37) Sūrat Aş-Şāffāt

Printed format

37) سُورَة الصَّافَّات

Wa Aş-Şāffāti Şaffāan 37-1 அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக, وَالصَّافَّاتِ صَفّا ً
Fālzzājirāti Zajan 37-2 பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக, فَالزَّاجِرَاتِ زَجْرا ً
Fālttāliyāti Dhikrāan 37-3 (நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக, فَالتَّالِيَاتِ ذِكْرا ً
'Inna 'Ilahakum Lawāĥidun 37-4 நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே. إِنَّ إِلَهَكُمْ لَوَاحِد ٌ
Rabbu As-Samāwāti Wa Al-'Arđi Wa Mā Baynahumā Wa Rabbu Al-Mashāriqi 37-5 வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்; கீழ்திசைகளின் இறைவன். رَبُّ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ
'Innā Zayyannā As-Samā'a Ad-Dunyā Bizīnatin Al-Kawākib 37-6 நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம். إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَة ٍ الْكَوَاكِب
Wa Ĥifžāan Min Kulli Shayţāninridin 37-7 (அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்). وَحِفْظا ً مِنْ كُلِّ شَيْطَان ٍ مَارِد ٍ
Lā Yassamma`ūna 'Ilá Al-Mala'i Al-'A`lá Wa Yuqdhafūna Min Kulli Jānibin 37-8 (அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள். لاَ يَسَّمَّعُونَ إِلَى الْمَلَإِ الأَعْلَى وَيُقْذَفُونَ مِنْ كُلِّ جَانِب ٍ
Duĥūrāan Wa Lahum `Adhābun Wa Aşibun 37-9 (அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்; அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு. دُحُورا ً وَلَهُمْ عَذَاب ٌ وَاصِب ٌ
'Illā Man Khaţifa Al-Khaţfata Fa'atba`ahu Shihābun Thāqibāun 37-10 (ஏதேனும் செய்தியை) இறைஞ்சிச் செல்ல முற்பட்டால், அப்பொழுது அவனைப் பிரகாச தீப்பந்தம் பின்தொடரும். إِلاَّ مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَأَتْبَعَه ُُ شِهَاب ٌ ثَاقِبا ٌ
Fāstaftihim 'Ahum 'Ashaddu Khalqāan 'Am Man Khalaqnā 'Innā Khalaqnāhum Min Ţīnin Lāzibin 37-11 ஆகவே, "படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம். فَاسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقاً أَمْ مَنْ خَلَقْنَا إِنَّا خَلَقْنَاهُمْ مِنْ طِين ٍ لاَزِب ٍ
Bal `Ajibta Wa Yaskharūna 37-12 (நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர். بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ
Wa 'Idhā Dhukkirū Lā Yadhkurūna 37-13 அன்றியும், அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள் நினைவிலிறுத்திக் கொள்வதில்லை. وَإِذَا ذُكِّرُوا لاَ يَذْكُرُونَ
Wa 'Idhā Ra'aw 'Āyatan Yastaskhirūna 37-14 அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக் கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர். وَإِذَا رَأَوْا آيَة ً يَسْتَسْخِرُونَ
Wa Qālū 'In Hādhā 'Illā Siĥrun Mubīnun 37-15 "இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் அவர்கள் கூறுகின்றனர். وَقَالُوا إِنْ هَذَا إِلاَّ سِحْر ٌ مُبِين ٌ
'A'idhā Mitnā Wa Kunnā Turābāan Wa `Ižāmāan 'A'innā Lamabthūna 37-16 "நாங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து) எழுப்பப்படுபவர்களா? (என்றும் கேட்கின்றனர்.) أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابا ً وَعِظَاماً أَئِنَّا لَمَبْعُوثُونَ
'Awa'ābā'uunā Al-'Awwalūna 37-17 "அவ்வாறே, முந்தைய நம் தந்தையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்? என்றும் கேட்கின்றனர்.) أَوَآبَاؤُنَا الأَوَّلُونَ
Qul Na`am Wa 'Antumkhirūna 37-18 "ஆம்! (உங்கள் செயல்களின் காரணமாக) நீங்கள் சிறுமையடைந்தவர்களா(கவும் எழுப்பப்படு)வீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும். قُلْ نَعَمْ وَأَنْتُمْ دَاخِرُونَ
Fa'innamā Hiya Zajratun Wāĥidatun Fa'idhā Hum Yanžurūna 37-19 ஒரே சப்தம் தான்! உடனே அவர்கள் (திடுக்கிட்டு எழுந்து) பார்ப்பார்கள். فَإِنَّمَا هِيَ زَجْرَة ٌ وَاحِدَة ٌ فَإِذَا هُمْ يَنظُرُونَ
Wa Qālū Yā Waylanā Hādhā Yawmu Ad-Dīni 37-20 (அவ்வேளை) "எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே" என்று அவர்கள் கூறுவர். وَقَالُوا يَاوَيْلَنَا هَذَا يَوْمُ الدِّينِ
dhā Yawmu Al-Faşli Al-Ladhī Kuntum Bihi Tukadhdhibūna 37-21 "நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டுக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்!" (என்று அவர்களுக்குக் கூறப்படும்.) هَذَا يَوْمُ الْفَصْلِ الَّذِي كُنتُمْ بِه ِِ تُكَذِّبُونَ
Aĥshurū Al-Ladhīna Žalamū Wa 'Azwājahum Wa Mā Kānū Ya`budūna 37-22 "அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள். احْشُرُوا الَّذِينَ ظَلَمُوا وَأَزْوَاجَهُمْ وَمَا كَانُوا يَعْبُدُونَ
Min Dūni Allāhi Fāhdūhum 'Ilá Şirāţi Al-Jaĥīmi 37-23 "அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை) பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள். مِنْ دُونِ اللَّهِ فَاهْدُوهُمْ إِلَى صِرَاطِ الْجَحِيمِ
Wa Qifūhum 'Innahum Mas'ūlūna 37-24 "இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்" (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்) وَقِفُوهُمْ إِنَّهُمْ مَسْئُولُونَ
Mā Lakum Lā Tanāşarūna 37-25 "உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?" (என்று கேட்கப்படும்). مَا لَكُمْ لاَ تَنَاصَرُونَ
Bal Humu Al-Yawma Mustaslimūna 37-26 ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள். بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُونَ
Wa 'Aqbala Ba`đuhum `Alá Ba`đin Yatasā'alūna 37-27 அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும் இருப்பார்கள். وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْض ٍ يَتَسَاءَلُونَ
Qālū 'Innakum Kuntum Ta'tūnanā `Ani Al-Yamīni 37-28 (தம் தலைவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்" என்று கூறுவார்கள். قَالُوا إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ الْيَمِينِ
Qālū Bal Lam Takūnū Mu'uminīna 37-29 ("அப்படியல்ல!) நீங்கள் தாம் முஃமின்களாக - நம்பிக்கை கொண்டோராய் - இருக்கவில்லை!" என்று அ(த்தலை)வர்கள் கூறுவர். قَالُوا بَلْ لَمْ تَكُونُوا مُؤْمِنِينَ
Wa Mā Kāna Lanā `Alaykum Min Sulţānin Bal Kuntum Qawmāan Ţāghīna 37-30 "அன்றியும் உங்கள் மீது எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்து பாவம் செய்யும் கூட்டத்தாராக இருந்தீர்கள்." وَمَا كَانَ لَنَا عَلَيْكُمْ مِنْ سُلْطَان ٍ بَلْ كُنتُمْ قَوْما ً طَاغِينَ
Faĥaqqa `Alaynā Qawlu Rabbinā 'Innā Ladhā'iqūna 37-31 "ஆகையால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது நிச்சயமாக நாம் (யாவரும் வேதனையைச்) சுவைப்பவர்கள் தாம்! فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَا إِنَّا لَذَائِقُونَ
Fa'aghwaynākum 'Innā Kunnā Ghāwīna 37-32 "(ஆம்) நாங்கள் உங்களை வழிகெடுத்தோம்; நிச்சயமாக நாங்களே வழிகெட்டுத்தான் இருந்தோம்." فَأَغْوَيْنَاكُمْ إِنَّا كُنَّا غَاوِينَ
Fa'innahum Yawma'idhin Al-`Adhābi Mushtarikūna 37-33 ஆகவே, அந்நாளில் நிச்சயமாக அவர்கள் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பார்கள். فَإِنَّهُمْ يَوْمَئِذ ٍ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ
'Innā Kadhālika Naf`alu Bil-Mujrimīna 37-34 குற்றவாளிகளை இவ்வாறு தான் நாம் நிச்சயமாக நடத்துவோம். إِنَّا كَذَلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ
'Innahum Kānū 'Idhā Qīla Lahum Lā 'Ilāha 'Illā Allāhu Yastakbirūna 37-35 "அல்லாஹ்வைத்தவிர நாயன் இல்லை" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர். إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لاَ إِلَهَ~َ إِلاَّ اللَّهُ يَسْتَكْبِرُونَ
Wa Yaqūlūna 'A'innā Latārikū 'Ālihatinā Lishā`irin Majnūnin 37-36 "ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?" என்றும் அவர்கள் கூறுகிறார்கள். وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوا آلِهَتِنَا لِشَاعِر ٍ مَجْنُون ٍ
Bal Jā'a Bil-Ĥaqqi Wa Şaddaqa Al-Mursalīna 37-37 அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார். بَلْ جَاءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِينَ
'Innakum Ladhā'iqū Al-`Adhābi Al-'Alīmi 37-38 (இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள் தாம். إِنَّكُمْ لَذَائِقُو الْعَذَابِ الأَلِيمِ
Wa Mā Tujzawna 'Illā Mā Kuntum Ta`malūna 37-39 ஆனால், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கன்றி (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள். وَمَا تُجْزَوْنَ إِلاَّ مَا كُنتُمْ تَعْمَلُونَ
'Illā `Ibāda Allāhi Al-Mukhlaşīna 37-40 அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)- إِلاَّ عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
'Ūlā'ika Lahum Rizqun Ma`lūmun 37-41 அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது. أُوْلَائِكَ لَهُمْ رِزْق ٌ مَعْلُوم ٌ
Fawākihu Wa Hum Mukramūna 37-42 கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்; فَوَاكِه ُُ وَهُمْ مُكْرَمُونَ
Fī Jannāti An-Na`īmi 37-43 இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் - فِي جَنَّاتِ النَّعِيمِ
`Alá Sururin Mutaqābilīna 37-44 ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்). عَلَى سُرُر ٍ مُتَقَابِلِينَ
Yuţāfu `Alayhim Bika'sin Min Ma`īnin 37-45 தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களசை; சுற்றி கொண்டுவரும். يُطَافُ عَلَيْهِمْ بِكَأْس ٍ مِنْ مَعِين ٍ
Bayđā'a Ladhdhatin Lilshshāribīna 37-46 (அது) மிக்க வெண்மையானது அருந்துவோருக்கு மதுரமானது. بَيْضَاءَ لَذَّة ٍ لِلشَّارِبِينَ
Lā Fīhā Ghawlun Wa Lā Hum `Anhā Yunzafūna 37-47 அதில் கெடுதியும் இராது அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர். لاَ فِيهَا غَوْل ٌ وَلاَ هُمْ عَنْهَا يُنزَفُونَ
Wa `Indahum Qāşirātu Aţ-Ţarfi `Īnun 37-48 இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள். وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ عِين ٌ
Ka'annahunna Bayđun Maknūnun 37-49 (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். كَأَنَّهُنَّ بَيْض ٌ مَكْنُون ٌ
Fa'aqbala Ba`đuhum `Alá Ba`đin Yatasā'alūna 37-50 (அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள். فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْض ٍ يَتَسَاءَلُونَ
Qāla Qā'ilun Minhum 'Innī Kāna Lī Qarīnun 37-51 அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார். قَالَ قَائِل ٌ مِنْهُمْ إِنِّي كَانَ لِي قَرِين ٌ
Yaqūlu 'A'innaka Lamina Al-Muşaddiqīna 37-52 (மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான். يَقُولُ أَئِنَّكَ لَمِنَ الْمُصَدِّقِينَ
'A'idhā Mitnā Wa Kunnā Turābāan Wa `Ižāmāan 'A'innā Lamadīnūna 37-53 "நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?" என்றும் கேட்டான். أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابا ً وَعِظَاماً أَئِنَّا لَمَدِينُونَ
Qāla Hal 'Antum Muţţali`ūna 37-54 (அவ்வாறு கூறியவனை) "நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?" என்றும் கூறுவார். قَالَ هَلْ أَنْتُمْ مُطَّلِعُونَ
Fāţţala`a Fara'āhu Fī Sawā'i Al-Jaĥīmi 37-55 அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார். فَاطَّلَعَ فَرَآهُ فِي سَوَاءِ الْجَحِيمِ
Qāla Ta-Allāhi 'In Kidta Laturdīni 37-56 (அவனிடம்) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே! قَالَ تَاللَّهِ إِنْ كِدْتَ لَتُرْدِينِ
Wa Lawlā Ni`matu Rabbī Lakuntu Mina Al-Muĥđarīna 37-57 "என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன். وَلَوْلاَ نِعْمَةُ رَبِّي لَكُنتُ مِنَ الْمُحْضَرِينَ
'Afamā Naĥnu Bimayyitīna 37-58 "(மற்றொருமுறையும்) நாம் இறந்து விடுவோமா? أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ
'Illā Mawtatanā Al-'Ūlá Wa Mā Naĥnu Bimu`adhdhabīna 37-59 "(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்" என்று கூறுவார். إِلاَّ مَوْتَتَنَا الأُولَى وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
'Inna Hādhā Lahuwa Al-Fawzu Al-`Ažīmu 37-60 நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும். إِنَّ هَذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيمُ
Limithli Hādhā Falya`mali Al-`Āmilūna 37-61 எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும். لِمِثْلِ هَذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ
'Adhalika Khayrun Nuzulāan 'Am Shajaratu Az-Zaqqūmi 37-62 அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) 'ஜக்கூம்' என்ற மரமா? أَذَلِكَ خَيْر ٌ نُزُلاً أَمْ شَجَرَةُ الزَّقُّومِ
'Innā Ja`alnāhā Fitnatan Lilžžālimīna 37-63 நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம். إِنَّا جَعَلْنَاهَا فِتْنَة ً لِلظَّالِمِينَ
'Innahā Shajaratun Takhruju Fī 'Aşli Al-Jaĥīmi 37-64 மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும். إِنَّهَا شَجَرَة ٌ تَخْرُجُ فِي أَصْلِ الْجَحِيمِ
Ţal`uhā Ka'annahu Ru'ūsu Ash-Shayāţīni 37-65 அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும். طَلْعُهَا كَأَنَّه ُُ رُءُوسُ الشَّيَاطِينِ
Fa'innahum La'ākilūna Minhā Famāli'ūna Minhā Al-Buţūna 37-66 நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள். فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
Thumma 'Inna Lahum `Alayhā Lashawbāan Min Ĥamīmin 37-67 பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும். ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبا ً مِنْ حَمِيم ٍ
Thumma 'Inna Marji`ahum La'ilá Al-Jaĥīmi 37-68 அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான். ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى الْجَحِيمِ
'Innahum 'Alfaw 'Ābā'ahum Đāllīna 37-69 நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள். إِنَّهُمْ أَلْفَوْا آبَاءَهُمْ ضَالِّينَ
Fahum `Alá 'Āthārihim Yuhra`ūna 37-70 ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள்மீதே இவர்களும் விரைந்தார்கள். فَهُمْ عَلَى آثَارِهِمْ يُهْرَعُونَ
Wa Laqad Đalla Qablahum 'Aktharu Al-'Awwalīna 37-71 இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர். وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ الأَوَّلِينَ
Wa Laqad 'Arsalnā Fīhim Mundhirīna 37-72 மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம். وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِمْ مُنذِرِينَ
