Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

58) Sūrat Al-Mujādilh

Printed format

58) سُورَة المُجَادِله

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Qad Sami`a Allāhu Qawla Allatī Tujādiluka Fī Zawjihā Wa Tashtakī 'Ilá Allāhi Wa Allāhu Yasma`u Taĥāwurakumā ۚ 'Inna Allāha Samī`un Başīrun 58-1 நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்தித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன், (எல்லாவற்றையும்) பார்ப்பவன். قَ‍‍دْ‌ سَمِعَ ‌اللَّ‍‍هُ قَ‍‍وْلَ ‌الَّتِي تُجَا‌دِلُكَ فِي ‌زَ‌وْجِهَا‌ ‌وَتَشْتَكِ‍‍ي ‌إِلَى‌ ‌اللَّ‍‍هِ ‌وَ‌اللَّهُ يَسْمَعُ تَحَا‌وُ‌‍رَكُمَ‍‍اۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ سَم‍‍ِ‍ي‍‍ع‌‍ٌ‌ بَ‍‍صِ‍‍يرٌ
Al-Ladhīna Yužāhirūna Minkum Min Nisā'ihim Mā Hunna 'Ummahātihim ۖ 'In 'Ummahātuhum 'Illā Al-Lā'ī Waladnahum ۚ Wa 'Innahum Layaqūlūna Munkaan Mina Al-Qawli Wa Zūan ۚ Wa 'Inna Allāha La`afūwun Ghafūrun 58-2 "உங்களில் சிலர் தம் மனைவியரைத் "தாய்கள்" எனக் கூறிவிடுகின்றனர், அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்" (ஆகிவிடுவது) இல்லை இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் - எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன், மிகவும் மன்னிப்பவன். الَّذ‍ِ‍ي‍‍نَ يُ‍‍ظَ‍‍اهِر‍ُ‍‌ونَ مِ‍‌‍نْ‍‍كُمْ مِ‍‌‍نْ نِس‍‍َ‍ائِهِمْ مَا‌ هُ‍‍نَّ ‌أُمَّ‍‍هَاتِهِمْ ۖ ‌إِ‌نْ ‌أُمَّ‍‍هَاتُهُمْ ‌إِلاَّ‌ ‌ال‍‍لاَّئ‍‍ِ‍‍ي ‌وَلَ‍‍دْنَهُمْ ۚ ‌وَ‌إِنَّ‍‍هُمْ لَيَ‍‍قُ‍‍ول‍‍ُ‍ونَ مُ‍‌‍نْ‍‍كَر‌ا‌ ً‌ مِنَ ‌الْ‍‍قَ‍‍وْلِ ‌وَ‌زُ‌و‌ر‌ا‌ ًۚ ‌وَ‌إِنَّ ‌اللَّ‍‍هَ لَعَفُوٌّ‌ غَ‍‍فُو‌رٌ
Wa Al-Ladhīna Yužāhirūna Min Nisā'ihim Thumma Ya`ūdūna Limā Qālū Fataĥrīru Raqabatin Min Qabli 'An Yatamāssā ۚ Dhālikum Tū`ažūna Bihi Wa ۚ Allāhu Bimā Ta`malūna Khabīrun 58-3 மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் - மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான். وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يُ‍‍ظَ‍‍اهِر‍ُ‍‌ونَ مِ‍‌‍نْ نِس‍‍َ‍ائِهِمْ ثُ‍‍مَّ يَعُو‌د‍ُ‍‌ونَ لِمَا‌ قَ‍‍الُو‌ا‌ فَتَحْ‍‍ر‍ِ‍ي‍‍رُ‌ ‌‍رَقَ‍‍بَةٍ‌ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِ ‌أَ‌نْ يَتَم‍‍َ‍اسَّا‌ ۚ ‌ذَلِكُمْ تُوعَ‍‍ظُ‍‍ونَ بِ‍‍هِ ۚ ‌وَ‌اللَّهُ بِمَا‌ تَعْمَل‍‍ُ‍ونَ خَ‍‍بِيرٌ
Faman Lam Yajid Faşiyāmu Shahrayni Mutatābi`ayni Min Qabli 'An Yatamāssā ۖ Faman Lam Yastaţi` Fa'iţ`āmu Sittīna Miskīnāan ۚ Dhālika Litu'uminū Billāhi Wa Rasūlihi ۚ Wa Tilka Ĥudūdu Allāhi ۗ Wa Lilkāfirīna `Adhābun 'Alīmun 58-4 ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் - வேண்டும், நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும், அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. فَمَ‍‌‍نْ لَمْ يَجِ‍‍دْ‌ فَ‍‍صِ‍‍ي‍‍َ‍امُ شَهْ‍رَيْ‍‍نِ مُتَتَابِعَ‍‍يْ‍‍نِ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِ ‌أَ‌نْ يَتَم‍‍َ‍اسَّا‌ ۖ فَمَ‍‌‍نْ لَمْ يَسْتَ‍‍طِ‍‍عْ فَإِ‍طْ‍‍ع‍‍َ‍امُ سِتّ‍‍ِ‍ي‍‍نَ مِسْكِينا‌‌ ًۚ ‌ذَلِكَ لِتُؤْمِنُو‌ا‌ بِ‍اللَّ‍‍هِ ‌وَ‌‍رَسُولِ‍‍هِ ۚ ‌وَتِلْكَ حُد‍ُ‍‌و‌دُ‌ ‌اللَّ‍‍هِ ۗ ‌وَلِلْكَافِ‍‍ر‍ِ‍ي‍‍نَ عَذ‍َ‍‌ابٌ ‌أَلِيمٌ
'Inna Al-Ladhīna Yuĥāddūna Allāha Wa Rasūlahu Kubitū Kamā Kubita Al-Ladhīna Min Qablihim ۚ Wa Qad 'Anzalnā 'Āyātin Bayyinātin ۚ Wa Lilkāfirīna `Adhābun Muhīnun 58-5 எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, நிச்சயமாக அவர்கள், அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் இழிவாக்கப் பட்டதைப் போல் இழிவாக்கப்ப படுவார்கள் - திடமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். காஃபிர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு. إِنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يُح‍‍َ‍ا‌دّ‍ُ‍‌ونَ ‌اللَّ‍‍هَ ‌وَ‌‍رَسُولَ‍‍هُ كُبِتُو‌ا‌ كَمَا‌ كُبِتَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِهِمْ ۚ ‌وَ‍قَ‍‍دْ‌ ‌أَ‌نْ‍‍زَلْنَ‍‍ا‌ ‌آي‍‍َ‍ات ٍ‌ بَيِّن‍‍َ‍اتٍۚ ‌وَلِلْكَافِ‍‍ر‍ِ‍ي‍‍نَ عَذ‍َ‍‌ابٌ‌ مُهِينٌ
Yawma Yab`athuhumu Allāhu Jamī`āan Fayunabbi'uhum Bimā `Amilū ۚ 'Aĥşāhu Allāhu Wa Nasūhu Wa ۚ Allāhu `Alá Kulli Shay'in Shahīdun 58-6 அல்லாஹ் அவர்கள் அனைவரையும்உயிர் கொடுத்து எழுப்பி, பின்னர் அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அறிவிக்கும் நாளில், அவர்கள் அவற்றை மறந்து விட்ட போதிலும், அல்லாஹ் கணக்கெடுத்து வைத்திருக்கிறான். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான். يَ‍‍وْمَ يَ‍‍بْ‍‍عَثُهُمُ ‌اللَّ‍‍هُ جَمِيعا‌‌ ً‌ فَيُنَبِّئُهُمْ بِمَا‌ عَمِلُ‍‍و‌اۚ ‌أَحْ‍‍صَ‍‍اهُ ‌اللَّ‍‍هُ ‌وَنَس‍‍ُ‍وهُ ۚ ‌وَ‌اللَّهُ عَلَى‌ كُلِّ شَ‍‍يْء‌‌ٍ‌ شَهِيدٌ
'Alam Tará 'Anna Allāha Ya`lamu Mā Fī As-Samāwāti Wa Mā Fī Al-'Arđi ۖ Mā Yakūnu Min NajThalāthatin 'Illā Huwa bi`uhum Wa Lā Khamsatin 'Illā Huwa Sādisuhum Wa Lā 'Adná Min Dhālika Wa Lā 'Akthara 'Illā Huwa Ma`ahum 'Ayna Mā Kānū ۖ Thumma Yunabbi'uhum Bimā `Amilū Yawma Al-Qiyāmati ۚ 'Inna Allāha Bikulli Shay'in `Alīmun 58-7 நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை, இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை, இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன். أَلَمْ تَ‍رَ‌ى‌ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ يَعْلَمُ مَا‌ فِي ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَمَا‌ فِي ‌الأَ‌رْ‍ضِ ۖ مَا‌ يَك‍‍ُ‍ونُ مِ‍‌‍نْ نَ‍‍جْ‍‍وَ‌ى‌ ثَلاَثَة‌‍ٍ‌ ‌إِلاَّ‌ هُوَ‌ ‌‍رَ‌ابِعُهُمْ ‌وَلاَ‌ خَ‍‍مْسَة‌‍ٍ‌ ‌إِلاَّ‌ هُوَ‌ سَا‌دِسُهُمْ ‌وَلاَ‌ ‌أَ‌دْنَى‌ مِ‍‌‍نْ ‌ذَلِكَ ‌وَلاَ‌ ‌أَكْثَ‍رَ‌ ‌إِلاَّ‌ هُوَ‌ مَعَهُمْ ‌أَيْ‍‍نَ مَا‌ كَانُو‌اۖ ثُ‍‍مَّ يُنَبِّئُهُمْ بِمَا‌ عَمِلُو‌ا‌ يَ‍‍وْمَ ‌الْ‍‍قِ‍‍يَامَةِ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ بِكُلِّ شَ‍‍يْءٍ‌ عَلِيمٌ
'Alam Tará 'Ilá Al-Ladhīna Nuhū `Ani An-NajThumma Ya`ūdūna Limā Nuhū `Anhu Wa Yatanājawna Bil-'Ithmi Wa Al-`Udwāni Wa Ma`şiyati Ar-Rasūli Wa 'Idhā Jā'ūka Ĥayyawka Bimā Lam Yuĥayyika Bihi Allāhu Wa Yaqūlūna Fī 'Anfusihim Lawlā Yu`adhdhibunā Al-Lahu Bimā Naqūlu ۚ Ĥasbuhum Jahannamu Yaşlawnahā ۖ Fabi'sa Al-Maşīru 58-8 இரகசியம் பேசுவதை விட்டுத்தடுக்கப்பட்டிருந்தும், எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதன் பால் மீண்டு பாவத்தையும் வரம்பு மீறுதலையும், ரஸூலுக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியமாக ஆலோசனை செய்கிறார்களே அவர்களை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? பின்னர் அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் உம்மை எ(வ்வாசகத்)தைக் கொண்டு ஸலாம் (முகமன்) கூறிவில்லையோ அதைக் கொண்டு (முகமன்) கூறுகிறார்கள். பிறகு, அவர்கள் தங்களுக்குள் "நாம் (இவ்வாறு) சொல்லியதற்காக ஏன் அல்லாஹ் நம்மை வேதனைக்குள்ளாக்கவில்லை" என்றும் கூறிக் கொள்கின்றனர். நரகமே அவர்களுக்கு போதுமானதாகும், அவர்கள் அதில் நுழைவார்கள் - மீளும் தலத்தில் அது மிகக் கெட்டதாகும். أَلَمْ تَ‍رَ‌ى‌ ‌إِلَى‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ نُهُو‌ا‌ عَنِ ‌ال‍‍نَّ‍‍جْ‍‍وَ‌ى‌ ثُ‍‍مَّ يَعُو‌د‍ُ‍‌ونَ لِمَا‌ نُهُو‌ا‌ عَ‍‌‍نْ‍‍هُ ‌وَيَتَنَاجَ‍‍وْنَ بِ‍الإِثْمِ ‌وَ‌الْعُ‍‍دْ‌و‍َ‍‌انِ ‌وَمَعْ‍‍صِ‍‍يَةِ ‌ال‍رَّس‍‍ُ‍ولِ ‌وَ‌إِ‌ذَ‌ا‌ ج‍‍َ‍ا‌ء‍ُ‍‌وكَ حَيَّ‍‍وْكَ بِمَا‌ لَمْ يُحَيِّكَ بِهِ ‌اللَّ‍‍هُ ‌وَيَ‍‍قُ‍‍ول‍‍ُ‍ونَ فِ‍‍ي ‌أَ‌ن‍‍فُسِهِمْ لَوْلاَ‌ يُعَذِّبُنَا‌ ‌اللَّهُ بِمَا‌ نَ‍‍قُ‍‍ولُ ۚ حَسْبُهُمْ جَهَ‍‍نَّ‍‍مُ يَ‍‍صْ‍‍لَوْنَهَا‌ ۖ فَبِئْسَ ‌الْمَ‍‍صِ‍‍يرُ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū 'Idhā Tanājaytum Falā Tatanājaw Bil-'Ithmi Wa Al-`Udwāni Wa Ma`şiyati Ar-Rasūli Wa Tanājaw Bil-Birri Wa At-Taqۖ Wa Attaqū Allaha Al-Ladhī 'Ilayhi Tuĥsharūna 58-9 ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இரகசியம் பேசிக் கொண்டால், பாவத்தையும் வரம்பு மீறுதலையும், (நம்) தூதருக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள், ஆனால் நன்மை செய்வதற்காகவும் பயபக்தியுடன் இருப்பதற்காகவும் இரகசியம் பேசிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கு - எவன்பால் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ - அவனுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள். ي‍‍َ‍ا‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُ‍‍و‌ا‌ ‌إِ‌ذَ‌ا‌ تَنَاجَيْتُمْ فَلاَ‌ تَتَنَاجَوْ‌ا‌ بِ‍الإِثْمِ ‌وَ‌الْعُ‍‍دْ‌و‍َ‍‌انِ ‌وَمَعْ‍‍صِ‍‍يَةِ ‌ال‍رَّس‍‍ُ‍ولِ ‌وَتَنَاجَوْ‌ا‌ بِ‍الْبِ‍‍ر‍ّ‍ِ‌ ‌وَ‌ال‍‍تَّ‍‍قْ‍‍وَ‌ى‌ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌اۖ ‌اللَّ‍‍هَ ‌الَّذِي ‌إِلَ‍‍يْ‍‍هِ تُحْشَرُ‌ونَ
'Innamā An-Najwá Mina Ash-Shayţāni Liyaĥzuna Al-Ladhīna 'Āmanū Wa Laysa Biđārrihim Shay'āan 'Illā Bi'idhni Allāhi ۚ Wa `Alá Allāhi Falyatawakkali Al-Mu'uminūna 58-10 ஈமான் கொண்டவர்களைக் கவலைப்படச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்துள்ளதே (இந்த) இரகசிய(ப் பேச்சாகு)ம், ஆனால், அல்லாஹ்வுடையை அனுமதியின்றி (அவர்களுக்கு) அவனால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது, எனவே முஃமின்கள் அல்லாஹ்வையே முற்றிலும் நம்பியிருக்க வேண்டும். إِنَّ‍‍مَا‌ ‌ال‍‍نَّ‍‍جْ‍‍وَ‌ى‌ مِنَ ‌ال‍‍شَّيْ‍‍طَ‍‍انِ لِيَحْزُنَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ ‌وَلَ‍‍يْ‍‍سَ بِ‍‍ضَ‍‍ا‌رِّهِمْ شَ‍‍يْ‍‍ئا‌‌ ً‌ ‌إِلاَّ‌ بِإِ‌ذْنِ ‌اللَّ‍‍هِ ۚ ‌وَعَلَى‌ ‌اللَّ‍‍هِ فَلْيَتَوَكَّلِ ‌الْمُؤْمِنُونَ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū 'Idhā Qīla Lakum Tafassaĥū Fī Al-Majālisi Fāfsaĥū Yafsaĥi Allāhu Lakum ۖ Wa 'Idhā Qīla Anshuzū Fānshuzū Yarfa`i Allāhu Al-Ladhīna 'Āmanū Minkum Wa Al-Ladhīna 'Ūtū Al-`Ilma Darajātin Wa ۚ Allāhu Bimā Ta`malūna Khabīrun 58-11 ஈமான் கொண்டவர்களே! சபைகளில் "நகர்ந்து இடங்கொடுங்கள்" என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள், அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, 'எழுந்திருங்கள்" என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள், அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும், கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். ي‍‍َ‍ا‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُ‍‍و‌ا‌ ‌إِ‌ذَ‌ا‌ قِ‍‍ي‍‍لَ لَكُمْ تَفَسَّحُو‌ا‌ فِي ‌الْمَجَالِسِ فَافْسَحُو‌ا‌ يَفْسَحِ ‌اللَّ‍‍هُ لَكُمْ ‌وَ‌إِ‌ذَ‌ا‌ ۖ قِ‍‍ي‍‍لَ ‌ان‍‍شُزُ‌و‌ا‌ فَا‌ن‍‍شُزُ‌و‌ا‌ يَرْفَعِ ‌اللَّ‍‍هُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ مِ‍‌‍نْ‍‍كُمْ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌أ‍ُ‍‌وتُو‌ا‌الْعِلْمَ ‌دَ‌‍رَج‍‍َ‍اتٍ‌ ‌وَ‌اللَّهُ ۚ بِمَا‌ تَعْمَل‍‍ُ‍ونَ خَ‍‍بِيرٌ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū 'Idhā Nājaytumu Ar-Rasūla Faqaddimū Bayna Yaday Najwākum Şadaqatan ۚ Dhālika Khayrun Lakum Wa 'Aţharu ۚ Fa'in Lam Tajidū Fa'inna Allāha Ghafūrun Raĥīmun 58-12 ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றீராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். ي‍‍َ‍ا‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُ‍‍و‌ا‌ ‌إِ‌ذَ‌ا‌ نَاجَيْتُمُ ‌ال‍رَّس‍‍ُ‍ولَ فَ‍‍قَ‍‍دِّمُو‌ا‌ بَ‍‍يْ‍‍نَ يَدَيْ نَ‍‍جْ‍‍وَ‌اكُمْ صَ‍‍دَ‍قَ‍‍ة‌ ً‌ ‌ذَلِكَ ۚ خَ‍‍يْ‍‍ر‌ٌ‌ لَكُمْ ‌وَ‌أَ‍طْ‍‍هَرُ‌ فَإِ‌نْ ۚ لَمْ تَجِدُ‌و‌ا‌ فَإِنَّ ‌اللَّ‍‍هَ غَ‍‍ف‍‍ُ‍و‌ر‌ٌ‌ ‌‍رَحِيمٌ
'A'ashfaqtum 'An Tuqaddimū Bayna Yaday Najwākum Şadaqātin ۚ Fa'idh Lam Taf`alū Wa Tāba Allāhu `Alaykum Fa'aqīmū Aş-Şalāata Wa 'Ātū Az-Zakāata Wa 'Aţī`ū Allaha Wa Rasūlahu Wa ۚ Allāhu Khabīrun Bimā Ta`malūna 58-13 நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான், ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள், இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள், மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள், அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான். أَ‌أَشْفَ‍‍قْ‍‍تُمْ ‌أَ‌نْ تُ‍‍قَ‍‍دِّمُو‌ا‌ بَ‍‍يْ‍‍نَ يَدَيْ نَ‍‍جْ‍‍وَ‌اكُمْ صَ‍‍دَ‍قَ‍‍ات‌‍ٍۚ فَإِ‌ذْ‌ لَمْ تَفْعَلُو‌ا‌ ‌وَت‍‍َ‍ابَ ‌اللَّ‍‍هُ عَلَيْكُمْ فَأَ‍قِ‍‍يمُو‌ا‌ال‍‍صَّ‍‍لاَةَ ‌وَ‌آتُو‌ا‌ال‍‍زَّك‍‍َ‍اةَ ‌وَ‌أَ‍طِ‍‍يعُو‌ا‌اللَّ‍‍هَ ‌وَ‌‍رَسُولَ‍‍هُ ۚ ‌وَ‌اللَّهُ خَ‍‍ب‍‍ِ‍ي‍‍ر‌ٌ‌ بِمَا‌ تَعْمَلُونَ
'Alam Tará 'Ilá Al-Ladhīna Tawallaw Qawmāan Ghađiba Allāhu `Alayhim Mā Hum Minkum Wa Lā Minhum Wa Yaĥlifūna `Alá Al-Kadhibi Wa Hum Ya`lamūna 58-14 எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர், அவர்களில் உள்ளவர்களும் அல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர். أَلَمْ تَ‍رَ‌ى‌ ‌إِلَى‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ تَوَلَّوْ‌ا‌ قَ‍‍وْماً‌ غَ‍‍ضِ‍‍بَ ‌اللَّ‍‍هُ عَلَيْهِمْ مَا‌ هُمْ مِ‍‌‍نْ‍‍كُمْ ‌وَلاَ‌ مِ‍‌‍نْ‍‍هُمْ ‌وَيَحْلِف‍‍ُ‍ونَ عَلَى‌ ‌الْكَذِبِ ‌وَهُمْ يَعْلَمُونَ
'A`adda Allāhu Lahum `Adhābāan Shadīdāan ۖ 'Innahum Sā'a Mā Kānū Ya`malūna 58-15 அவர்களுக்காக அல்லாஹ் கடினமான வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை யெல்லாம் மிகவும் கெட்டவையே. أَعَدَّ‌ ‌اللَّ‍‍هُ لَهُمْ عَذَ‌ابا‌‌ ً‌ شَدِيد‌ا‌‌ ًۖ ‌إِنَّ‍‍هُمْ س‍‍َ‍ا‌ءَ‌ مَا‌ كَانُو‌ا‌ يَعْمَلُونَ
Attakhadhū 'Aymānahum Junnatan Faşaddū `An Sabīli Allāhi Falahum `Adhābun Muhīnun 58-16 அவர்கள் தங்கள் சத்தியங்களைக் கேடயமாக ஆக்கிக்கொண்டு, (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள், ஆகவே அவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு. اتَّ‍‍خَ‍‍ذُ‌و‌ا‌ ‌أَيْمَانَهُمْ جُ‍‍نَّ‍‍ة‌ ً‌ فَ‍‍صَ‍‍دُّ‌و‌ا‌ عَ‍‌‍نْ سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ فَلَهُمْ عَذ‍َ‍‌ابٌ‌ مُهِينٌ
Lan Tughniya `Anhum 'Amwāluhum Wa Lā 'Awlāduhum Mina Allāhi Shay'āan ۚ 'Ūlā'ika 'Aşĥābu An-Nāri ۖ Hum Fīhā Khālidūna 58-17 அவர்களுடைய சொத்துக்களும், அவர்களுடைய மக்களும், அல்லாஹ் வி(திக்கும் வேதனையி)லிருந்து (காப்பாற்ற) உதவாது, அவர்கள் நரகவாதிகள், அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள். لَ‍‌‍نْ تُ‍‍غْ‍‍نِيَ عَ‍‌‍نْ‍‍هُمْ ‌أَمْوَ‌الُهُمْ ‌وَلاَ‌ ‌أَ‌وْلاَ‌دُهُمْ مِنَ ‌اللَّ‍‍هِ شَ‍‍يْ‍‍ئاً‌ ۚ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابُ ‌ال‍‍نّ‍‍َ‍ا‌ر‍ِ‍‌ ۖ هُمْ فِيهَا‌ خَ‍‍الِدُ‌ونَ
Yawma Yab`athuhumu Allāhu Jamī`āan Fayaĥlifūna Lahu Kamā Yaĥlifūna Lakum ۖ Wa Yaĥsabūna 'Annahum `Alá Shay'in ۚ 'Alā 'Innahum Humu Al-Kādhibūna 58-18 அவர்கள் அனைவரையும் அல்லாஹ் எழுப்பும் நாளில் அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்தது போல், அவனிடமும் சத்தியம் செய்வார்கள், அன்றியும், அவர்கள் (அதன் மூலம் தப்பித்துக் கொள்வதற்கு) ஏதோ ஒன்றின் மீது நிச்சயமாகத் தாங்கள் இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள், அறிந்து கொள்க: நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே! يَ‍‍وْمَ يَ‍‍بْ‍‍عَثُهُمُ ‌اللَّ‍‍هُ جَمِيعا‌‌ ً‌ فَيَحْلِف‍‍ُ‍ونَ لَ‍‍هُ كَمَا‌ يَحْلِف‍‍ُ‍ونَ لَكُمْ ۖ ‌وَيَحْسَب‍‍ُ‍ونَ ‌أَنَّ‍‍هُمْ عَلَى‌ شَ‍‍يْءٍ‌ ۚ ‌أَلاَ‌ ‌إِنَّ‍‍هُمْ هُمُ ‌الْكَا‌ذِبُونَ
Astaĥwadha `Alayhimu Ash-Shayţānu Fa'ansāhum Dhikra Allāhi ۚ 'Ūlā'ika Ĥizbu Ash-Shayţāni ۚ 'Alā 'Inna Ĥizba Ash-Shayţāni Humu Al-Khāsirūna 58-19 அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் - அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர், அறிந்து கொள்க: ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்! اسْتَحْوَ‌ذَ‌ عَلَيْهِمُ ‌ال‍‍شَّيْ‍‍طَ‍‍انُ فَأَ‌ن‍‍سَاهُمْ ‌ذِكْ‍رَ‌اللَّ‍‍هِ ۚ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ حِزْبُ ‌ال‍‍شَّيْ‍‍طَ‍‍انِ ۚ ‌أَلاَ‌ ‌إِنَّ حِزْبَ ‌ال‍‍شَّيْ‍‍طَ‍‍انِ هُمُ ‌الْ‍‍خَ‍‍اسِرُ‌ونَ
'Inna Al-Ladhīna Yuĥāddūna Allāha Wa Rasūlahu~ 'Ūlā'ika Fī Al-'Adhallīna 58-20 நிச்சமயாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்களோ, நிச்சயமாக அவர்களே மிகவும் தாழ்ந்தவர்கள். إِنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يُح‍‍َ‍ا‌دّ‍ُ‍‌ونَ ‌اللَّ‍‍هَ ‌وَ‌‍رَسُولَهُ~ُ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ فِي ‌الأَ‌ذَلِّينَ
Kataba Allāhu La'aghlibanna 'Anā Wa Rusulī ۚ 'Inna Allāha Qawīyun `Azīzun 58-21 "நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்" என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன், யாவரையும் மிகைத்தவன். كَتَبَ ‌اللَّ‍‍هُ لَأَ‍‍غْ‍‍لِبَ‍‍نَّ ‌أَنَا‌ ‌وَ‌رُسُلِ‍‍ي ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ قَ‍‍وِيٌّ عَزِيزٌ
Lā Tajidu Qawmāan Yu'uminūna Billāhi Wa Al-Yawmi Al-'Ākhiri Yuwāddūna Man Ĥādda Allāha Wa Rasūlahu Wa Law Kānū 'Ābā'ahum 'Aw 'Abnā'ahum 'Aw 'Ikhwānahum 'Aw `Ashīratahum ۚ 'Ūlā'ika Kataba Fī Qulūbihimu Al-'Īmāna Wa 'Ayyadahum Birūĥin Minhu ۖ Wa Yudkhiluhum Jannātin Tajrī Min Taĥtihā Al-'Anhāru Khālidīna Fīhā ۚ Rađiya Allāhu `Anhum Wa Rađū `Anhu ۚ 'Ūlā'ika Ĥizbu Allāhi ۚ 'Alā 'Inna Ĥizba Allāhi Humu Al-Mufliĥūna 58-22 அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள். لاَ‌ تَجِدُ‌ قَ‍‍وْما‌ ً‌ يُؤْمِن‍‍ُ‍ونَ بِ‍اللَّ‍‍هِ ‌وَ‌الْيَ‍‍وْمِ ‌الآ‍‍خِ‍‍رِ‌ يُو‍َ‍‌ا‌دّ‍ُ‍‌ونَ مَ‍‌‍نْ ح‍‍َ‍ا‌دَّ‌ ‌اللَّ‍‍هَ ‌وَ‌‍رَسُولَ‍‍هُ ‌وَلَوْ‌ كَانُ‍‍و‌ا‌ ‌آب‍‍َ‍ا‌ءَهُمْ ‌أَ‌وْ‌ ‌أَبْ‍‍ن‍‍َ‍ا‌ءَهُمْ ‌أَ‌وْ‌ ‌إِخْ‍‍وَ‌انَهُمْ ‌أَ‌وْ‌ عَشِي‍رَتَهُمْ ۚ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ كَتَبَ فِي قُ‍‍لُوبِهِمُ ‌الإِيم‍‍َ‍انَ ‌وَ‌أَيَّدَهُمْ بِر‍ُ‍‌وحٍ‌ مِ‍‌‍نْ‍‍هُ ۖ ‌وَيُ‍‍دْ‍‍خِ‍‍لُهُمْ جَ‍‍نّ‍‍َ‍ات‌‍ٍ‌ تَ‍‍جْ‍‍رِي مِ‍‌‍نْ تَحْتِهَا‌ ‌الأَ‌نْ‍‍ه‍‍َ‍ا‌رُ‌ خَ‍‍الِد‍ِ‍ي‍‍نَ فِيهَا‌ ۚ ‌‍رَضِ‍‍يَ ‌اللَّ‍‍هُ عَ‍‌‍نْ‍‍هُمْ ‌وَ‌‍رَضُ‍‍و‌ا‌ عَ‍‌‍نْ‍‍هُ ۚ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ حِزْبُ ‌اللَّ‍‍هِ ۚ ‌أَلاَ‌ ‌إِنَّ حِزْبَ ‌اللَّ‍‍هِ هُمُ ‌الْمُفْلِحُونَ
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah