Ţā-Sīn-Mīm  | 26-1 தா, ஸீம், மீம். | طَا-سِين-مِيم |
Tilka 'Āyātu Al-Kitābi Al-Mubīni  | 26-2 இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகவும். | تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ |
La`allaka Bākhi`un Nafsaka 'Allā Yakūnū Mu'uminīna  | 26-3 (நபியே!) அவர்கள் முஃமின்களாகாமல் இருப்பதற்காக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்! | لَعَلَّكَ بَاخِع ٌ نَفْسَكَ أَلاَّ يَكُونُوا مُؤْمِنِينَ |
'In Nasha' Nunazzil `Alayhim Mina As-Samā'i 'Āyatan Fažallat 'A`nāquhum Lahā Khāđi`īna  | 26-4 நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம். | إِنْ نَشَأْ نُنَزِّلْ عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ آيَة ً فَظَلَّتْ أَعْنَاقُهُمْ لَهَا خَاضِعِينَ |
Wa Mā Ya'tīhim Min Dhikrin Mina Ar-Raĥmāni Muĥdathin 'Illā Kānū `Anhu Mu`riđīna  | 26-5 இன்னும், அர்ரஹ்மானிடமிருந்து புதிய நினைவுறுத்தல் வரும்போதெல்லாம், அதனை அவர்கள் புறக்கணிக்காமலிருப்பதில்லை. | وَمَا يَأْتِيهِمْ مِنْ ذِكْر ٍ مِنَ الرَّحْمَنِ مُحْدَث ٍ إِلاَّ كَانُوا عَنْهُ مُعْرِضِينَ |
Faqad Kadhdhabū Fasaya'tīhim 'Anbā'u Mā Kānū Bihi Yastahzi'ūn  | 26-6 திடனாக அவர்கள் (இவ்வேதத்தையும்) பொய்ப்பிக்க முற்படுகிறார்கள்; எனினும், அவர்கள் எதனை பரிகசித்துக் கொண்டிருக்கிறர்களோ, அதன் (உண்மையான) செய்திகள் அவர்களிடம் சீக்கிரமே வந்து சேரும். | فَقَدْ كَذَّبُوا فَسَيَأْتِيهِمْ أَنْبَاءُ مَا كَانُوا بِه ِِ يَسْتَهْزِئُون |
'Awalam Yaraw 'Ilá Al-'Arđi Kam 'Anbatnā Fīhā Min Kulli Zawjin Karīmin  | 26-7 அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? - அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம். | أَوَلَمْ يَرَوْا إِلَى الأَرْضِ كَمْ أَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْج ٍ كَرِيم ٍ |
'Inna Fī Dhālika La'āyatan Wa Mā Kāna 'Aktharuhum Mu'uminīna  | 26-8 நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை. | إِنَّ فِي ذَلِكَ لَآيَة ً وَمَا كَانَ أَكْثَرُهُمْ مُؤْمِنِينَ |
Wa 'Inna Rabbaka Lahuwa Al-`Azīzu Ar-Raĥīmu  | 26-9 அன்றியும் (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் மிகைத்தவன்; மிக்க கிருபை உடையவன். | وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ |
Wa 'Idh Nādá Rabbuka Mūsá 'Ani A'ti Al-Qawma Až-Žālimīna  | 26-10 உம் இறைவன் மூஸாவிடம் "அநியாயக்கார சமூகத்திடம் செல்க" என்று கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக.) | وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَى أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ |
Qawma Fir`awna 'Alā Yattaqūna  | 26-11 "ஃபிர்அவ்னின் சமூத்தாரிடம்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டார்களா? | قَوْمَ فِرْعَوْنَ أَلاَ يَتَّقُونَ |
Qāla Rabbi 'Innī 'Akhāfu 'An Yukadhdhibūni  | 26-12 (இதற்கு அவர்) "என் இறைவா! அவர்கள் என்னை பொய்பிப்பதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்" என்று கூறினார். | قَالَ رَبِّ إِنِّي أَخَافُ أَنْ يُكَذِّبُونِ |
Wa Yađīqu Şadrī Wa Lā Yanţaliqu Lisānī Fa'arsil 'Ilá Hārūna  | 26-13 "என் நெஞ்சு நெருக்கடிக்குள்ளாகிவிடும். (தெளிவாய் பேசமுடியும் படி) என் நாவும் அசையாது ஆகவே (என்னுடன்) ஹாரூனையும் அனுப்புவாயாக! | وَيَضِيقُ صَدْرِي وَلاَ يَنْطَلِقُ لِسَانِي فَأَرْسِلْ إِلَى هَارُونَ |
Wa Lahum `Alayya Dhanbun Fa'akhāfu 'An Yaqtulūni  | 26-14 "மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்" (என்றும் கூறினார்). | وَلَهُمْ عَلَيَّ ذَنْب ٌ فَأَخَافُ أَنْ يَقْتُلُونِ |
Qāla Kallā Fādh/habā Bi'āyātinā 'Innā Ma`akum Mustami`ūna  | 26-15 (அதற்கு இறைவன்) அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளுடன் செல்லுங்கள் - நிச்சயமாக நாம் உங்களுடன் (யாவற்றையும்) செவியேற்போராக இருக்கின்றோம்" எனக் கூறினான். | قَالَ كَلاَّ فَاذْهَبَا بِآيَاتِنَا إِنَّا مَعَكُمْ مُسْتَمِعُونَ |
Fa'tiyā Fir`awna Faqūlā 'Innā Rasūlu Rabbi Al-`Ālamīna  | 26-16 ஆதலின் நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்; "நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள். | فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولاَ إِنَّا رَسُولُ رَبِّ الْعَالَمِينَ |
'An 'Arsil Ma`anā Banī 'Isrā'īla  | 26-17 "எங்களுடன் பனூ இஸ்ராயீல்களை அனுப்பிவிடு!" (எனவும் கூறுங்கள்.) | أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ |
Qāla 'Alam Nurabbika Fīnā Walīdāan Wa Labithta Fīnā Min `Umurika Sinīna  | 26-18 (ஃபிர்அவ்ன்) கூறினான்; நீர் குழந்தையாக இருந்தபோது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா? இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா? (எனக் கூறினான்.) | قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدا ً وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ |
Wa Fa`alta Fa`lataka Allatī Fa`alta Wa 'Anta Mina Al-Kāfirīna  | 26-19 "ஆகவே, நீர் செய்த (கூடாத கொலைச்) செயலையும் செய்துவிட்டீர்; மேலும், நீர் நன்றி மறந்தவராகவும் ஆகிவிட்டீர்" (என்றும் கூறினான்). | وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ |
Qāla Fa`altuhā 'Idhāan Wa 'Anā Mina Ađ-Đāllīn  | 26-20 (மூஸா) கூறினார்; "நான் தவறியவர்களில் (ஒருவனாக) இருந்த நிலையில் அதைச் செய்துவிட்டேன். | قَالَ فَعَلْتُهَا إِذا ً وَأَنَا مِنَ الضَّالِّين |
Fafarartu Minkum Lammā Khiftukum Fawahaba Lī Rabbī Ĥukmāan Wa Ja`alanī Mina Al-Mursalīna  | 26-21 "ஆகவே, நான் அப்போது உங்களைப் பற்றி பயந்தபோது, உங்களை விட்டு(த் தப்பி) ஓடினேன்; பிறகு என் இறைவன் எனக்கு ஞானத்தை அளித்து, (அவனுடைய) தூதர்களில் என்னை (ஒருவனாக) ஆக்கியிருக்கிறான். | فَفَرَرْتُ مِنْكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِي رَبِّي حُكْما ً وَجَعَلَنِي مِنَ الْمُرْسَلِينَ |
Wa Tilka Ni`matun Tamunnuhā `Alayya 'An `Abbadta Banī 'Isrā'īla  | 26-22 "பனூ இஸ்ராயீல்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது நீ எனக்குச் சொல்லிக் காண்பிக்கக் கூடிய பாக்கியமாகுமா?" | وَتِلْكَ نِعْمَة ٌ تَمُنُّهَا عَلَيَّ أَنْ عَبَّدْتَ بَنِي إِسْرَائِيلَ |
Qāla Fir`awnu Wa Mā Rabbu Al-`Ālamīna  | 26-23 அதற்கு ஃபிர்அவ்ன்; "அகிலத்தாருக்கு இறைவன் யார்?" என்று கேட்டான். | قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعَالَمِينَ |
Qāla Rabbu As-Samāwāti Wa Al-'Arđi Wa Mā Baynahumā 'In Kuntum Mūqinīna  | 26-24 அதற்கு (மூஸா) "நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)" என்று கூறினார். | قَالَ رَبُّ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَا بَيْنَهُمَا إنْ كُنتُمْ مُوقِنِينَ |
Qāla Liman Ĥawlahu 'Alā Tastami`ūna  | 26-25 தன்னை சுற்றியிருந்தவர்களை நோக்கி "நீங்கள் (இவர் சொல்வதைச்) செவிமடுக்கிறீர்கள் அல்லவா?" என்று (ஃபிர்அவ்ன்) கேட்டான். | قَالَ لِمَنْ حَوْلَهُ~ُ أَلاَ تَسْتَمِعُونَ |
Qāla Rabbukum Wa Rabbu 'Ābā'ikumu Al-'Awwalīna  | 26-26 (அப்பொழுது மூஸா) "உங்களுக்கும் இறைவன்; உங்கள் முன்னவர்களான மூதாதையருக்கும் (அவனே) இறைவன் ஆவான்" எனக் கூறினார். | قَالَ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الأَوَّلِينَ |
Qāla 'Inna Rasūlakumu Al-Ladhī 'Ursila 'Ilaykum Lamajnūnun  | 26-27 (அதற்கு ஃபிர்அவ்ன்;) "நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் (அவர்) ஒரு பைத்தியக்காரரே ஆவார்" எனக் கூறினான். | قَالَ إِنَّ رَسُولَكُمُ الَّذِي أُرْسِلَ إِلَيْكُمْ لَمَجْنُون ٌ |
Qāla Rabbu Al-Mashriqi Wa Al-Maghribi Wa Mā Baynahumā 'In Kuntum Ta`qilūna  | 26-28 (அதற்கு மூஸா) "நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின், அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்" எனக் கூறினார். | قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَا إِنْ كُنْتُمْ تَعْقِلُونَ |
Qāla La'ini Attakhadhta 'Ilahāan Ghayrī La'aj`alannaka Mina Al-Masjūnīna  | 26-29 (அதற்கு ஃபிர்அவ்ன்;) "நீர் என்னை அன்றி வேறு நாயனை ஏற்படுத்திக் கொள்வீராயின் நிச்சயமாக உம்மைச் சிறைப்பட்டோரில் ஒருவராக நான் ஆக்கிவிடுவேன்" எனக் கூறினான். | قَالَ لَئِنِ اتَّخَذْتَ إِلَهَاً غَيْرِي لَأَجْعَلَنَّكَ مِنَ الْمَسْجُونِينَ |
Qāla 'Awalaw Ji'tuka Bishay'in Mubīnin  | 26-30 (அதற்கு அவர்) "நான் உனக்குத் தெளிவான (அத்தாட்சிப்) பொருளை கொண்டு வந்தாலுமா?" எனக் கேட்டார். | قَالَ أَوَلَوْ جِئْتُكَ بِشَيْء ٍ مُبِين ٍ |
Qāla Fa'ti Bihi 'In Kunta Mina Aş-Şādiqīna  | 26-31 "நீர் உண்மையாளராக இருப்பின் அதை நீர் கொண்டு வாரும்" என (ஃபிர்அவ்ன்) பதில் கூறினான். | قَالَ فَأْتِ بِهِ~ِ إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ |
Fa'alqá `Aşāhu Fa'idhā Hiya Thu`bānun Mubīnun  | 26-32 ஆகவே அவர் தம் தடியைக் கீழே எறிந்தார்; அது தெளிவானதொரு மலைப்பாம்பாகி விட்டது. | فَأَلْقَى عَصَاه ُُ فَإِذَا هِيَ ثُعْبَان ٌ مُبِين ٌ |
Wa Naza`a Yadahu Fa'idhā Hiya Bayđā'u Lilnnāžirīna  | 26-33 இன்னும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார்; உடனே அது பார்ப்பவர்களுக்கு பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது. | وَنَزَعَ يَدَه ُُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ |
Qāla Lilmala'i Ĥawlahu 'Inna Hādhā Lasāĥirun `Alīmun  | 26-34 (ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ்ந்து நின்ற தலைவர்களை நோக்கி "இவர் நிச்சயமாக திறமை மிக்க சூனியக்காரரே!" என்று கூறினான். | قَالَ لِلْمَلَإِ حَوْلَهُ~ُ إِنَّ هَذَا لَسَاحِرٌ عَلِيم ٌ |
Yurīdu 'An Yukhrijakum Min 'Arđikum Bisiĥrihi Famādhā Ta'murūna  | 26-35 "இவர் தம் சூனியத்தைக் கொண்டு உங்களை உங்கள் நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே இதைப் பற்றி நீங்கள் கூறும் யோசனை என்ன?" (என்று கேட்டான்.) | يُرِيدُ أَنْ يُخْرِجَكُمْ مِنْ أَرْضِكُمْ بِسِحْرِه ِِ فَمَاذَا تَأْمُرُونَ |
Qālū 'Arjihi Wa 'Akhāhu Wa Ab`ath Fī Al-Madā'ini Ĥāshirīna  | 26-36 அதற்கவர்கள் "அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக- | قَالُوا أَرْجِه ِِ وَأَخَاه ُُ وَابْعَثْ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ |
Ya'tūka Bikulli Saĥĥārin `Alīmin  | 26-37 (அவர்கள் சென்று) சூனியத்தில் மகா வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்" என்று கூறினார்கள். | يَأْتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيم ٍ |
Fajumi`a As-Saĥaratu Limīqāti Yawmin Ma`lūmin  | 26-38 சூனியக்காரர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேளையில் ஒன்று திரட்டப்பட்டார்கள். | فَجُمِعَ السَّحَرَةُ لِمِيقَاتِ يَوْم ٍ مَعْلُوم ٍ |
Wa Qīla Lilnnāsi Hal 'Antum Mujtami`ūna  | 26-39 இன்னும் மக்களிடம் "(குறித்த நேரத்தில்) நீங்கள் எல்லோரும் வந்து கூடுபவர்களா?" என்று கேட்கப்பட்டது. | وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنْتُمْ مُجْتَمِعُونَ |
La`allanā Nattabi`u As-Saĥarata 'In Kānū Humu Al-Ghālibīna  | 26-40 ஏனென்றால், சூனியக்காரர்கள் வெற்றி அடைந்தால், நாம் அவர்களைப் பின் பற்றிக் கூடும் (என்றும் கூறப்பட்டது). | لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَةَ إِنْ كَانُوا هُمُ الْغَالِبِينَ |
Falammā Jā'a As-Saĥaratu Qālū Lifir`awna 'A'inna Lanā La'ajrāan 'In Kunnā Naĥnu Al-Ghālibīna  | 26-41 ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, "திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லலா?" என்று கேட்டார்கள். | فَلَمَّا جَاءَ السَّحَرَةُ قَالُوا لِفِرْعَوْنَ أَئِنَّ لَنَا لَأَجْرا ً إِنْ كُنَّا نَحْنُ الْغَالِبِينَ |
Qāla Na`am Wa 'Innakum 'Idhāan Lamina Al-Muqarrabīna  | 26-42 "ஆம்! (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்) இன்னும் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்" என்று அவன் கூறினான். | قَالَ نَعَمْ وَإِنَّكُمْ إِذا ً لَمِنَ الْمُقَرَّبِينَ |
Qāla Lahum Mūsá 'Alqū Mā 'Antum Mulqūna  | 26-43 மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்" என்று கூறினார். | قَالَ لَهُمْ مُوسَى أَلْقُوا مَا أَنْتُمْ مُلْقُونَ |
Fa'alqaw Ĥibālahum Wa `Işīyahum Wa Qālū Bi`izzati Fir`awna 'Innā Lanaĥnu Al-Ghālibūna  | 26-44 ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்" என்று கூறினார்கள். | فَأَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوا بِعِزَّةِ فِرْعَوْنَ إِنَّا لَنَحْنُ الْغَالِبُونَ |
Fa'alqá Mūsá `Aşāhu Fa'idhā Hiya Talqafu Mā Ya'fikūna  | 26-45 பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது. | فَأَلْقَى مُوسَى عَصَاه ُُ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ |
Fa'ulqiya As-Saĥaratu Sājidīna  | 26-46 (இதைப்பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். | فَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ |
Qālū 'Āmannā Birabbi Al-`Ālamīna  | 26-47 அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் ஈமான் கொண்டோம். | قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ |
Rabbi Mūsá Wa Hārūna  | 26-48 "அவனே, மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்.' என்று கூறினர். | رَبِّ مُوسَى وَهَارُونَ |
Qāla 'Āmantum Lahu Qabla 'An 'Ādhana Lakum 'Innahu Lakabīrukumu Al-Ladhī `Allamakumu As-Siĥra Falasawfa Ta`lamūna La'uqaţţi`anna 'Aydiyakum Wa 'Arjulakum Min Khilāfin Wa La'uşallibannakum 'Ajma`īna  | 26-49 (அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவரிடம் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இவர் உங்களைவிடப் பெரியவராக அவர் இருக்கிறார் ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் (இதன் விளைவைத்) தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறு கை, மாறு கால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் எனக் கூறினான். | قَالَ آمَنْتُمْ لَه ُُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّه ُُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلاَف ٍ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ |
Qālū Lā Đayra 'Innā 'Ilá Rabbinā Munqalibūna  | 26-50 "(அவ்வாறாயின் அதனால் எங்களுக்கு) எந்தக் கெடுதியுமில்லை நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தாம் திரும்பிச் செல்வோம்" எனக் கூறினார்கள். | قَالُوا لاَ ضَيْرَ إِنَّا إِلَى رَبِّنَا مُنْقَلِبُونَ |
'Innā Naţma`u 'An Yaghfira Lanā Rabbunā Khaţāyānā 'An Kunnā 'Awwala Al-Mu'uminīna  | 26-51 "(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்" என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் (என்றும் கூறினார்கள்). | إِنَّا نَطْمَعُ أَنْ يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَايَانَا أَنْ كُنَّا أَوَّلَ الْمُؤْمِنِينَ |
Wa 'Awĥaynā 'Ilá Mūsá 'An 'Asri Bi`ibādī 'Innakum Muttaba`ūna  | 26-52 மேலும், "நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்" என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். | وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَسْرِ بِعِبَادِي إِنَّكُمْ مُتَّبَعُونَ |
Fa'arsala Fir`awnu Fī Al-Madā'ini Ĥāshirīna  | 26-53 (அவ்வாறு அவர்கள் சென்றதும்) ஃபிர்அவ்ன் (ஆட்களைத்) திரட்டுபவர்களைப் பட்டணங்களுக்கு அனுப்பி வைத்தான். | فَأَرْسَلَ فِرْعَوْنُ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ |
'Inna Hā'uulā' Lashirdhimatun Qalīlūna  | 26-54 "நிச்சயமாக இவர்கள் மிகவும் சொற்பத் தொகையினர் தான். | إِنَّ هَاؤُلاَء لَشِرْذِمَة ٌ قَلِيلُونَ |
Wa 'Innahum Lanā Laghā'ižūna  | 26-55 "நிச்சயமாக இவர்கள் நம்மை(ப் பெருங்) கோபத்திற்குள்ளாக்கி விட்டனர். | وَإِنَّهُمْ لَنَا لَغَائِظُونَ |
Wa 'Innā Lajamī`un Ĥādhirūna  | 26-56 "நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம்." | وَإِنَّا لَجَمِيعٌ حَاذِرُونَ |
Fa'akhrajnāhum Min Jannātin Wa `Uyūnin  | 26-57 அப்போது நாம், அவர்களைத் தோட்டங்களை விட்டும், நீரூற்றுக்களை விட்டும் வெளியேற்றி விட்டோம். | فَأَخْرَجْنَاهُمْ مِنْ جَنَّات ٍ وَعُيُون ٍ |
Wa Kunūzin Wa Maqāmin Karīmin  | 26-58 இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களை விட்டும், கண்ணியமான வீடுகளை விட்டும் (அவர்களை வெளியேற்றினோம்). | وَكُنُوز ٍ وَمَقَام ٍ كَرِيم ٍ |
Kadhālika Wa 'Awrathnāhā Banī 'Isrā'īla  | 26-59 அவ்வாறு தான் (அவர்களை நடத்தினோம்) அத்துடன் பனூ இஸ்ராயீல்களை அவற்றுக்கு வாரிசுகளாகவும் நாம் ஆக்கினோம். | كَذَلِكَ وَأَوْرَثْنَاهَا بَنِي إِسْرَائِيلَ |
Fa'atba`ūhum Mushriqīna  | 26-60 பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள். | فَأَتْبَعُوهُمْ مُشْرِقِينَ |
Falammā Tarā'á Al-Jam`āni Qāla 'Aşĥābu Mūsá 'Innā Lamudrakūna  | 26-61 இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது "நிச்சயமாக நாம் பிடிபட்டோம்" என்று மூஸாவின் தோழர்கள் கூறினர். | فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ |
Qāla Kallā 'Inna Ma`iya Rabbī Sayahdīni  | 26-62 அதற்கு (மூஸா), "ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்" என்று கூறினார்;. | قَالَ كَلاَّ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ |
Fa'awĥaynā 'Ilá Mūsá 'Ani Ađrib Bi`aşāka Al-Baĥra Fānfalaqa Fakāna Kullu Firqin Kālţţawdi Al-`Ažīmi  | 26-63 உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்" என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது. | فَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنِ اضْرِبْ بِعَصَاكَ الْبَحْرَ فَانفَلَقَ فَكَانَ كُلُّ فِرْق ٍ كَالطَّوْدِ الْعَظِيمِ |
Wa 'Azlafnā Thamma Al-'Ākharīna  | 26-64 (பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம். | وَأَزْلَفْنَا ثَمَّ الآخَرِينَ |
Wa 'Anjaynā Mūsá Wa Man Ma`ahu 'Ajma`īna  | 26-65 மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். | وَأَنْجَيْنَا مُوسَى وَمَنْ مَعَهُ~ُ أَجْمَعِينَ |
Thumma 'Aghraqnā Al-'Ākharīna  | 26-66 பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம். | ثُمَّ أَغْرَقْنَا الآخَرِينَ |
'Inna Fī Dhālika La'āyatan Wa Mā Kāna 'Aktharuhum Mu'uminīna  | 26-67 நிச்சயமாக இதிலே அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை. | إِنَّ فِي ذَلِكَ لَآيَة ً وَمَا كَانَ أَكْثَرُهُمْ مُؤْمِنِينَ |
Wa 'Inna Rabbaka Lahuwa Al-`Azīzu Ar-Raĥīmu  | 26-68 (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைத்தவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான். | وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ |
Wa Atlu `Alayhim Naba'a 'Ibrāhīma  | 26-69 இன்னும், நீர் இவர்களுக்கு இப்றாஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக! | وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ |
'Idh Qāla Li'abīhi Wa Qawmihi Mā Ta`budūna  | 26-70 அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி "நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?" என்று கேட்டபோது, | إِذْ قَالَ لِأَبِيه ِِ وَقَوْمِه ِِ مَا تَعْبُدُونَ |
Qālū Na`budu 'Aşnāmāan Fanažallu Lahā `Ākifīna  | 26-71 அவர்கள்; "நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்" என்று கூறினார்கள். | قَالُوا نَعْبُدُ أَصْنَاما ً فَنَظَلُّ لَهَا عَاكِفِينَ |
Qāla Hal Yasma`ūnakum 'Idh Tad`ūna  | 26-72 (அதற்கு இப்றாஹீம்) கூறினார் "நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா? | قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ |
'Aw Yanfa`ūnakum 'Aw Yađurrūna  | 26-73 "அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா அல்லது தீமை செய்கின்றனவா? (எனவும் கேட்டார்) | أَوْ يَنْفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ |
Qālū Bal Wajadnā 'Ābā'anā Kadhālika Yaf`alūna  | 26-74 (அப்போது அவர்கள்) "இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்" என்று கூறினார்கள். | قَالُوا بَلْ وَجَدْنَا آبَاءَنَا كَذَلِكَ يَفْعَلُونَ |
Qāla 'Afara'aytum Mā Kuntum Ta`budūna  | 26-75 அவ்வாறாயின், "நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?" என்று கூறினார். | قَالَ أَفَرَأَيْتُمْ مَا كُنْتُمْ تَعْبُدُونَ |
'Antum Wa 'Ābā'uukumu Al-'Aqdamūna  | 26-76 "நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்)." | أَنْتُمْ وَآبَاؤُكُمُ الأَقْدَمُونَ |
Fa'innahum `Adūwun Lī 'Illā Rabba Al-`Ālamīna  | 26-77 "நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்)." | فَإِنَّهُمْ عَدُوّ ٌ لِي إِلاَّ رَبَّ الْعَالَمِينَ |
| Al-Ladhī Khalaqanī Fahuwa Yahd |