nžur Kayfa Kāna `Āqibatu Al-Mundharīna 37-73 பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும். فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنذَرِينَ
'Illā `Ibāda Allāhi Al-Mukhlaşīna 37-74 அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களைத் தவிர. إِلاَّ عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
Wa Laqad Nādānā Nūĥun Falani`ma Al-Mujībūna 37-75 அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம். وَلَقَدْ نَادَانَا نُوح ٌ فَلَنِعْمَ الْمُجِيبُونَ
Wa Najjaynāhu Wa 'Ahlahu Mina Al-Karbi Al-`Ažīmi 37-76 ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம். وَنَجَّيْنَاه ُُ وَأَهْلَه ُُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ
Wa Ja`alnā Dhurrīyatahu Humu Al-Bāqīna 37-77 மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம். وَجَعَلْنَا ذُرِّيَّتَه ُُ هُمُ الْبَاقِينَ
Wa Taraknā `Alayhi Fī Al-'Ākhirīna 37-78 மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம். وَتَرَكْنَا عَلَيْهِ فِي الآخِرِينَ
Salāmun `Alá Nūĥin Al-`Ālamīna 37-79 "ஸலாமுன் அலாநூஹ்" - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக. سَلاَمٌ عَلَى نُوح ٍ فِي الْعَالَمِينَ
'Innā Kadhālika Naj Al-Muĥsinīna 37-80 இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்யமாக நாம் கூலி கொடுக்கிறோம். إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
'Innahu Min `Ibādinā Al-Mu'uminīna 37-81 நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர். إِنَّه ُُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
Thumma 'Aghraq Al-'Ākharīna 37-82 பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம். ثُمَّ أَغْرَقْنَا الآخَرِينَ
Wa 'Inna Min Shī`atihi La'ibrāhīma 37-83 நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர்தாம். وَإِنَّ مِنْ شِيعَتِه ِِ لَإِبْرَاهِيمَ
'Idh Jā'a Rabbahu Biqalbin Salīmin 37-84 அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக). إِذْ جَاءَ رَبَّه ُُ بِقَلْب ٍ سَلِيم ٍ
'Idh Qāla Li'abīhi Wa Qawmihi Mādhā Ta`budūna 37-85 அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி "நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது, إِذْ قَالَ لِأَبِيه ِِ وَقَوْمِه ِِ مَاذَا تَعْبُدُونَ
'A'ifkāan 'Ālihatan Dūna Allāhi Turīdūna 37-86 "அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?" أَئِفْكا ً آلِهَة ً دُونَ اللَّهِ تُرِيدُونَ
Famā Žannukum Birabbi Al-`Ālamīna 37-87 "அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?" (என்று கேட்டார்.) فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعَالَمِينَ
Fanažara Nažratan An-Nujūmi 37-88 பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார். فَنَظَرَ نَظْرَة ً فِي النُّجُومِ
Faqāla 'Innī Saqīmun 37-89 "நிச்சயமாக நாம் நோயாளியாக இருக்கிறேன்" என்றும் கூறினார். فَقَالَ إِنِّي سَقِيم ٌ
Fatawallaw `Anhu Mudbirīna 37-90 எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர். فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ
Farāgha 'Ilá 'Ālihatihim Faqāla 'Alā Ta'kulūna 37-91 அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று "(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?" என்று கூறினார். فَرَاغَ إِلَى آلِهَتِهِمْ فَقَالَ أَلاَ تَأْكُلُونَ
Mā Lakum Lā Tanţiqūna 37-92 "உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுĨ