahidū 'Anna Ar-Rasūla Ĥaqqun Wa Jā'ahumu Al-Bayyinātu Wa ۚ Allāhu Lā Yahdī Al-Qawma Až-Žālimīna 3-86 அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே, அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக் கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான். ‍‍ ‍‌‌ ‌‌ ‌ ‌ ‌‌ ‌ ‍‍‌ ‌‍‍‍‍‍ ۚ‍‍ ‍‍
'Ūlā'ika Jazā'uuhum 'Anna `Alayhim La`nata Allāhi Wa Al-Malā'ikati Wa An-Nāsi 'Ajma`īna 3-87 நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும். ‍‍‌‍‍‍ ‍‍‌‌ ‌ ‍ ‌‍‍‍‍
Khālidīna Fīhā Lā Yukhaffafu `Anhumu Al-`Adhābu Wa Lā Hum Yunžarūna 3-88 இ(ந்த சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்;. அவர்களுடைய வேதனை இலேசாக்கப்பட மாட்டாது. அவர்களுக்கு (வேதனை) தாமதப்படுத்தப் படவும் மாட்டாது. ‍‍‍‍ ‌ ‌ ‍‍‍‍ ‍‌‍‍‍‍‌ ‌‌ ‍‌‍‍‍‍‍‍‍‌
'Illā Al-Ladhīna Tābū Min Ba`di Dhālika Wa 'Aşlaĥū Fa'inna Allāha Ghafūrun Raĥīmun 3-89 எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான். ‍‍‍‌ ‍‌ ‌ ‌ ‌‌‍ ‍‍‍‍‌ ‌‍
'Inna Al-Ladhīna Kafarū Ba`da 'Īmānihim Thumma Azdādū Kufan Lan Tuqbala Tawbatuhum Wa 'Ūlā'ika Humu Ađ-Đāllūna 3-90 எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள். ‍‍‍‍ ‌‌ ‌ ‌ ‍ ‌‌‌‌‌‌ ‌‌ ‍‌‍‍‍ ‌‌‍‍‌‍‍‍ ‍‍
'Inna Al-Ladhīna Kafarū Wa Mātū Wa Hum Kuffārun Falan Yuqbala Min 'Aĥadihim Mil'u Al-'Arđi Dhahabāan Wa Law Aftadá Bihi~ ۗ 'Ūlā'ika Lahum `Adhābun 'Alīmun Wa Mā Lahum Minşirīna 3-91 எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். ‍‍‍‍ ‌‌ ‌‌ ‌ ‍‍‍‌‌‌ ‍‌‍‍‍ ‍‌ ‌ ‌ ‌‍‌ ‌‌ ‌‌ ۗ‍‍‌‍‍‍ ‍‍‌ ‌‍‍‍‍‌ ‌‌ ‍‌
Lan Tanālū Al-Birra Ĥattá Tunfiqū Mimmā Tuĥibbūna ۚ Wa Mā Tunfiqū Min Shay'in Fa'inna Allāha Bihi `Alīmun 3-92 நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். ‍‌ ‍‍‌ ‌ ‍‌‍‍‍‍‍‍‌ ‍‍‍‍‌ ‍‍‍ ۚ ‌‌ ‍‌‍‍‍‍‍‍‌ ‍‌ ‍ ‍
Kullu Aţ-Ţa`āmi Kāna Ĥillāan Libanī 'Isrā'īla 'Illā Mā Ĥarrama 'Isrā'īlu `Alá Nafsihi Min Qabli 'An Tunazzala At-Tawatu ۗ Qul Fa'tū Bit-Tawati Fātlūhā 'In Kuntum Şādiqīna 3-93 இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டுவந்து அதை ஓதிக்காண்பியுங்கள்" என்று. ‍‍‍‍‍‍‍‍ ‌ ‍‍‍‌‍‍‍‍ ‌‌ ‌ ‍‍‍‌‍‍‍‍ ‌ ‍ ‍‌ ‍‍‍ ‌‌ ‍‌‍‌ ۗ ‌ ‍‍‌‍‌‌ ‌‌ ‍‌‍‍‍‌
Famani Aftará `Alá Allāhi Al-Kadhiba Min Ba`di Dhālika Fa'ūlā'ika Humu Až-Žālimūna 3-94 இதன் பின்னரும் எவரேனும் ஒருவர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறினால் நிச்சயமாக அவர்கள் அக்கிரமக்காரர்களே ஆவார்கள். ‌‌ ‌ ‍‌ ‌ ‌ ‍‍‌‍‍‍ ‍‍
Qul Şadaqa Allāhu Fa ۗ Attabi`ū Millata 'Ibhīma Ĥanīfāan Wa Mā Kāna Mina Al-Mushrikīna 3-95 (நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்;. அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை." ‍‍ ۗ ‌ ‌‍‍‌‍‍‍‍‌ ‌‌ ‍‍‍
'Inna 'Awwala Baytin Wuđi`a Lilnnāsi Lalladhī Bibakkata Mubārakāan Wa Hudan Lil`ālamīna 3-96 (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. ‌‌ ‍‍‍‌ ‌‍‍ ‍‍‍‍‍ ‌‍‌ ‌‍
Fīhi 'Āyātun Bayyinātun Maqāmu 'Ibhīma ۖ Wa Man Dakhalahu Kāna 'Āmināan ۗ Wa Lillāh `Alá An-Nāsi Ĥijju Al-Bayti Mani Astaţā`a 'Ilayhi Sabīlāan ۚ Wa Man Kafara Fa'inna Allāha Ghanīyun `Ani Al-`Ālamīna 3-97 அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்;. இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கி;றான். ‍‍‍‍ ‌‍‍‍‌ ‍‍‍‌ ‍‍‍‍‍‌‍‍‍‍ۖ ‌‍‌ ‌‍‍‍‍‍ۗ‍‍‍‍ ‍‍‍‍ ‌‍‍‍ۚ ‌‍‌
Qul Yā 'Ahla Al-Kitābi Lima Takfurūna Bi'āyāti Allāhi Wa Allāhu Shahīdun `Alá Mā Ta`malūna 3-98 "வேதத்தையுடையோரே! அல்லாஹ்வின் ஆயத்கள் (என்னும் அத்தாட்சிகளையும், வசனங்களையும்) ஏன் நிராகரிக்கின்றீர்கள்? அல்லாஹ்வே நீங்கள் செய்யும் (அனைத்துச்) செயல்களையும் நோட்டமிட்டுப் பார்ப்பவனாக இருக்கிறானே!" என்று (நபியே!) நீர் கூறுவீராக. ‍ ‍‌ ‌ ‍‍ ‍‍‌‍‍ ‍ ‌‍‍‍‍‌ ‌ ‌
Qul Yā 'Ahla Al-Kitābi Lima Taşuddūna `An Sabīli Allāhi Man 'Āmana Tabghūnahā `Iwajāan Wa 'Antum Shuhadā'u ۗ Wa Mā Al-Lahu Bighāfilin `Ammā Ta`malūna 3-99 "வேதத்தையுடையோரே! நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து ஏன் தடுக்கிறீர்கள்? (அல்லாஹ்வின் ஒப்பந்தத்திற்கு) நீங்களே சாட்சியாக இருந்து கொண்டு அதைக் கோணலாக்க எண்ணுகிறீர்களா? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை" என்றும் (நபியே!) நீர் கூறுவீராக. ‍ ‍‌ ‌ ‍‍‍‍‍‍‌ ‍‌‍‍‍‍ ‍‌ ‌ ‍‍‍‍‍‍‍‍‌ ‌ ‌‌‌‍‍‌‌‌ ۗ ‌‌ ‍‍‍ ‍‍‍‍‌
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū 'In Tuţī`ū Farīqāan Mina Al-Ladhīna 'Ūtū Al-Kitāba Yaruddūkum Ba`da 'Īmānikum Kāfirīna 3-100 நம்பிக்கை கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவாரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை, நீங்கள் ஈமான் கொண்டபின், காஃபிர்களாக திருப்பி விடுவார்கள். ‌ ‌‌ ‍‍‍‍ ‌‍‌ ‌‌‍‍‌ ‍‍‍‍‍‍‍ ‌‍‍‍‍ ‌‌ ‌ ‌ ‍
Wa Kayfa Takfurūna Wa 'Antum Tutlá `Alaykum 'Āyātu Allāhi Wa Fīkum Rasūluhu ۗ Wa Man Ya`taşim Billāhi Faqad Hudiya 'Ilá Şirāţin Mustaqīmin 3-101 அவனுடைய ரஸூல் உங்களிடையே இருந்து கொண்டு; - அல்லாஹ்வின் ஆயத்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கக்கூடிய (நிலையில்) இருந்து கொண்டு, நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? மேலும், எவர் அல்லாஹ்வை (அவன் மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார். ‍‍‍‍‌ ‌‌‌‍ ‌ ‌‍‍‍ ‍ ‌ ‌‍ ۗ ‌‍‌‍‍‍ ‍‍ ‍‍‍‌ ‌‌ ‍‌‌ ‍‍‍
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Attaqū Allaha Ĥaqqa Tuqātihi Wa Lā Tamūtunna 'Illā Wa 'Antum Muslimūna 3-102 நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். ‌ ‌‌ ‍‍‍‍ ‌‍‍‍ ‍‍‍‍‍ ‌‌ ‍ ‌‌ ‌‌‌
Wa A`taşimū Biĥabli Allāhi Jamī`āan Wa Lā Tafarraqū ۚ Wa Adhkurū Ni`mata Allāhi `Alaykum 'Idh Kuntum 'A`dā'an Fa'allafa Bayna Qulūbikum Fa'aşbaĥtum Bini`matihi~ 'Ikhwānāan Wa Kuntum `Alá Shafā Ĥufratin Mina An-Nāri Fa'anqadhakum Minhā ۗ Kadhālika Yubayyinu Allāhu Lakum 'Āyātihi La`allakum Tahtadūna 3-103 இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். ‌‍‍‍‌ ‍‍‍‌ ‌‌ ‍‍‍ۚ‌‌‍ ‌‌‌ ‍‌‍‍‍ ‌‍‍‌‌‌‌ ‍‍‍‍ ‍‍ ‌‍‌‌ ‌‍‌‍‍‍ ‌ ‌ ‍‍‍‍‍‍‍‌ ‌‍‍‍‍‍ ‍‌‍‍‍‌ ۗ ‍ ‌‍
Wa Ltakun Minkum 'Ummatun Yad`ūna 'Ilá Al-Khayri Wa Ya'murūna Bil-Ma`rūfi Wa Yanhawna `Ani Al-Munkari ۚ Wa 'Ūlā'ika Humu Al-Mufliĥūna 3-104 மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். ‍‌ ‍‌‍‍‍ ‌‌ ‍‍‍ ‌‌ ‍‍‍‍‍‍‌ ‌‍‍‌‍‍‌ ‌‍‌‍‍‍‍ ‍‌‍‍‍‍‍‍‌ ۚ ‌‌‍‍‌‍‍‍
Wa Lā Takūnū Kālladhīna Tafarraqū Wa Akhtalafū Min Ba`di Mā Jā'ahumu Al-Bayyinātu ۚ Wa 'Ūlā'ika Lahum `Adhābun `Ažīmun 3-105 (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. ‍‍‍‍ ‍‍‍‌ ‌‌ ‍‌ ‌ ‌ ‍‍‍‍‍ ۚ ‌‌‍‍‌‍‍‍ ‍‍‌‍‍
Yawma Tabyađđu Wujūhun Wa Taswaddu Wujūhun ۚ Fa'ammā Al-Ladhīna Aswaddat Wujūhuhum 'Akafartum Ba`da 'Īmānikum Fadhūqū Al-`Adhāba Bimā Kuntum Takfurūna 3-106 அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து, நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்" (என்று கூறப்படும்). ‍‍‍‍ ‌‍‍‍‌ ‌‌‌ ‌‍‍‍ۚ ‍‌ ‍‍‍‌ ‌ ‌ ‌ ‌ ‌‍‍‌ ‌ ‍‌‍‍‍ ‌
Wa 'Ammā Al-Ladhīna Abyađđat Wujūhuhum Fafī Raĥmati Allāhi Hum Fīhā Khālidūna 3-107 எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள். ‍‌ ‍‍‍‍‍‍‍‍ ‌ ‌‍ ‍ ‌ ‍‌
Tilka 'Āyātu Allāhi Natlūhā `Alayka Bil-Ĥaqqi ۗ Wa Mā Al-Lahu Yurīdu Žulmāan Lil`ālamīna 3-108 (நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக்காண்பிக்கின்றோம்;. மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைக்க நாட மாட்டான். ‌‍‍‍ ‍ ‌ ‍‍‍‍ ‍ ۗ ‌‌ ‍‍‍‍‌
Wa Lillāh Mā Fī As-Samāwāti Wa Mā Fī Al-'Arđi ۚ Wa 'Ilá Allāhi Turja`u Al-'Umūru 3-109 வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - அனைத்தும் - அல்லாஹ்வுக்கே உரியவை. எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும். ‍‌‍‍‌ ‌‌ ‌‍ ۚ ‌‌‌
Kuntum Khayra 'Ummatin 'Ukhrijat Lilnnāsi Ta'murūna Bil-Ma`rūfi Wa Tanhawna `Ani Al-Munkari Wa Tu'uminūna Billāhi ۗ Wa Law 'Āmana 'Ahlu Al-Kitābi Lakāna Khayan Lahum ۚ Minhumu Al-Mu'uminūna Wa 'Aktharuhumu Al-Fāsiqūna 3-110 மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்;. எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். ‍‌‍‍‍‍‌ ‌‍ ‌‍‍‍‍‍ ‍‍‌‍‍‌ ‌‍‌‍‍‍‍ ‍‌‍‍‍‍‍‍‌ ‌‍‍‍ۗ ‌‌ ‌ ‌ ‍‍‍‍ ‍‌ۚ ‍‌‍‍‍‍ ‌‌ ‍‍
Lan Yađurrūkum 'Illā 'Adhan ۖ Wa 'In Yuqātilūkum Yuwallūkumu Al-'Adbāra Thumma Lā Yunşarūna 3-111 இத்தகையோர் உங்களுக்குச் சிறிது தொல்லைகள் உண்டு பண்ணுவதைத் தவிர (பெரும்) தீங்கு எதுவும் செய்துவிட முடியாது. அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்;. இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டார்கள். ‍‌‍‍‍‌ ‌‌ ‌‌‌ۖ ‌‌‌‍‍‍‍‌‍‌ ‍ ‌ ‍‌‍‍‍‍‍‍‍‌
Đuribat `Alayhimu Adh-Dhillatu 'Ayna Mā Thuqifū 'Illā Biĥablin Mina Allāhi Wa Ĥablin Mina An-Nāsi Wa Bā'ū Bighađabin Mina Allāhi Wa Đuribat `Alayhimu Al-Maskanatu ۚ Dhālika Bi'annahum Kānū Yakfurūna Bi'āyāti Allāhi Wa Yaqtulūna Al-'Anbiyā'a Bighayri Ĥaqqin ۚ Dhālika Bimā `Aşaw Wa Kānū Ya`tadūna 3-112 அவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது). அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்;. ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்;. அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்;. இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை) மீறி நடந்து கொண்டும் இருந்தது தான் (காரணமாகும்). ‍ ‌‍ ‌ ‍‍‍‍‍‌ ‌‌ ‍‍‍‍ ‌‍‍‍‍‍‍‍ ‌‍‍‍‍‍‌‌‌ ‍‍‍‍‍‍ ‌‍ ۚ‍‍‌‍‍ ‍ ‌‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‌‌ ‍‍‍‍‍‍‍‌ ‍‍‌‍‌ۚ ‌ ‌ ‍‍‍‍‌‌ ‌‌ ‌
Laysū Sawā'an ۗ Min 'Ahli Al-Kitābi 'Ummatun Qā'imatun Yatlūna 'Āyāti Allāhi 'Ānā'a Al-Layli Wa Hum Yasjudūna 3-113 (ஏனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர்;. வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள்;. இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள். ‍‍‌ۗ ‍‌‍‍‍‌‌ ‍‍‍ ‌‍‍‍ ‍ ‌‍‍‍‌‌ ‍‍‍‍‍ ‌ ‌
Yu'uminūna Billāhi Wa Al-Yawmi Al-'Ākhiri Wa Ya'murūna Bil-Ma`rūfi Wa Yanhawna `Ani Al-Munkari Wa Yusāri`ūna Fī Al-Khayrāti Wa 'Ūlā'ika Mina Aş-Şāliĥīna 3-114 அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்;. நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள். தீமையை விட்டும் விலக்குகிறார்கள்;. மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்;. இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்றுமுள்ளவர்கள். ‍‍‍ ‌ ‍‍‍‌ ‌‍‍‌‍‍‌ ‌‍‌‍‍‍‍ ‍‌‍‍‍‍‍‍‌ ‌‍‍ ‍‍‍‍‍‌ ‌‌‍‍‌‍‍‍ ‍‍
Wa Mā Yaf`alū Min Khayrin Falan Yukfarūhu Wa ۗ Allāhu `Alīmun Bil-Muttaqīna 3-115 இவர்கள் செய்யும் எந்த நன்மையம் (நற்கூலி கொடுக்கப்படாமல்) புறக்கணிக்கப்படாது. அன்றியும், அல்லாஹ் பயபக்தியுடையோரை நன்றாக அறிகிறான். ‌ ‍‌ ‍‍‍‌‌ ‍‌ ‍‍‌ ۗ‍‍‍‍‌‌ ‍‍‍
'Inna Al-Ladhīna Kafarū Lan Tughniya `Anhum 'Amwāluhum Wa Lā 'Awlāduhum Mina Allāhi Shay'āan ۖ Wa 'Ūlā'ika 'Aşĥābu An-Nāri ۚ Hum Fīhā Khālidūna 3-116 நிச்சயமாக எவர் நிராகரிக்கின்றார்களோ, அவர்களைவிட்டு அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு பொருளையும் காப்பாற்ற முடியாது - அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள். ‍‍‍‍ ‌‌ ‍‌‍‍‍ ‍‌‍‍‍ ‌‌ ‌‌ ‌‌‌ ‍ ‍‍‍ۖ ‌‌‍‍‌‍‍‍ ‌‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‌ ۚ‍‌
Mathalu Mā Yunfiqūna Fī Hadhihi Al-Ĥayāati Ad-Dunyā Kamathali Rīĥin Fīhā Şirrun 'Aşābat Ĥartha Qawmin Žalamū 'Anfusahum Fa'ahlakat/hu ۚ Wa Mā Žalamahumu Allāhu Wa Lakin 'Anfusahum Yažlimūna 3-117 இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பது ஒரு காற்றுக்கு ஒப்பாகும்;. அது (மிகவும்) குளிர்ந்து (பனிப்புயலாக மாறி) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட அக்கூட்டத்தாரின் (வயல்களிலுள்ள) விளைச்சலில்பட்டு அதை அழித்துவிடுகிறது - அவர்களுக்கு அல்லாஹ் கொடுமை செய்யவில்லை. அவர்கள் தமக்குத் தாமே கொடுமையிழைத்துக் கொள்கிறார்கள். ‌ ‍‌‍‍‍‍‍‍ ‍‍ ‍‌‍‌ ‍‍‍‍‌‌ ‌ ‍‍‌ ‌‍‍‍‌ ‌‌ۚ ‌‌ ‍ ‌‍‌ ‌‌‍ ‍‍‍
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Lā Tattakhidhū Biţānatan Min Dūnikum Lā Ya'lūnakum Khabālāan Waddū Mā `Anittum Qad Badati Al-Baghđā'u Min 'Afwāhihim Wa Mā TukhŞudūruhum 'Akbaru ۚ Qad Bayyannā Lakumu Al-'Āyāti ۖ 'In Kuntum Ta`qilūna 3-118 நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்;. நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்;. அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்;. நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்;. நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்). ‌ ‌‌ ‍‍‍‍ ‌‌ ‌ ‍‍‍‍‌‌ ‍‍‍ ‌ ‍‌ ‌‌ ‌ ‌ ‌‌‌‌ ‌ ‍‍‍‍‌‌ ‍‌ ‌‌ ‌‌ ‍‍‍‍‌‌ ‌‌ ۚ ‌ ‍‍‍‍‌ ‍‍ ۖ ‌‌ ‍‌‍‍‍ ‍‍‍
Hā'antum 'Ūlā'i Tuĥibbūnahum Wa Lā Yuĥibbūnakum Wa Tu'uminūna Bil-Kitābi Kullihi Wa 'Idhā Laqūkum Qālū 'Āmannā Wa 'Idhā Khalaw `Ađđū `Alaykumu Al-'Anāmila Mina Al-Ghayži Qul ۚ Mūtū Bighayžikum 'Inna ۗ Allāha `Alīmun Bidhāti Aş-Şudūri 3-119 (முஃமின்களே!) அறிற்து கொள்ளுங்கள்;. நீங்கள் அவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை. நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்;. ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது "நாங்களும் நம்புகிறோம்" என்று கூறுகிறார்கள்;. எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்". ‍‍‌‌‍ ‌‍‍‌‌‌ ‌‌ ‌‍‍‍‍‍ ‌‌‌‌‌ ‍‍‍‍‍‌ ‌‍‍‍‍‌ ‌‌‌‌‌ ‍‌‌ ‍‍‍ ‍‍‍‍ ۚ ‌ ‍‍‍‍‍‍‍‍ ‌ ۗ ‍ ‍‍‍‍‍‌‍‍‌ ‍‍‍‌
'In Tamsaskum Ĥasanatun Tasu'uhum Wa 'In Tuşibkum Sayyi'atun Yafraĥū Bihā ۖ Wa 'In Taşbirū Wa Tattaqū Lā Yađurrukum Kayduhum Shay'āan ۗ 'Inna Allāha Bimā Ya`malūna Muĥīţun 3-120 ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். ‌ ‌‌‌‍‍‍‍‌ ‍‌ ‌ ۖ ‌‌‌‍‍‍‌‌ ‌‍‍‍‌ ‌ ‍‍‍‍ ‍‍‍‍‌ۗ ‍ ‌ ‍‍‍
Wa 'Idh Ghadawta Min 'Ahlika Tubawwi'u Al-Mu'uminīna Maqā`ida Lilqitāli Wa ۗ Allāhu Samī`un `Alīmun 3-121 (நபியே! நினைவு கூர்வீராக) நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக (உஹது களத்தில் அவரவர்) இடத்தில் நிறுத்தினீர்;. அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். ‌‌‌ ‍‌‍‍‍‍ ‍‍‍‍‌ ‍‍‍‍‍‍‍ ۗ‍‍‍
'Idh Hammat Ţā'ifatāni Minkum 'An Tafshalā Wa Allāhu Walīyuhumā ۗ Wa `Alá Allāhi Falyatawakkali Al-Mu'uminūna 3-122 (அந்தப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து (ஓடி விடலாமா) என்று எண்ணியபோது - அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் (உதவி செய்து) காப்போனாக இருந்தான்;. ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்கவேண்டும். ‌‌ ‍‍‍‍‍ ‍‌‍‍‍ ‌‌ ‌ ‌ ‌‌ ۗ ‌‌
Wa Laqad Naşarakumu Allāhu Bibadrin Wa 'Antum 'Adhillatun Fa ۖ Attaqū Allaha La`allakum Tashkurūna 3-123 "பத்று" போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்;. ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். ‌ ‍‍‍ ‍ ‍‌ ‌‌‌‍ ‌‌‌ۖ‍‍‍ ‌
'Idh Taqūlu Lilmu'uminīna 'Alan Yakfiyakum 'An Yumiddakum Rabbukum Bithalāthati 'Ālāfin Mina Al-Malā'ikati Munzalīna 3-124 (நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்; "உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?" என்று. ‌‌ ‍‍‍‍‍‍‍ ‌‍‌ ‌‌ ‌‍ ‍‌‍‍
Balá ۚ 'In Taşbirū Wa Tattaqū Wa Ya'tūkum Min Fawrihimdhā Yumdidkum Rabbukum Bikhamsati 'Ālāfin Mina Al-Malā'ikati Musawwimīna 3-125 ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான். ۚ ‌‌‍‍‍‌‌ ‌‍‍‍‌ ‌ ‍‌ ‌‌ ‌‍‍‍‍ ‌
Wa Mā Ja`alahu Allāhu 'Illā Bushrá Lakum Wa Litaţma'inna Qulūbukum Bihi ۗ Wa Mā An-Naşru 'Illā Min `Indi Allāhi Al-`Azīzi Al-Ĥakīmi 3-126 உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை. அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை. அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன். ‍ ‌‌ ‍‌‌ ‌‍‍‍‍‍ ‍ ‍ ۗ ‌‌ ‍‍‍‍‍‍‍‌ ‌‌ ‍‌ ‍‌‍‍‍‌ ‍‍‍‍‌
Liyaqţa`a Ţarafāan Mina Al-Ladhīna Kafarū 'Aw Yakbitahum Fayanqalibū Khā'ibīna 3-127 (அல்லாஹ்வுடைய உதவியின் நோக்கம்) நிராகரிப்போரில் ஒரு பகுதியினரை அழிப்பதற்கு, அல்லது அவர்கள் சிறுமைப்பட்டுத் தோல்வியடைந்தோராய்த் திரும்பிச் செல்வதற்காகவுமேயாகும். ‍‍‍‍‍‍‍‍‍‌ ‌‌‌ ‍‌‍‍‍‍‍‍
Laysa Laka Mina Al-'Amri Shay'un 'Aw Yatūba `Alayhim 'Aw Yu`adhdhibahum Fa'innahum Žālimūna 3-128 (நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம்;. அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் - நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக. ‍‍‍‍‌ ‍‌ ‌‌‌ ‍‍‍ ‌‌‌
Wa Lillāh Mā Fī As-Samāwāti Wa Mā Fī Al-'Arđi ۚ Yaghfiru Liman Yashā'u Wa Yu`adhdhibu Man Yashā'u Wa ۚ Allāhu Ghafūrun Raĥīmun 3-129 வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியவை. தான் நாடியவர்களை அவன் மன்னிக்கின்றான்;. இன்னும் தான் நாடியவர்களை வேதனைப்படுத்தவும் செய்கின்றான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், பெருங்கருணையாளன். ‍‌‍‍‌ ‌‌ ‌‍ ۚ‍‍‍‍‍‍‌ ‍‌‍‍‌‌ ‌ ‍‌‍‍‌‌ ۚ ‍‍‍‍‌ ‌‍
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Lā Ta'kulū Ar-Ribā 'Ađ`āfāan Muđā`afatan ۖ Wa Attaqū Allaha La`allakum Tufliĥūna 3-130 ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்;. இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள். ‌ ‌‌ ‍‍‍‍ ‌‌ ‌ ‍‍‌ ‌‍‌ ‍‍‍ ۖ‍‍
Wa Attaqū An-Nāra Allatī 'U`iddat Lilkāfirīna 3-131 தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ‌‍‍‍‍‍‍‍‌‍ ‌ ‍
Wa 'Aţī`ū Allaha Wa Ar-Rasūla La`allakum Turĥamūna 3-132 அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்;. நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். ‌‍‍ ‌‍‍
Wa Sāri`ū 'Ilá Maghfiratin Min Rabbikum Wa Jannatin `Arđuhā As-Samāwātu Wa Al-'Arđu 'U`iddat Lilmuttaqīna 3-133 இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்;. அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. ‌ ‌‌ ‍‍‍‍‍‌ ‍‌ ‌‍ ‌‍‍‍‍ ‍‍‌ ‍‌‍‍‌‌‍ ‌ ‍‍‍
Al-Ladhīna Yunfiqūna Fī As-Sarrā'i Wa Ađ-Đarrā'i Wa Al-Kāžimīna Al-Ghayža Wa Al-`Āfīna `Ani An-Nāsi Wa ۗ Allāhu Yuĥibbu Al-Muĥsinīna 3-134 (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். ‍‍‍‍ ‍‌‍‍‍‍‍‍ ‍‍‌‌‌ ‌‍‍‍‍‌‌‌ ‌‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ۗ
Wa Al-Ladhīna 'Idhā Fa`alū Fāĥishatan 'Aw Žalamū 'Anfusahum Dhakarū Allaha Fāstaghfarū Lidhunūbihim Wa Man Yaghfiru Adh-Dhunūba 'Illā Al-Lahu Wa Lam Yuşirrū `Alá Mā Fa`alū Wa Hum Ya`lamūna 3-135 தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும். உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்;. அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள். ‍‍‍‍ ‌‌‌‌ ‌ ‌‌‌ ‍‍‌ ‌‌‍ ‌‌‍ ‍‍‍‍‌‌ ‌‍‌‍‍‍‍‍‍‌ ‍‍‍‍ ‌‌ ‍ ‌ ‍‍‍‍‍‌‌ ‌ ‌ ‌ ‌
'Ūlā'ika Jazā'uuhum Maghfiratun Min Rabbihim Wa Jannātun Tajrī Min Taĥtihā Al-'Anhāru Khālidīna Fīhā ۚ Wa Ni`ma 'Ajru Al-`Āmilīna 3-136 அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும்;. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்;. அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்;. இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது. ‍‍‌‍‍‍ ‍‍‌‌ ‍‍‍‍‍‌ ‍‌ ‌‍ ‌‍‍‍‍‍‌ ‍‍‍ ‍‌‍‍‍‍‌‌ ‍‍‍‍ ‌ ۚ ‌ ‌‍‌
Qad Khalat Min Qablikum Sunanun Fasīrū Fī Al-'Arđi Fānžurū Kayfa Kāna `Āqibatu Al-Mukadhdhibīna 3-137 உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள். ‍ ‍‌ ‍‍‍ ‌‌ ‌‌‍‍‍‍‍‍‌‌ ‍‍‍‍ ‍‍‍
dhā Bayānun Lilnnāsi Wa Hudan Wa Maw`ižatun Lilmuttaqīna 3-138 இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது. ‌‌ ‍‍‍ ‌ ‍‍‍‍‍ ‌‍‌ ‌‍‍‍ ‌ ‍‍‍
Wa Lā Tahinū Wa Lā Taĥzanū Wa 'Antumu Al-'A`lawna 'In Kuntum Mu'uminīna 3-139 எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொல்லாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். ‌ ‌‌ ‌ ‌‌‌ ‌‌ ‍‌‍‍
'In Yamsaskum Qarĥun Faqad Massa Al-Qawma Qarĥun Mithluhu ۚ Wa Tilka Al-'Ayyāmu Nudāwiluhā Bayna An-Nāsi Wa Liya`lama Allāhu Al-Ladhīna 'Āmanū Wa Yattakhidha Minkum Shuhadā'a Wa ۗ Allāhu Lā Yuĥibbu Až-Žālimīna 3-140 உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்;. இதற்குக் காரணம், ஈமான் கொணடடோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்;. இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை. ‍‌‌ ‍‍‍‍‍ ‌ ‍ ۚ‍‍ ‌‌‌ ‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‌‌ ‌‍‍‍‍‌ ‍‌‍‍‍‍‌‌‌ ۗ‍‍
Wa Liyumaĥĥişa Allāhu Al-Ladhīna 'Āmanū Wa Yamĥaqa Al-Kāfirīna 3-141 நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான். ‍‍‍‍ ‌‌ ‌‍
'Am Ĥasibtum 'An Tadkhulū Al-Jannata Wa Lammā Ya`lami Allāhu Al-Ladhīna Jāhadū Minkum Wa Ya`lama Aş-Şābirīna 3-142 உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா? ‍‍‍ ‌‌‍‍‍‍‍ ‌‍‍‍‍‌ ‍‍‍‍ ‌‌ ‍‌‍‍‍ ‌ ‍‍‍‍
Wa Laqad Kuntum Tatamannawn Al-Mawta Min Qabli 'An Talqawhu Faqad Ra'aytumūhu Wa 'Antum Tanžurūna 3-143 நீங்கள் மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னமே நிச்சயமாக நீங்கள் அதை விரும்பினீர்ளே! இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம்?) ‌ ‍‌‍‍‍ ‍‍‍‍‌ ‍‌ ‍‍‍ ‌‌‍‍‍‍‌ ‌‍‌‍‍‍ ‌‌‌‍ ‍‌‍‍‍‍‍‍‍‌
Wa Mā Muĥammadun 'Illā Rasūlun Qad Khalat Min Qablihi Ar-Rusulu ۚ 'Afa'īn Māta 'Aw Qutila Anqalabtum `Alá 'A`qābikum ۚ Wa Man Yanqalib `Alá `Aqibayhi Falan Yađurra Allāha Shay'āan ۗ Wa Sayaj Al-Lahu Ash-Shākirīna 3-144 முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்;. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;. அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது. அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். ‌ ‍‍‍‍‌‌ ‌‌ ‌‍‍‍‍ ‍‌ ‍‍ۚ ‌‍‍‍ ‌‌‌ ‍‍‍‍‍‍‍‍‍ ‍‌ ‌‍‍‍ۚ ‌‍‌ ‍‌‍‍‍‍‍‍‍‍ ‌ ‍‍‍‍‍‍‍‍ ‍‌‍‍‍ ‍‍‍ۗ ‌‍‍‍ ‍‍
Wa Mā Kāna Linafsin 'An Tamūta 'Illā Bi'idhni Allāhi Kitābāan Mu'uajjalāan ۗ Wa Man Yurid Thawāba Ad-Dunyā Nu'utihi Minhā Wa Man Yurid Thawāba Al-'Ākhirati Nu'utihi Minhā ۚ Wa Sanaj Ash-Shākirīna 3-145 மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹவின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்;. இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்;. நன்றியுடையோருக்கு அதி சீக்கரமாக நற்கூலி கொடுக்கிறோம். ‌ ‍‍‍ ‌‌‍‍ ‌‌ ‌ ۗ ‌‍‌‍‍‌ ‍‌‍‌ ‍ ‍‌‍‍‍‌ ‌‍‌‍‍‌ ‍‍ ‍‌‍‍‍‌ ۚ ‌‍‍‍‍‍
Wa Ka'ayyin Min Nabīyin Qātala Ma`ahu Ribbīyūna Kathīrun Famā Wahanū Limā 'Aşābahum Fī Sabīli Allāhi Wa Mā Đa`ufū Wa Mā Astakānū Wa ۗ Allāhu Yuĥibbu Aş-Şābirīna 3-146 மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்;. எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை. (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான். ‍‌ ‍‌‍ ‍ ‍‍‍‍‍‍‌‌ ‌ ‌‌ ‍‌ ‌‍‍ ‍‍‍‍‍ ‌‌ ‌ ‌‌ ۗ ‍‍‍‍
Wa Mā Kāna Qawlahum 'Illā 'An Qālū Rabbanā Aghfir Lanā Dhunūbanā Wa 'Isfanā Fī 'Amrinā Wa Thabbit 'Aqdāmanā Wa Anşurnā `Alá Al-Qawmi Al-Kāfirīna 3-147 மேலும், "எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக" என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை. ‌ ‍‍‍ ‍ ‌‌ ‌‌ ‌ ‌‍‍‍‌ ‌ ‌‌ ‌‌‍‌‌ ‍ ‌‍‌ ‌ ‌‍‍‍‌‌ ‌‍‍‍‍‍‌ ‌ ‍‍
Fa'ātāhumu Allāhu Thawāba Ad-Dunyā Wa Ĥusna Thawābi Al-'Ākhirati Wa ۗ Allāhu Yuĥibbu Al-Muĥsinīna 3-148 ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்;. இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான். ‍‍‌ ‍‌‍‌ ‌ ‍‍‌ ‍‍ ۗ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū 'In Tuţī`ū Al-Ladhīna Kafarū Yaruddūkum `Alá 'A`qābikum Fatanqalibū Khāsirīna 3-149 நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்;. அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள். ‌ ‌‌ ‍‍‍‍ ‌‍‌ ‌‌‍‍‍‍‍‍ ‌‌ ‌‌ ‍‌ ‌‍‍‍‍ ‍‌‍‍‍‍‍‍‍‍
Bali Allāhu Mawlākum ۖ Wa Huwa Khayru An-Nāşirīna 3-150 (இவர்களல்ல.) அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன். ۖ ‌‌ ‍‍‍‌ ‍‍
Sanulqī Fī Qulūbi Al-Ladhīna Kafarū Ar-Ru`ba Bimā 'Ashrakū Billāhi Mā Lam Yunazzil Bihi Sulţānāan ۖ Wa Ma'wāhumu An-Nāru ۚ Wa Bi'sa Math Až-Žālimīna 3-151 விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம். ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க, அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்;. அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது. ‍‍‍‍‍‍ ‍‍‍‍ ‌‍ ‍‌ ‌‍‌ ‍‍ ‌ ‍‍‍ۖ ‌‌‌ ‍‍‍‍‌‌ ۚ ‌ ‌‌ ‍‍
Wa Laqad Şadaqakumu Allāhu Wa`dahu~ 'Idh Taĥussūnahum Bi'idhnihi ۖ Ĥattá 'Idhā Fashiltum Wa Tanāza`tum Al-'Amri Wa `Aşaytum Min Ba`di Mā 'Akum Mā Tuĥibbūna ۚ Minkum Man Yurīdu Ad-Dunyā Wa Minkum Man Yurīdu Al-'Ākhirata ۚ Thumma Şarafakum `Anhum Liyabtaliyakum ۖ Wa Laqad `Afā `Ankum Wa ۗ Allāhu Dhū Fađlin `Alá Al-Mu'uminīna 3-152 இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்;. நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்திரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்;. நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்;. உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள். இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்;. பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்;. நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான். மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான். ‍‍‍ ‌~ ‌‌‌ ‌‍ ۖ‌ ‌‌‌‌ ‌‌ ‍‍‌ ‌‍‍‍‍ ‍‌ ‌ ‍‌ ‌‌‍‌ ‌ ‍‍‍ ۚ ‍‌‍‍‍ ‍‌‍‍‍‍‌ ‍‌‍‌ ‌‍‌‍‍‍ ‍‌‍‍‍‍‌ ‍‍ ۚ ‍‌‍‍‍ ‍‍‍ۖ ‌‍‍‍‌ ‌ ‍‌‍‍ۗ ‌‌‌ ‍‍‍‍ ‌
'Idh Tuş`idūna Wa Lā Talwūna `Alá 'Aĥadin Wa Ar-Rasūlu Yad`ūkum Fī 'Ukhkum Fa'athābakum Ghammāan Bighammin Likaylā Taĥzanū `Alá Mā Fātakum Wa Lā Mā 'Aşābakum Wa ۗ Allāhu Khabīrun Bimā Ta`malūna 3-153 (நினைவு கூருங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான். ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான். ‌‌ ‍‍‍‍‍‌ ‌‌ ‍‍‌‌ ‌‌ ‌‍‍ ‌‍‍‍‌ ‍‍‍‍‍‌ ‌ ‌ ‌ ‌ ‌‌ ‍‌ ‌‍ۗ ‍‍‍‍‍‌ ‌
Thumma 'Anzala `Alaykum Min Ba`di Al-Ghammi 'Amanatan Nu`āsāan Yaghshá Ţā'ifatan Minkum ۖ Wa Ţā'ifatun Qad 'Ahammat/hum 'Anfusuhum Yažunnūna Billāhi Ghayra Al-Ĥaqqi Žanna Al-Jāhilīyati ۖ Yaqūlūna Hal Lanā Mina Al-'Amri Min Shay'in ۗ Qul 'Inna Al-'Amra Kullahu Lillāh ۗ Yukhfūna Fī 'Anfusihim Mā Lā Yubdūna Laka ۖ Yaqūlūna Law Kāna Lanā Mina Al-'Amri Shay'unQutilnā Hāhunā ۗ Qul Law Kuntum Fī Buyūtikum Labaraza Al-Ladhīna Kutiba `Alayhimu Al-Qatlu 'Ilá Mađāji`ihim ۖ Wa Liyabtaliya Allāhu Mā Fī Şudūrikum Wa Liyumaĥĥişa Mā Fī Qulūbikum Wa ۗ Allāhu `Alīmun Bidhāti Aş-Şudūri 3-154 பிறகு, அத்துக்கத்திற்குப்பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான்;. உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி விட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; (அதனால்) அவர்கள் கூறினார்கள்; "இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?" (என்று, அதற்கு) "நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது" என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தம் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்;. அவர்கள் (தமக்குள்) கூறிக்கொள்ளுகிறார்கள்; "இக்காரியத்தால் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்க மாட்டோம்;" "நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!" என்று (நபியே!) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன். ‌‌‍ ‍‌‍‍ ‌ ‍‍‍‍‌ ‌ ‍‌‍‍ۖ ‌‍‌ ‌‍‍‍‍ ‌‌‍ ‍‍‍‍‍‍‍‍‍ ۖ‍‍‍‍‍‍‍‍‌ ‍‌ۗ ‍ ‌ ‌ ‍ ۗ‍‍‍‍‍‍ ‌‌‍ ‌ ‌ ‍‍‍‍‍‌ ۖ‍‍‍‍‍‍ ‌ ‍‍‍‍‍‌ ‍‌ ‌ ‍‌ ‌ ۗ ‍ ‌ ‍‌‍‍‍ ‍‌‌ ‍‍‍‍‍‍ ‌‌ ‍‍‍ۖ ‌‍‍‍‍ ‌ ‍‌ ‌‍ۗ‍‍‍‍‌‍‍‌ ‍‍‍‌
'Inna Al-Ladhīna Tawallaw Minkum Yawma At-Taqá Al-Jam`āni 'Innamā Astazallahumu Ash-Shayţānu Biba`đi Mā Kasabū ۖ Wa Laqad `Afā Al-Lahu `Anhum ۗ 'Inna Allāha Ghafūrun Ĥalīmun 3-155 இரு கூட்டத்தாரும் (போருக்காகச்) சந்தித்த அந்நாளில், உங்களிலிருந்து யார் திரும்பி விட்டர்களோ அவர்களை, அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக, ஷைத்தான் கால் தடுமாற வைத்தான்;. நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் - மெய்யாகவே அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பொறுமையுடையோனாகவும் இருக்கின்றான். ‍‍‍‍ ‌‌ ‍‌‍‍‍ ‍ ‍‍‍‌ ‍‍‍‌ ‍‍‍‍ۖ ‌‍‍‍‌ ‌ ‍‌‍‍ۗ ‍‍‍‍‌‌
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Lā Takūnū Kālladhīna Kafarū Wa Qālū Li'khwānihim 'Idhā Đarabū Fī Al-'Arđi 'Aw Kānū Ghuzzan Law Kānū `Indanā Mā Mātū Wa Mā Qutilū Liyaj`ala Allāhu Dhālika ĤasratanQulūbihim Wa ۗ Allāhu Yuĥyī Wa Yumītu Wa ۗ Allāhu Bimā Ta`malūna Başīrun 3-156 முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்;. பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்; "அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்" என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான்;. மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்;. அவனே மரிக்கச் செய்கிறான்;. இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான். ‌ ‌‌ ‍‍‍‍ ‌‌ ‌ ‍‍‍‍ ‌‌ ‌‍‍‌ ‌‌‌‌ ‌‍ ‌‌‌ ‍‌‌ ‌ ‌ ‍‌‍‍‍‌ ‌ ‌ ‌‌ ‌ ‍‍‍‍ ‌ ‍ ۗ ‌‍‍‍‍ۗ ‌ ‍‍‍‍‍
Wa La'in Qutiltum Fī Sabīli Allāhi 'Aw Muttum Lamaghfiratun Mina Allāhi Wa Raĥmatun Khayrun Mimmā Yajma`ūna 3-157 இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும். அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும். ‍‌ ‍ ‍‍‍‍‍ ‌‌‌ ‍‍‍‍‍‍ ‌‌‍ ‍‍‌ ‍‍‍‍‌ ‍‍‍
Wa La'in Muttum 'Aw Qutiltum La'ilá Allāhi Tuĥsharūna 3-158 நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடமே நீங்கள் ஒரு சேரக் கொண்டு வரப்படுவீர்கள். ‍‌ ‌‌‌ ‍ ‌ ‍ ‌
Fabimā Raĥmatin Mina Allāhi Linta Lahum ۖ Wa Law Kunta Fažžāan Ghalīža Al-Qalbi Lānfađđū Min Ĥawlika ۖ Fā`fu `Anhum Wa Astaghfir Lahum Wa Shāwirhum Al-'Amri ۖ Fa'idhā `Azamta Fatawakkal `Alá Allāhi ۚ 'Inna Allāha Yuĥibbu Al-Mutawakkilīna 3-159 அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். ‌ ‌‍‍ ‍‌‍‍ۖ ‌‌ ‍‌‍‍‍ ‍‍‍‍‌ ‍‍‍‍‍ ‍‍‍ ‌‍‍‍‍‌ ‍‌ ۖ ‍‌‍‍‍ ‌‍‍‍‍‌ ‌‌‍‍ ‍‍‌ ۖ ‌‌‌ ‌ ۚ
'In Yanşurkumu Allāhu Falā Ghāliba Lakum ۖ Wa 'In Yakhdhulkum Faman Dhā Al-Ladhī Yanşurukum Min Ba`dihi ۗ Wa `Alá Allāhi Falyatawakkali Al-Mu'uminūna 3-160 (முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும். ‍‌‍‍‍‍‍‍‍ ‌ ۖ ‌‌‌‍‍‍ ‍‌ ‌‌‌ ‍‌‍‍‍‍‍‍‍ ‍‌ ۗ ‌‌
Wa Mā Kāna Linabīyin 'An Yaghulla ۚ Wa Man Yaghlul Ya'ti Bimā Ghalla Yawma Al-Qiyāmati ۚ Thumma Tuwaffá Kullu Nafsin Mā Kasabat Wa Hum Lā Yužlamūna 3-161 எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை (க்குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். ‌ ‍‍‍ ‌‌‍‍ۚ ‌‍‌‍‍‍ ‌ ‍ ‍ ‍‍ۚ‌ ‌ ‌ ‌ ‍‍‍
'Afamani Attaba`a Riđwāna Allāhi Kaman Bā'a Bisakhaţin Mina Allāhi Wa Ma'wāhu Jahannamu ۚ Wa Bi'sa Al-Maşīru 3-162 அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின் பற்றி நடப்போர், அல்லாஹ்வின் கோபத்தைத் தம்மேல் வரவழைத்துக் கொண்டவர் போல் ஆவாரா? (அல்ல - கோபத்தை வரவழைத்துக் கொண்டோருடைய) அவனது இருப்பிடம் நரகமேயாகும்;. அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டதுமாகும். ‍‍‍‍‌ ‍ ‍‌‍‍‌‌ ‍‍‍‍ ‌‌‍‍‌‍‍ۚ‍‍
Hum Darajātun `Inda Allāhi Wa ۗ Allāhu Başīrun Bimā Ya`malūna 3-163 அல்லாஹ்விடத்தில் அவர்களுக்குப் பல நிலைகள் உள்ளன - இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான். ‌‌‍‍‍ ‍‌‍‍‍‌ ۗ‍‍‍‍‌ ‌
Laqad Manna Allāhu `Alá Al-Mu'uminīna 'Idh Ba`atha Fīhim Rasūlāan Min 'Anfusihim Yatlū `Alayhim 'Āyātihi Wa Yuzakkīhim Wa Yu`allimuhumu Al-Kitāba Wa Al-Ĥikmata Wa 'In Kānū Min Qablu Lafī Đalālin Mubīnin 3-164 நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்;. அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்;. அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்;. இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்;. மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர். ‌ ‍ ‍ ‌ ‍‍‍‍ ‌‌‌ ‌‍‌ ‍‌ ‌‌‌ ‌‍ ‌ ‌ ‍‍ ‌‌‌ ‌ ‍‌ ‍‍
'Awalammā 'Aşābatkum Muşībatun Qad 'Aşabtum Mithlayhā Qultum 'Anná Hādhā ۖ Qul Huwa Min `Indi 'Anfusikum ۗ 'Inna Allāha `Alá Kulli Shay'in Qadīrun 3-165 இன்னும் உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம் வந்துற்றபோது, நீங்கள் (பத்ரில்) அவர்களுக்கு இது போன்று இருமடங்குத் துன்பம் உண்டு பண்ணியிருந்த போதிலும், "இது எப்படி வந்தது?" என்று கூறுகிறீர்கள். (நபியே!) நீர் கூறும்; இது (வந்தது) உங்களிடமிருந்தேதான் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்," ‌‍‍‍‌ ‌‍‍ ‍‍‍‍‌‌ ‌‍‍‍‍ ‌ ‍ ‌‍‌ ‌‌ ۖ ‍ ‌ ‍‌ ‍‌‍‍‍‌ ‌‌ۗ ‍ ‌ ‍
Wa Mā 'Aşābakum Yawma At-Taqá Al-Jam`āni Fabi'idhni Allāhi Wa Liya`lama Al-Mu'uminīna 3-166 மேலும், (நீங்களும் முஷ்ரிக்குகளும் ஆகிய) இரு கூட்டத்தினரும் சந்தித்த நாளையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தான் (ஏற்பட்டன. இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின்களை (சோதித்து) அறிவதற்காகவேயாம். ‌ ‌‍‍ ‍ ‍‍‍‌ ‍‍‍ ‌
Wa Liya`lama Al-Ladhīna Nāfaqū ۚ Wa Qīla Lahum Ta`ālaw Qātilū Fī Sabīli Allāhi 'Aw Adfa`ū ۖ Qālū Law Na`lamu Qitālāan Lāttaba`nākum ۗ Hum Lilkufri Yawma'idhin 'Aqrabu Minhum Lil'īmāni ۚ Yaqūlūna Bi'afwhihim Mā Laysa Fī Qulūbihim Wa ۗ Allāhu 'A`lamu Bimā Yaktumūna 3-167 இன்னும் (முனாஃபிக் தனம் செய்யும்) நயவஞ்சகரை(ப் பிரித்து) அறிவதற்கும் தான்; அவர்களிடம் கூறப்பட்டது, "வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள் அல்லது (பகைவர்கள் அணுகாதவாறு) தடுத்து விடுங்கள்," (அப்போது) அவர்கள் சொன்னார்கள்; "நாங்கள் போரைப் பற்றி அறிந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம்." அன்றையதினம் அவர்கள் ஈமானைவிட குஃப்ரின் பக்கமே அதிகம் நெருங்கியிருந்தார்கள்;. தம் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் வாய்களினால் கூறினர்;. அவர்கள் (தம் உள்ளங்களில்) மறைத்து வைப்பதையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான். ‍‍‍‍ ‍‍‍ۚ ‌‍‍‍‍ ‌‌ ‌ ‍‍‍‍‍ ‌‌‌ ۖ ‌ ‌ ۗ‍‍‌ ‌ ‌‍‍‍‍ ‍‌‍‍‍ ‍‍‍ ۚ‍‍‍‍‍‍ ‌ ‌ ‍‍‍ۗ ‌ ‌
Al-Ladhīna Qālū Li'khwānihim Wa Qa`adū Law 'Aţā`ūnā Mā Qutilū ۗ Qul Fādra'ū `An 'Anfusikumu Al-Mawta 'In Kuntum Şādiqīna 3-168 (போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி; "அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்" என்று கூறுகிறார்கள்; (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரனம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள்" (பார்ப்போம் என்று). ‍‍‍‍‌ ‌‍‍‌‌ ‌ ‌‍‍‌ ‌ ۗ ‌‍‍‍‌‌‌ ‍‌ ‌‌ ‌‌ ‍‌‍‍‍‌
Wa Lā Taĥsabanna Al-Ladhīna Qutilū Fī Sabīli Allāhi 'Amwātāan ۚ Bal 'Aĥyā'un `Inda Rabbihim Yurzaqūna 3-169 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். ‌ ‍ ‍‍‍‌ ‍‍‍‍‍ ‌‌ۚ ‌‍‍‍‌‌ ‍‌‍‍‍‌ ‌‍ ‌‍
Farīna Bimā 'Ātāhumu Allāhu Min Fađlihi Wa Yastabshirūna Bial-Ladhīna Lam Yalĥaqū Bihim Min Khalfihim 'Allā Khawfun `Alayhim Wa Lā Hum Yaĥzanūna 3-170 தன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்;. மேலும் (போரில் ஈடுபட்டிருந்த தன் முஃமினான சகோதரர்களில் மரணத்தில்) தம்முடன் சேராமல் (இவ்வுலகில் உயிருடன்) இருப்போரைப் பற்றி; "அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்" என்று கூறி மகிழ்வடைகிறார்கள். ‍‍‍‍ ‍‌ ‌ ‍ ‍‌‍‍‍‍ ‌‍‍‍‍‍‌‍‍‍‍ ‍‍‍‌ ‍‌ ‍ ‌‌ ‌‌
Yastabshirūna Bini`matin Mina Allāhi Wa Fađlin Wa 'Anna Allāha Lā Yuđī`u 'Ajra Al-Mu'uminīna 3-171 அல்லாஹ்விடமிருந்து தாங்கள் பெற்ற நிஃமத்துகள் (நற்பேறுகள்) பற்றியும், மேன்மையைப் பற்றியும் நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்குரிய நற்கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடுவதில்லை. என்பதைப் பற்றியும் மகிழ்வடைந்தோராய் இருக்கின்றார்கள். ‍‍‍‍‌ ‍ ‌‍‍‍‌ ‌‌ ‍ ‌ ‍‍‍‍‍‍ ‌‍‍
Al-Ladhīna Astajābū Lillāh Wa Ar-Rasūli Min Ba`di Mā 'Aşābahumu Al-Qarĥu ۚ Lilladhīna 'Aĥsanū Minhum Wa Attaqaw 'Ajrun `Ažīmun 3-172 அவர்கள் எத்ததையோரென்றால், தங்களுக்கு(ப் போரில்) காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடையவும், (அவனுடைய) ரஸூலுடையவும் அழைப்பை ஏற்(று மீண்டும் போருக்குச் சென்)றனர்; அத்தகையோரில் நின்றும் யார் அழகானவற்றைச் செய்து, இன்னும் பாவத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மகத்தான நற்கூலியிருக்கிறது. ‍‍‍‍‍ ‍‌ ‌ ‍‌ ‌‍‍‍ۚ ‍‍‍‍ ‌‌ ‍‌‍‍‍ ‌‍‍‍‌‌ ‌‍‌ ‍‍‍
Al-Ladhīna Qāla Lahumu An-Nāsu 'Inna An-Nāsa Qad Jama`ū Lakumkhshawhum Fazādahum 'Īmānāan Wa Qālū Ĥasbunā Al-Lahu Wa Ni`ma Al-Wakīlu 3-173 மக்களில் சிலர் அவர்களிடம்; "திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறி(அச்சுறுத்தி)னர்;. ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது. "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்" என்று அவர்கள் கூறினார்கள். ‍‍‍ ‍‍‍‍ ‍‍‍‍ ‍ ‌‌ ‌‌ ‌‍‌ ‌
nqalabū Bini`matin Mina Allāhi Wa Fađlin Lam Yamsas/hum Sū'un Wa Attaba`ū Riđwāna Allāhi Wa ۗ Allāhu Dhū Fađlin `Ažīmin 3-174 இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள். எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை. (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான். ‍‍‍‍‍ ‌‍‍‍‌ ‍‍‍‌ ‌‍‍‍‍‌ ۗ ‌‌‌ ‍‍‍‍ ‍‍‍
'Innamā Dhalikumu Ash-Shayţānu Yukhawwifu 'Awliyā'ahu Falā Takhāfūhum Wa Khāfūni 'In Kuntum Mu'uminīna 3-175 ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான். ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள். ‍‌ ‌ ‍‍‍‍‍‍‍ ‌‌‍‍‍ ‌ ‍‍‍‍ ‌‍‍‍‍‍ ‌‌ ‍‌‍‍
Wa Lā Yaĥzunka Al-Ladhīna Yusāri`ūna Fī Al-Kufri ۚ 'Innahum Lan Yađurrū Allaha Shay'āan ۗ Yurīdu Allāhu 'Allā Yaj`ala Lahum Ĥažžāan Al-'Ākhirati ۖ Wa Lahum `Adhābun `Ažīmun 3-176 "குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்;. நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது. அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்;. அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு. ‌ ‌‍‍‍‍‍ ‍‍‌ ۚ‍ ‍‌‍‍‍‌‍ ‍‍‍ۗ‍‍‍‍‌ ‍ ‌‌ ‍‍‍‍ ‍‍‍‍‌‍‍ ۖ‍‍‌‍‍
'Inna Al-Ladhīna Ashtaraw Al-Kufra Bil-'Īmāni Lan Yađurrū Allaha Shay'āan Wa Lahum `Adhābun 'Alīmun 3-177 யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு. ‍‍‍‌‌‌ ‌ ‍‍‍ ‍‌‍‍‍‌‍ ‍‍‍‌ ‌ ‍‍‌
Wa Lā Yaĥsabanna Al-Ladhīna Kafarū 'Annamā Numlī Lahum Khayrun Li'anfusihim ۚ 'Innamā Numlī Lahum Liyazdādū 'Ithmāan ۚ Wa Lahum `Adhābun Muhīnun 3-178 இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு. ‌ ‍ ‍‍‍‌ ‌‍‌ ‍‍‌ ‌ۚ‍‌ ‌‌‌‌ ‌ۚ‍‍‌
Mā Kāna Allāhu Liyadhara Al-Mu'uminīna `Alá Mā 'Antum `Alayhi Ĥattá Yamīza Al-Khabītha Mina Aţ-Ţayyibi ۗ Wa Mā Kāna Allāhu Liyuţli`akum `Alá Al-Ghaybi Wa Lakinna Allāha Yajtabī Min Rusulihi Man Yashā'u ۖ Fa'āminū Billāhi Wa Rusulihi ۚ Wa 'In Tu'uminū Wa Tattaqū Falakum 'Ajrun `Ažīmun 3-179 (காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை. இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை. ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. நீங்கள் நம்பிக்கை கெண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு. ‌ ‍‍‍ ‍ ‌‍‍‍‍‍ ‌ ‍‌ ‌‌‍ ‍‍‍‍ ‌ ‍‍‍‍‍‌ ‍‍‍‍‍‍‍‍‍ۗ ‌‌ ‍‍‍ ‍ ‍‍‍‍ ‌ ‍‍‍‍‍ ‌‍ ‍ ‍‍‍‍ ‍‌ ‌‍ ‍‌‍‍‌‌ ۖ ‌ ‍‍ ‌‌‍ ۚ ‌‌‌ ‌ ‌‍‍‍‌ ‌‍‌ ‍‍‍
Wa Lā Yaĥsabanna Al-Ladhīna Yabkhalūna Bimā 'Ātāhumu Allāhu Min Fađlihi Huwa Khayan Lahum ۖ Bal Huwa Sharrun Lahum ۖ Sayuţawwaqūna Mā Bakhilū Bihi Yawma Al-Qiyāmati ۗ Wa Lillāh Mīrāthu As-Samāwāti Wa Al-'Arđi Wa ۗ Allāhu Bimā Ta`malūna Khabīrun 3-180 அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்;. அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்;. வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான். ‌ ‍ ‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍‍‍‍‌ ‌ ‍ ‍‌‍‍‍‍‍‌ۖۖ‍‍‍‍‍‍ ‌ ‍‍‍‌ ‍ ‍‍ۗ ‍‌ ‍‌‍‍‌‌‍ ۗ ‌ ‍‍‍
Laqad Sami`a Allāhu Qawla Al-Ladhīna Qālū 'Inna Allāha Faqīrun Wa Naĥnu 'Aghniyā'u ۘ Sanaktubu Mā Qālū Wa Qatlahumu Al-'Anbiyā'a Bighayri Ĥaqqin Wa Naqūlu Dhūqū `Adhāba Al-Ĥarīqi 3-181 "நிச்சயமாக அல்லாஹ் ஏழை, நாங்கள் தாம் சீமான்கள்" என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான்;. (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும், அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொள்வோம், "சுட்டுப் பொசுக்கும் நரக நெருப்பின் வேதனையைச் சுவையுங்கள்" என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம். ‍‍‍‍‍‌ ‌ ‍ ‍‍‍‍‍‌ ‌ ‌‍‍‍‍‍‍‍‌‌ ۘ‌ ‌‍‍‍‍‍‌‌ ‍‍‍‍‍‍‍‌ ‍‌ ‌‍‍‍ ‌‌‍‍‌
Dhālika Bimā Qaddamat 'Aydīkum Wa 'Anna Allāha Laysa Bižallāmin Lil`abīdi 3-182 இதற்கு காரணம் முன்னமேயே உங்கள் கைகள் செய்து அனுப்பிய கெட்ட செயல்களேயாகும்;. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு எவ்வித அநீதியும் செய்பவனல்லன். ‍ ‌ ‌‌ ‍ ‍‍‍‍ ‍‍‍
Al-Ladhīna Qālū 'Inna Allāha `Ahida 'Ilaynā 'Allā Nu'umina Lirasūlin Ĥattá Ya'tiyanā Biqurbānin Ta'kuluhu An-Nāru ۗ Qul Qad Jā'akum Rusulun Min Qablī Bil-Bayyināti Wa Bial-Ladhī Qultum Falima Qataltumūhum 'In Kuntum Şādiqīna 3-183 மேலும் அவர்கள், "எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை நமக்கு காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசவாசம் கொள்ள வேண்டாம்" என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று கூறுகிறார்கள். (நபியே!) "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்" என்று நீர் கூறும். ‍‍‍‍‍‌ ‌ ‍ ‌ ‌‍‌ ‌‌ ‍‍‍ ‌ ‌ ‍‍‍‍‍‍‍‍‍‍‍‌‌ ۗ ‌ ‍‍‍‌ ‌‌ ‍‌ ‍‍‍ ‍‍‍‍ ‌‌ ‍‌‍‍‍‌
Fa'in Kadhdhabūka Faqad Kudhdhiba Rusulun Min Qablika Jā'ū Bil-Bayyināti Wa Az-Zuburi Wa Al-Kitābi Al-Munīri 3-184 எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர். ‍‍‍‍‌ ‌‌ ‍‌ ‍‍‍ ‍‍‍‍‍‌‌‌ ‍‍‍‍‍‍‍‌ ‌‍‍
Kullu Nafsin Dhā'iqatu Al-Mawti ۗ Wa 'Innamā Tuwaffawna 'Ujūrakum Yawma Al-Qiyāmati ۖ Faman Zuĥziĥa `Ani An-Nāri Wa 'Udkhila Al-Jannata Faqad Fāza ۗ Wa Mā Al-Ĥayāatu Ad-Dunyā 'Illā Matā`u Al-Ghurūri 3-185 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. ‌ ‌‍‍‌‍‍ ۗ ‌‌‍‌ ‍ ‌‌‍ ‍‍ۖ ‍‌‍‍‍‍‍‍‌ ‌‌‍‍‍‍‍ ‍‍‍‌ ‍‍‍‌‌ ۗ ‌‌ ‍‍ ‍‌‍‍‌ ‌‌ ‍‍‍ ‍‍‍‌
Latublawunna Fī 'Amwālikum Wa 'Anfusikum Wa Latasma`unna Mina Al-Ladhīna 'Ūtū Al-Kitāba Min Qablikum Wa Mina Al-Ladhīna 'Ashrakū 'Adhan Kathīrāan ۚ Wa 'In Taşbirū Wa Tattaqū Fa'inna Dhālika Min `Azmi Al-'Umūri 3-186 (முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்;. உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்;. ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். ‍‍ ‌‌ ‌‌‌‍ ‌‍ ‍‍‍‍ ‌‍‍‍‍ ‍‌ ‍‍‍ ‌ ‍‍‍‍ ‌‍‌ ‌‌‌‌‌ ‍ۚ ‌‌‌‍‍‍‌‌ ‌‍‍‍ ‌ ‍‌
Wa 'Idh 'Akhadha Allāhu Mīthāqa Al-Ladhīna 'Ūtū Al-Kitāba Latubayyinunnahu Lilnnāsi Wa Lā Taktumūnahu Fanabadhūhu Warā'a Žuhūrihim Wa Ashtaraw Bihi Thamanāan Qalīlāan ۖ Fabi'sa Mā Yashtarūna 3-187 தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக). அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும். ‌‌‌ ‌‍‍‌ ‍ ‍‍‍ ‍‍‍‍ ‌‍‍‍‍‍‍‍‍‍‍ ‌‌ ‍ ‍‍‌ ‌‌‍‍‌‌‌ ‌‌‌ ‍‍‌ۖ ‌ ‌
Lā Taĥsabanna Al-Ladhīna Yafraĥūna Bimā 'Ataw Wa Yuĥibbūna 'An Yuĥmadū Bimā Lam Yaf`alū Falā Taĥsabannahum Bimafāzatin Mina Al-`Adhābi ۖ Wa Lahum `Adhābun 'Alīmun 3-188 எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழ்படவேண்டும் என்று விருப்புகிறார்களோ, அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் - அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு. ‌ ‍ ‍‍‍‍ ‍‍‍‌ ‌‌‌ ‌‍‍‍ ‌‌‌ ‌ ‌ ‌ ‍‍‍‍ ‌‍‍‌ ۖ‍‍‌
Wa Lillāh Mulku As-Samāwāti Wa Al-'Arđi Wa ۗ Allāhu `Alá Kulli Shay'in Qadīrun 3-189 வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். ‍‌‍‍‌‌‍ ۗ ‌ ‍
'Inna Fī Khalqi As-Samāwāti Wa Al-'Arđi Wa Akhtilāfi Al-Layli Wa An-Nahāri La'āyātin Li'wlī Al-'Albābi 3-190 நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. ‍‍ ‍‌‍‍‌‌‍‍‍‍‍‍ ‌‍‍‍‍‍‍‍‍‌ ‍‍‍‌ ‌
Al-Ladhīna Yadhkurūna Allāha Qiyāmāan Wa Qu`ūdāan Wa `Alá Junūbihim Wa Yatafakkarūna Fī Khalqi As-Samāwāti Wa Al-'Arđi Rabbanā Mā Khalaqta Hādhā Bāţilāan Subĥānaka Faqinā `Adhāba An-Nāri 3-191 அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, "எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" (என்றும்;). ‍‍‍‍‍‌ ‌ ‌‍‍‌‌‌ ‌‌ ‌‍‍‌ ‍‍ ‍‌‍‍‌‌‍ ‌‍‌ ‌ ‍‍‍‍‍ ‌‌ ‍‌‌ ‍‍‍‍ ‍‍‍‍‌ ‍‍‌ ‍‍
Rabbanā 'Innaka Man Tudkhili An-Nāra Faqad 'Akhzaytahu ۖ Wa Mā Lilžžālimīna Min 'Anşārin 3-192 "எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!" (என்றும்;). ‌ ‌‍ ‍‌‍‍‍‍‍‍‌‍‌ ‍‍‍‌ ‌‍‍‍ ۖ ‌‌ ‍‍‍‍‍‍‍‍‍ ‍‌ ‌‌‍‍‍‍‍‌
Rabbanā 'Innanā Sami`nā Munādīāan Yunādī Lil'īmāni 'An 'Āminū Birabbikum Fa'āmannā ۚ Rabbanā Fāghfir Lanā Dhunūbanā Wa Kaffir `Annā Sayyi'ātinā Wa Tawaffanā Ma`a Al-'Abrāri 3-193 "எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" (என்றும்;). ‌ ‌‍‌ ‌ ‌‍‍‍‌ ‌ ‍‍‍ ‌‌‌ ‍‍‍‍‌ ۚ ‌‍‍‍‌ ‌ ‌‌ ‌‍‌ ‍‍‍‍‌ ‍‍‍‍‌ ‌‌ ‍‍
Rabbanā Wa 'Ātinā Mā Wa`adtanā `Alá Rusulika Wa Lā Tukhzinā Yawma Al-Qiyāmati ۗ 'Innaka Lā Tukhlifu Al-Mī`āda 3-194 "எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்). ‌ ‌‌‌ ‌ ‌‍‌ ‌ ‌ ‌‌ ‍‍‍‍‌ ‍ ‍‍ۗ‍ ‌ ‍‍‍
Fāstajāba Lahum Rabbuhum 'Annī Lā 'Uđī`u `Amala `Āmilin Minkum Min Dhakarin 'Aw 'Unthá ۖ Ba`đukum Min Ba`đin ۖ Fa-Al-Ladhīna Hājarū Wa 'Ukhrijū Min Diyārihim Wa 'Ūdhū Fī Sabīlī Wa Qātalū Wa Qutilū La'ukaffiranna `Anhum Sayyi'ātihim Wa La'udkhilannahum Jannātin Tajrī Min Taĥtihā Al-'Anhāru Thawābāan Min `Indi Allāhi Wa ۗ Allāhu `Indahu Ĥusnu Ath-Thawābi 3-195 ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்னையை ஏற்றுக் கொண்டான்; "உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆனாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்;. எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்;. இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்" (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்;. இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு. ‍‍ ‌‍‍ ‌ ‌‍‍‍‌ ‍‌‍‍‍ ‍‌ ‌‌ ‌‌‌ ‌‌‍‌ ۖ‍‍‍ ‍‌ۖ ‍‍‍‍ ‌‌ ‌‌‍‌ ‍‌ ‌‌‍‍‌‌‌‌ ‌‍‌ ‌‍‌ ‍ ‍‌‍‍‍ ‍‍‍‍ ‌‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‌ ‍‍‍ ‍‌‍‍‍‍‌‌ ‌‌ ‍‌ ‍‌‍‍‍‌ ۗ ‍‌‍‍ ‍‌
Lā Yaghurrannaka Taqallubu Al-Ladhīna Kafarū Fī Al-Bilādi 3-196 காஃபிர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!) உம்மை மயக்கி விடவேண்டாம். ‌ ‍‍‍‍ ‍‍‍‍‍‍‍ ‌
Matā`un Qalīlun Thumma Ma'wāhum Jahannamu ۚ Wa Bi'sa Al-Mihādu 3-197 (அது) மிகவும் அற்ப சுகம். பிறகு அவர்கள் தங்குமிடம் நரகமே யாகும்; (இது) மிகவும் கெட்ட தங்குமிடமும் ஆகும். ‍‍‍‍‍‍‍‍‌‌ ‍ ‌‌ ‍‍‍ۚ
Lakini Al-Ladhīna Attaqaw Rabbahum Lahum Jannātun Tajrī Min Taĥtihā Al-'Anhāru Khālidīna Fīhā Nuzulāan Min `Indi Allāhi ۗ Wa Mā `Inda Allāhi Khayrun Lil'abrāri 3-198 ஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் உண்டு. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்;. (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்;. மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்னையுடையதாகும். ‍‍‍‍‍‍‌‌ ‌‍‍‍‍‍‌ ‍‍‍ ‍‌‍‍‍‍‌‌ ‍‍‍‍ ‌ ‌ ‍‌ ‍‌‍‍‍‌ ۗ ‌‌ ‍‌‍‍‍‌ ‍‍‍‍
Wa 'Inna Min 'Ahli Al-Kitābi Laman Yu'uminu Billāhi Wa Mā 'Unzila 'Ilaykum Wa Mā 'Unzila 'Ilayhim Khāshi`īna Lillāh Lā Yashtarūna Bi'āyāti Allāhi Thamanāan Qalīlāan ۗ 'Ūlā'ika Lahum 'Ajruhum `Inda Rabbihim ۗ 'Inna Allāha Sarī`u Al-Ĥisābi 3-199 மேலும் நிச்சயமாக வேதமுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீதும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)திலும், அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்கள்;. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள்;. இத்தகையோருக்கு நற்கூலி அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிகவும் தீவிரமானவன். ‍‌‍‍ ‍‌‍ ‌‍‌ ‌‌‍ ‌ ‌‍‌ ‌‌‍ ‌ ‍‍‍‍‍‍‍‌‍‍ ‍ ‌‍‌ ۗ‍‍‌‍‍‍‍ ‍‌‍‍‍‌ ‌‍ ۗ ‍ ‍‍‍‍
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Aşbirū Wa Şābirū Wa biţū Wa Attaqū Allaha La`allakum Tufliĥūna 3-200 முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! ‌ ‌‌ ‍‍‍‍ ‌‍‌‌ ‌‍‍‌‌ ‌‌‍‌‍‍‍‌ ‌‍‍
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters
Next Sūrah